ஊடகத்துறையில் பத்திரிக்கையாளராக பெண்கள் அதிகாரம் பெற்றதன் தாக்கம் மற்றும் சவால்கள்

ஆதிகாலம் முதலே பெண்களுக்கான முக்கியத்தும் குறித்து வரலாற்றில் பல்வேறு இடங்களில் பேசப்பட்டு வருகின்றன.  தற்போது, 21ஆம் நூற்றாண்டில் பெண்களுக்கு அதிகாரமளித்தல் ஒரு முக்கிய பிரச்சினையாக மாறியுள்ளது. மேலும், நவீன யுகத்தில் உள்ள தற்போதைய பெண்கள் பல்வேறு துறைகள் மற்றும் தொழில்களில் ஆண்களுக்கு இணையாக பல்வேறு சாதனைகளை புரிந்து சமத்துவத்தை நாட்டுகின்றனர். கடந்த சில ஆண்டுகளில், பத்திரிகை துறையில் பெண்களின் எண்ணிக்கை உலகம் முழுவதும் வியத்தகு அளவில் வளர்ந்துள்ளது. இருந்த போதிலும், பெண் ஊடகவியலாளர்கள் முக்கியமான நிலையை அடையவில்லை மற்றும் புதிய ஊடக நிறுவனங்களின் உயர்மட்டத்தில் சிறுபான்மையினராகவே இருக்கிறார்கள். மலேசியாவில் பெண் பத்திரிகையாளர்கள் எதிர்கொள்ளும் சவால்களைப் புரிந்து கொள்வதில் கவனம் செலுத்துகிறது, Selvi Narayanan, et. al., (2022) அவர்களின் ஆய்வுக் கட்டுரை. இந்த ஆய்வில், ஊடகத்துறையில் பெண்களுக்கு அதிகாரமளித்தல் பற்றிய பெண்களின் கருத்துக்களை சேகரிக்க முடியும் என்றும், அவர்களுக்கு அதிகாரம் அளிக்கும் பல்வேறு வழிகள் என்னவென்றும் ஆய்வுகள், நேர்காணல்கள் மற்றும் இரண்டாம் நிலை தரவுகள் மூலம் தகவல்கள் சேகரிக்கப்பட்டு, சமூக அறிவியலுக்கான புள்ளியியல் தொகுப்பைப் (SPSS-Statistical Package for Social Sciences) பயன்படுத்தி பகுப்பாய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வு மலேசியாவில் பெண் பத்திரிகையாளர்களின் திருப்தியின் நிலை மற்றும் உணர்வையும் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களையும் கண்டறிவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஊடகத்துறையில் பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்கான சில வழிகளை முன்மொழிய முயற்சித்துள்ளது.

References:

  • Narayanan, S. Conceptual Paper: The Impact And Challenges Of Women Empowerment As Journalist In Media Industry, Malaysia.
  • Nazuri, N. S., Rosnon, M. R., Ahmad, N., Suhaimi, S. S. A., Sharifuddin, J., & Wijekoon, R. (2022). Vindication of Linking Social Capital Capacity to Urban Agriculture: A Paradigm of Participation Based on Social Empowerment in Klang Valley, Malaysia. Sustainability14(3), 1509.
  • Tye, M., Leong, C., Tan, F., Tan, B., & Khoo, Y. H. (2018). Social media for empowerment in social movements: the case of Malaysia’s grassroots activism. Communications of the Association for Information Systems42(1), 15.
  • Abdul Hamid, N., Ishak, M. S., & Maharan, N. G. (2015). Empowering citizen media through investigative journalism in Malaysia. Jurnal Komunikasi= Malaysian Journal of Communication31(2), 631-647.
  • Wilson, T., Hamzah, A., & Khattab, U. (2003). The ‘cultural technology of clicking’in the hypertext era: Electronic journalism reception in Malaysia. New Media & Society5(4), 523-545.

Leave a Reply

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com