இலங்கையின் சிறுபான்மையினரின் அச்சம் மற்றும் இனரீதியான பெரும்பான்மையினரின் அரசியல் நடத்தை

ஐக்கிய நாடுகள் மனித மேம்பாட்டு அறிக்கை (UNHDR-United Nations Human Development Report) பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் உரிமைகளானது, ஒருங்கிணைந்தவை மற்றும் பிரிக்க முடியாதவை என குறிப்பிடுகின்றது. எந்தவொரு சமூக பாகுபாடுமின்றி, பாலின அடிப்படையிலான பாகுபாட்டை ஒழித்தல் அல்லது பாலினத்தை கருத்தில் கொள்ளாமல் சமூக செயல்முறையின் ஒவ்வொரு பிரிவிலும் பெண்களின் முழு மற்றும் சம பங்களிப்பை இது மேலும் எடுத்துக்காட்டுகிறது. ஆனால்,பெரும்பான்மை சமூகங்கள் இந்த சட்ட கட்டமைப்புகளை தங்கள் அரசியல், சமூக மற்றும் சந்தை சார்ந்த நலன்களை நிவர்த்தி செய்ய மேற்கண்டவற்றை பின்பற்றாமல் கைவிடுகின்றன. இந்த நடவடிக்கைகள் அரசியல், சமூக மற்றும் கட்டமைப்புகளால் இயக்கப்படுகின்றன. அவை, தாராளவாத ஜனநாயக உலகில் உள்ள பெரும்பான்மை சமூகங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

சுதந்திரத்திற்கு பிந்தைய சிங்கள பெரும்பான்மை அரசு காரணமாக, இலங்கையில் மலையக தேயிலைத் தோட்டங்களில் உள்ள தமிழ் பெண்கள் கட்டமைப்பு வன்முறைக்கு உட்படுத்தப்பட்டனர். இனவழி வன்முறை நேரடியாக மனித பாதுகாப்பு, உயிர்வாழ்வு மற்றும் மலையக தமிழ் பெண் தொழிலாளர் சக்தியின் தனிப்பட்ட உரிமைகளை சிக்கலாக்குகிறது. இந்த ஆய்வானது, தமிழ் பெண் தோட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பற்றி விவாதிக்கிறது, முக்கியமாக இன மைய சிங்கள பெரும்பான்மை சமூகத்தின் கீழ் பெண் இனப்பெருக்க உரிமைகளின் பாதுகாப்பு நெருக்கடியை மையமாகக் கொண்டுள்ளது.

References:

  • Senanayake, H. (2021). Fear of Small Numbers and Political Behaviour of Ethnocentric Majority of Sri Lanka: Undeclared War against Upcountry Tamil Females. Open Political Science4(1), 120-125.
  • Philips, A. (2021). Tea and solidarity: Tamil women and work in postwar Sri Lanka: by Mythri Jegathesan, 2019, Seattle, University of Washington Press, 261 pp., US30.00(pbk); US95. 00 (hardcover) ISBN 9780295745671 (pbk); ISBN 9780295745657 (hardcover).
  • Thiranagama, S. (2021). FEMALE MILITANCY. Routledge Handbook of Gender in South Asia.
  • Sanmuhanathan, N. (2020). Tamil Women in the Home Away from Home: The Impact of War Trauma on Psychological Wellbeing. In A Sense of Viidu (pp. 77-93). Palgrave Pivot, Singapore.
  • Kurian, R. (2020). Tamil women on Sri Lankan plantations: Labour control and patriarchy. In Women plantation workers (pp. 67-87). Routledge.

Leave a Reply

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com