ராஜாதி ராஜா
இன்றைய நாளில் நெஹேமியாவின் இன்னொரு ஜெபத்தை ஏறெடுக்க இருக்கிறோம். நெஹேமியாவின் புஸ்தகம் முதலாம் அதிகாரம் பதினொராவது வசனத்திலே, ஆண்டவரே! உமது அடியானின் ஜெபத்தையும் உமது நாமத்திற்கு பயப்பட வேண்டும் என்று விரும்புகிற உமது அடியாரின் ஜெபத்தையும் உமது செவிகள் கவனித்து இருப்பதாக! இன்றைக்கு உமது அடியாருக்கு காரியத்தை கையீடு வரப்பண்ணி இந்த மனுஷனுக்கு முன்பாக எனக்கு இரக்கம் கிடைக்க பண்ணியருளும் என்று சொல்லி மன்றாடி ஜெபிக்கிறான்.
சிரியாவிலிருந்து சிறைபிடிக்கப்பட்டு பாபிலோனுக்கு சென்ற மக்களில் நெஹேமியாவும் ஒருவன். அவனுக்கு அங்கே ராஜ அரண்மனையிலே பானபாத்திகாரனாக பணியாற்றக்கூடிய ஒரு நல்ல உத்தியோகம் கிடைக்கிறது. இந்த உத்தியோகத்தினாலே அவன் மகிழ்ந்து போகவில்லை அல்லது செழுமையினாலே குலத்தையோ, இனத்தையோ, ஜனங்களையோ மறந்துவிடவில்லை. அவன் கர்த்தரை நோக்கி பார்க்கிறான். எரிசலேமிலே மீதியாய் இருக்கிறதான மக்கள் யூத தேசத்திலே சிறையிறுப்புக்கு தப்பி இருக்கிறதனாலே வாழ்வாதாரத்தை நினைத்து பார்க்கிறான். அவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்று சொல்கிற ஒரு இரக்கம் நெஹேமியாவுக்கு உண்டாகிறது. அங்கே இருந்து வந்தவர்கள் மூலமாக கேள்விப்படுகிறான்.
எரிசலேமின் அலங்கம் கிடைக்கப்பெற்றும் அந்த வாசல்களெல்லாம் சுட்டெரிக்கப்பட்டும் அது மண்மேடாக்கப்பட்டும் இருக்கிறதை கேள்விப்பட்டு பாபிலோன் ராஜாவினிடத்திலே ஒரு இரக்கத்தை பெறுவதற்காக அவன் மன்றாட விரும்புகின்றான். ராஜாவினிடத்திலே போய் தன்னுடைய காரியத்தை சொல்வதற்கு பதிலாக பரலோகத்திலே இருக்கிற கர்த்தரிடத்திலே மன்றாடி ஜெபிக்கின்றான். தன் வணக்கத்தை சொல்கிறான். எம் ஜெபத்தை கேட்டருளும். இந்த மனுஷக்கு முன்பாக என் காரியத்தை கைகூடி வர பண்ணும். இரக்கம் கிடைக்க பண்ணும் என்று ஜெபிக்கிறதை நாம் பார்க்கிறோம். அப்போ ராஜா பெரியவனல்ல! ராஜாதி ராஜாவாகிய ஜீவனுள்ள ஆண்டவரே பெரியவர். அவர் மனிதருடைய மனங்களை மாற்றக்கூடியவர் என்று சொல்லி நம்பி இந்த காரியத்தை நெஹேமியா ஆண்டவருடைய சமூகத்திலே சொல்லி மன்றாடுகிறான்.
கர்த்தருடைய பிள்ளைகளே! உம்முடைய பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும் நமக்கு மேலாக இருக்கிற அதிகாரிகள் உறவினர்களோ தெரிந்தவர்களோ யாராக இருந்தாலும் அவர்களிடத்திலே கேட்பதற்கு முன்பாக நம் பிரச்சனைகளை நாம் ஆண்டவரிடத்திலே சொல்லுவோம். கர்த்தரிடத்திலே கொண்டு போவோம். கர்த்தர் கேட்பார். தடைகளை அகற்றுவார். கைகூடி வரப் பண்ணுவார். கிருபையினால் தாங்குவார். கர்த்தாவே! இந்த ஜெபத்தை ஏறெடுக்கிற உம்முடைய பிள்ளைகளாகிய எங்களுக்கு நன்மை செய்வீராக! தடைகளை அகற்றி போடுவீராக! மனிதருடைய கண்களிலே தயை கிடைக்க பண்ணுவீராக.
வலிமையுள்ள தேவன் எங்களுக்காக பெரிய காரியங்களை செய்யும். இந்த ஜெபத்தை தியானிக்கிற ஒவ்வொருவருக்கும் வேண்டியவைகளை கொடுத்து அவர்களை சந்தோஷப்படுத்துவீராக. ஏசு கிறிஸ்து மூலம் ஜெபிக்கிறோம் நல்ல பிதாவே. ஆமென். ஆமென்.
ஆசிரியர்: போதகர் தேவசகாயம்