பாரம்

இன்றைய நாளில் தாவீதின் ஜெபத்தை ஏறெடுக்கப் போகிறோம். சங்கீதம் முப்பத்தியொன்று ஒன்பதில் எனக்கு இரங்கும் கர்த்தாவே. நான் நெருக்கப்படுகிறேன். துக்கத்தினால் என் கண்ணும் என் ஆத்மாவும் என் வயிறும் கூட கருகிப்போயிற்று என்ற மிகுந்த பாரத்தோடு துக்கத்தோடு தாவீது இந்த ஜெபத்தை ஏறெடுக்கிறான்.

எனக்கு இரங்கும், மனிதர்கள் என்னை நிந்தித்து அவமானப்படுத்தி பலவிதமான இம்சைகளினால் என்னை துக்கப்படுத்த ஆயத்தப்பட்டு கொண்டு இருக்கிறார்கள். நீர் மனதிறங்குவீராக. நான் நெருக்கப்படுகிறேன், சத்ருக்களால் நெருக்கப்படுகிறேன், பொல்லாதவர்களால் நய வஞ்சகர்களால் தீயவர்களால் கர்த்தாவே எங்களைத் துக்கப்படுத்தி கொண்டிருக்கிற ஒவ்வொரு மனிதருடைய கிரியைகளிலிருந்தும் துர் கிரியைகளிலிருந்தும் என்னை விடுவிப்பீராக.

என் கண்ணும், என் ஆத்மாவும், என் வயிறும்கூட கருகிப்போயிற்று. இது ஒரு பெரிய வேதனை கர்த்தாவே. சோர்ந்து போன நிலை கண்ணும், ஆத்மாவும், வயிறும் முழு சரீரமும் அனுபவித்த துக்கங்களால் வேதனைகளால் கருகிப்போயிற்று. நம்பிக்கை இழந்து போன ஒரு நிலை. ஆண்டவரே! எனக்கு நீர் இரக்கம் பாராட்டுவீராக. நான் உனக்கு முன்னே போய் கோணலானவைகளை செவ்வையாக்குவேன் என்று சொன்னீரே.

சத்ருக்கள் உனக்கு எதிராய் ஒரு வழியாய் வருவார்கள் எழு வழியாய் ஓடிப்போவார்கள் என்று சொன்னீரே. இப்போது என்னை துக்கப்படுத்திக் கொண்டிருக்கிறவர்களுடைய கைகளிலிருந்து என்னை விடுவிப்பீராக. ஏழ்மையிலிருந்து விடுதலை தந்தருளுவீராக. பொல்லாதவர்கள் என்னை சூழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய எல்லா சதி திட்டங்களையும் நீர் முறியடித்து எனக்கு வழி கொடுப்பீராக. உம்முடைய பலத்த கரத்திற்குள்ளாக என்னை வைத்துக்கொள்வீராக.

ஆண்டவரே! உம்மை நோக்கி நாங்கள் கெஞ்சி நிற்கிறோம். இதே போன்று துக்கத்தோடு பாரத்தோடு கண்ணீரோடு ஒவ்வொரு சகோதரனுக்கும் சகோதரிக்கும் நீர் உதவி செய்வீராக. நான் உங்களை திக்கற்றவர்களாக விடேன் என்று சொன்ன கர்த்தர் பிள்ளைகளுக்கு உதவி செய்வீராக. நானே தேற்றுவேன், திடப்படுத்துவேன், தைரியப்படுத்துவேன். நான் உனக்கு பலத்த அரணாக கேடயமாக இருப்பேன் என்று சொன்ன கர்த்தர் எங்களை சட்டைகளின் நிழலிலே வைத்து காத்து கொள்ளும். உம்முடைய நிழல் எங்களுக்கு போதுமானதாக இருக்கட்டும்.

நம்பிக்கை இழந்து போன எங்களுடைய வாழ்க்கையிலே சந்தோஷத்தை தந்தருளுவீராக. எங்களுடைய கண்களிலே ஒரு பிரகாசத்தை தாரும். ஒரு பெரிய விடிவைக் கொடுத்து எங்களை சந்தோஷப்படுத்தும். உன் துக்க நாட்கள் முடிந்து போகும் என்று சொன்ன தேவன் எங்களுக்கு போதுமானவராக இருப்பீராக. நீரே எங்களுக்கு பெரிய காரியங்களை செய்யும் ஏசு கிறிஸ்து மூலம் ஜெபிக்கிறோம் நல்ல பிதாவே. ஆமென். ஆமென்.

ஆசிரியர்: போதகர் தேவசகாயம்

Leave a Reply

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com