நஷ்டம்
இன்றைய நாளில் தாவீதின் ஜெபத்தை தியானிக்க போகிறோம். சங்கீதம் முப்பதைந்து பதினேழில், ஆண்டவரே எதுவரைக்கும் இதைப் பார்த்துக்கொண்டிருப்பீர் என் ஆத்மாவை அழிக்கும், எனக்கு அருமையானதை சிங்கக்குட்டிகளுக்கும் தப்புவியும். இது தாவீதினுடைய இன்னொரு வித்தியாசமான ஜெபமாய் இருக்கிறது.
ஆண்டவரே! எதுவரைக்கும் இதைப் பார்த்துக்கொண்டிருப்பீர் உம்முடைய அடியானாகிய எனக்கு ஏற்பட்டிருக்கிற பிரச்சனைகளை நீர் அறிவீர். சத்ருக்கள் என்னை சூழ்ந்துக்கொண்டிருக்கிறார்கள். என்னை நிந்திக்கிறவர்கள் என்னை வெட்கப்படுத்துவதற்காக மக்கள் ஒரு பக்கம் என்னை சூழ்ந்துக்கொண்டிருக்கிறார்கள். நான் உம்முடைய பிள்ளை நீர் என்னை அழைத்தீர். நீர் என்னை மட்டும் நடத்திக்கொண்டு வருகிறீர். ஆனால் இந்த சத்ருக்களால் வந்துக்கொண்டிருக்கிற இன்னல்கள் பிரச்சனைகள் எல்லாவற்றையும் நீர் பார்த்துக்கொண்டிருக்கிறீரே எவ்வளவு காலம் இதை பார்த்துக்கொண்டிருப்பீர். என் ஆத்மாவின் அழிவிற்கும் எனக்கு அருமையானதை சிங்கக்குட்டிகளுக்கும் தப்புவியும். இங்கே என்னுடைய சங்கீதத்திற்கு மட்டுமல்ல என்னுடைய ஆத்துமாவையும் அழித்து நஷ்டப்படுத்துவதற்கான அவர்கள் கூடியிருக்கிறார்கள்.
சத்ருவாகிய பிசாசானவன் பெரிய நஷ்டத்தை உண்டுபண்ணும்படியாக அழிவை அகங்காரத்தை உண்டுபண்ணும்படியாக அவன் பார்த்துக்கொண்டிருக்கிறான். அவனுடைய சதித்திட்டங்களில் இருந்து என்னை தப்புவிப்பீராக. நீரே வலிமையுள்ள ஆண்டவர். நீர் செய்ய உம்மால் ஆகும். நீர் எனக்காக இந்த காரியத்தை செய்வீராக. என்னுடைய ஆத்மாவை காத்துக்கொள்ளும். உம்மை துதிக்கிற என்னை நீர் காத்துக்கொள்ளும். உமக்கு நன்றி சொல்லுகிற என்னை நீர் காத்துக்கொள்ளும். பொல்லாதவர்களுடைய கைகளில் இருந்து நீர் என்னை விடுவிப்பீராக. இரட்சித்துக்கொள்வீராக. பெரிய காரியங்களை செய்வீராக.
இரக்கமுள்ள ஆண்டவரே! நாங்கள் உம்மை ஸ்த்தோத்திக்கிறோம். மனதக்குலத்தை படைத்த தேவனாகிய ஆண்டவர் உம்முடைய அடியானையும் நீர் பார்த்துக் கொண்டிருக்கிறீர். என்னை சுற்றிலும் இருக்கிற கூட்டத்து மக்களை நீர் பார்த்துக் கொண்டிருக்கிறீர். எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருக்கீற நீர் என்னை எல்லாவற்றிலும் இருந்து தப்புவிக்கமாட்டீரா? ஆபத்தில் இருந்து என்னை விடுவிக்கமாட்டீரா? சத்ருக்களும் பொல்லாத ஆவிகளின் சேனைகளும் என்னுடைய வாழ்வுக்கும் என்னுடைய கிருஸ்துவ ஜீவியத்திற்கும் நஷ்டத்தை ஏற்படுத்துகிற காரியங்களில் இருந்து விடுதலை கொடுக்கமாட்டீரா? நீரே அதை செய்ய வேண்டும் என்று சொல்லி நாங்கள் தாழ்த்துகிறோம். உம்மை நோக்கி மன்றாடுகிறோம்.
நீர் எங்களை மீட்டுக்கொள்ளும். உங்களுடைய விலைமதிப்பற்ற இரத்ததினால் என்னை மீட்டுக்கொள்ளும். தன்னுடைய பலத்தக்கரத்தினால் எங்களை ஆளுகை செய்து உம்முடைய சட்டைகளின் நிழலின் கீழே வைத்து காத்துக்கொள்வீராக. கிருபைகளை தாரும். பெரிய காரியங்களை செய்யும் ஏசு கிருஸ்துவின் மூலம் ஜெபிக்கிறோம் நல்ல பிதாவே. ஆமென். ஆமென்.
ஆசிரியர்: போதகர் தேவசகாயம்