திரு.கருணாநிதி – ஒரு சகாப்தம்!

திரு. கருணாநிதி, தட்சிணாமூர்த்தி என்ற பெயர் கொண்டு, 1924ம் ஆண்டு ஜூன் மாதம் 3ம் தேதி நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருக்குவளை என்ற ஒரு எளிமையான கிராமத்தில் பிறந்தார்.

சமூக சமத்துவம், பகுத்தறிவு சிந்தனை மற்றும் சுய மரியாதை ஆகிய கருத்தியல்களினால் ஈர்க்கப்பட்டு, 1938ம் ஆண்டு, தனது 14 வயதில் நீதி கட்சியில் இணைந்து அரசியல் பயணத்தை தொடங்கினார்.

முருசோலி என்ற நாளிதழை 10 ஆகஸ்ட் 1942 அன்று திருவாரூரில் தொடங்கினார். ஆரம்ப பதிப்புகளில், “சேரன்” என்ற புனை பெயரில் திரு.கருணாநிதி எழுத தொடங்கினார். ஆரம்பக்காலங்களில் வார இதழாக வெளிடப்பட்டு, பின்னர் செப்டம்பர் 17, 1960 முதல் முரசொலி நாளிதழ் தினமும் வெளியிட தொடங்கினார்.

1944ம் ஆண்டு, தனது 20 வயதில், அவர் ஜூபிட்டர் திரைப்பட நிறுவனத்தில் ஒரு திரைக்கதை எழுத்தராக சேர்ந்தார்.

1947ம் ஆண்டு, திரு.கருணாநிதி எழுதிய முதல் திரைக்கதையில் எம்.ஜி.ஆர் அவர்கள் திரைப்பட நாயகனாக நடித்தார். ‘ராஜகுமாரி’ என்று பெயரிடப்பட்ட இந்த திரைப்படம், எம்.ஜி.ஆர் மற்றும் எம்.என்.நம்பியார் இணைந்து நடித்த மிகச்சிறந்த வெற்றிப்படமாக அமைந்தது.

1949ம் ஆண்டில் அண்ணாதுரை அவர்களின் தலைமையில் ‘திராவிட கழகத்தில்’ இருந்து பிரிந்து ‘திராவிட முன்னேற்ற கழகத்தில்’ இணைந்தார்.

1952ம் ஆண்டில் வெளிவந்த ‘பராசக்தி’ என்ற திரைப்படத்தில் திராவிட கொள்கைகளை முதன்முதலாக சினிமாவின் மூலம் மக்களுக்கு எடுத்துரைத்தார்.

1953ம் ஆண்டில், “டால்மியா சிமெண்ட்’ கம்பெனியின் பெயரில் ‘டால்மியாபுரம்’ என்று மறுபெயரிடப்படவிருந்த ‘கள்ளக்குடி’ கிராமத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த போராட்டத்தினால் மூன்று மாதம் சிறையில் அடைக்கப்பட்டார்.

1957ம் ஆண்டு, தனது 33ம் வயதில், கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலை தொகுதியில் வெற்றி பெற்று முதன்முதலாக தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு மக்கள் பிரதிநிதியாக சென்றார்.

1961ம் ஆண்டு, திராவிட முன்னேற்ற கழகத்தின் பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1962ம் ஆண்டில், தமிழ்நாடு மாநில சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி துணை தலைவராக நியமிக்கப்பட்டார்.

1967ம் ஆண்டு, திராவிட முன்னேற்ற கழகம் முதன்முறையாக ஆட்சி பொறுப்பிற்கு வந்தபொழுது திரு.கருணாநிதி அவர்கள் பொதுப்பணித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

அன்றைய முதலமைச்சர் அண்ணாதுரை 1969ம் ஆண்டில் மறைந்தபோது, தனது 45ம் வயதில் திரு.கருணாநிதி முதலமைச்சராக பொறுப்பேற்றார்.

1972ம் ஆண்டில், எம்.ஜி.ஆர் அவர்கள், தி.மு.க.வின் சித்தாந்தத்தினால் ஈர்க்கப்பட்டிருந்தாலும், கருணாநிதியுடன் வேறுபாடுகள் காரணமாக, அ.தி.மு.க என்ற புதிய கட்சியை தொடங்கினார்.

1977 ஆம் ஆண்டு முதல் 1987 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆரின் மறைவு வரை, சினிமாவில் பிரபலமான எம்.ஜி.ஆரை எதிர்த்து தி.மு.க.வினால் மீண்டும் ஆட்சிக்கு வர இயலவில்லை.

1989ம் ஆண்டில், எம்.ஜி.ஆரின் மரணத்திற்குப் பிறகு தி.மு.க தலைவர் திரு.கருணாநிதி மீண்டும் ஆட்சிக்கு வந்தார்.

ஜனவரி 1991ம் ஆண்டு, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நெருக்கமாக இருப்பதாகக் கருதி தி.மு.க. அரசாங்கத்தை மத்திய அரசாங்கம் பதவி நீக்கம் செய்தது.

மே 1991ம் ஆண்டு, ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். மறுதேர்தலில், அதிமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி வெற்றிபெற்றது.

1996ம் ஆண்டு, ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக அன்றைய அதிமுக தலைவர் ஜெயலலிதா பொதுத்தேர்தலில் தோல்வியடைந்த பின்னர், மீண்டும் முதலமைச்சராக கருணாநிதி பதவியேற்றார். இந்த தேர்தல் பிரச்சாரத்தின் பொழுது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், “ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால், கடவுள் கூட தமிழ்நாட்டை காப்பாற்ற முடியாது” என்று கூறினார்.

2001ம் ஆண்டு தேர்தலில், அதிமுக தலைவர் ஜெயலலிதா அவர்கள் வேட்பாளராக போட்டியிட ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக தடை செய்யப்பட்டார். இருப்பினும், 2001ம் ஆண்டு மே மாதம் 14ம் தேதியில் மாநில சட்ட மன்றத்தில் தேர்ந்தெடுக்கப்படாத உறுப்பினராக, முதலமைச்சராக பதவி ஏற்றார். இதே ஆண்டில் ஜூன் மாதம் 20ம் தேதி, ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக திரு.கருணாநிதி, மத்திய அமைச்சர்கள் முரசொலி மரான் மற்றும் டீ.ஆர் பாலு ஆகியோருடன் கைது செய்யப்பட்டார்.

2004 ஆம் ஆண்டில், தேர்தலில் வெற்றிபெற்று திரு.கருணாநிதி ஐந்தாம் முறையாக முதலமைச்சராக பதவி ஏற்றார்.

2011ம் ஆண்டில், 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் திரு.கருணாநிதியின் மகள் கனிமொழி கைது செய்யப்பட்டார். இதே ஆண்டில் நடந்த தேர்தலில், திமுக தோல்வியடைந்தது.

மார்ச் 2013ம் ஆண்டில் நடந்த பொது தேர்தலில், தமிழ் ஈழம் பிரச்சினை காரணமாக ஐக்கிய முற்போக்கு கூட்டணியை விட்டு வெளியேறினார்.

2016ல் அவர் உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

2017 ஆம் ஆண்டு மே மாதம், ஒரு சட்டமன்ற உறுப்பினராக 60 ஆண்டுகள் பணியாற்றியதை திமுகவினர் கொண்டாடினர்.

அக்டோபர் 2017ல், முரசொலி பத்திரிக்கையின் 75 வது ஆண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள முரசொலி பத்திரிக்கை அலுவலகதிற்கு வந்தார்.

ஜூன் 2018ல், தனது 94ம் பிறந்த நாளை கொண்டாடினார்.

2018 ஜூலை மாதம் 18ம் தேதி, திரு.கருணாநிதி, மூச்சுப் பெருங்குழாய் மாற்றுவதற்காக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

திமுக தலைவரும், ஐந்து முறை முதல்வரான (94) திரு.கருணாநிதி, சென்னை காவேரி மருத்துவமனையில் நேற்று (ஆகஸ்ட் 7) மாலை 6.10 மணியளவில் காலமானார்.

தில்லி மற்றும் அனைத்து மாநில தலைநகரங்களிலும் தமிழ்நாட்டிலும், இன்று (2018 ஆகஸ்ட் 8ம் தேதி) தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்க விடப்பட்டது. அரசு மரியாதையுடன் இன்று மெரினா கடற்கரையில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

Leave a Reply

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com