சிலுவையின் வார்த்தை 04:04 | என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்?

தொடருகிறது…

7. யோவான் 14:31 நான் பிதாவின் அன்பாயிருக்கிறேன் என்றும், பிதா எனக்குக் கட்டளையிட்டபடியே செய்கிறேன். யோவான் 3:17 உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் ரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார்.

உலகம் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறது. எல்லோரும் வழி விலகி ஏகமாய்க் கெட்டுப் போனார்கள். நீதிமான் ஒருவனும் இல்லை. ஒருவனாகிலும் இல்லை. உலகத்து மக்கள் அனைவரும் உம்முடைய கட்டளைகளையும் கற்பனைகளையும் கைவிட்டார்கள். ஒருவனும் உமக்குப் பயப்படவில்லை. இதையெல்லாம் குமாரனாகிய நான் கண்டும் உலகில் வாழும் மக்களுக்குத் தண்டனை கொடுக்க நான் துணியவில்லை. நீர் உம்முடைய சாயலில் படைத்த மனுக்குலத்தை ரட்சிப்பதற்காக சிலுவையில் என்னை அறைந்து கொல்ல என் ஜீவனை ஒப்புக் கொடுத்தேன். இதை நீர் காணவில்லையா? இந்த சிலுவையின் மரணம் உமக்குத் திருப்தியாயில்லையா, பிதாவே, என் தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர்?

8. யோவான் 17:24 பிதாவே உலகத் தோற்றத்துக்கு முன் நீர் என்னில் அன்பாயிருந்தபடியினால், நீர் எனக்குத் தந்த என்னுடைய மகிமையை, நீர் எனக்குத் தந்தவர்கள் காணும்படியாக, நான் எங்கே இருக்கிறேனோ அங்கே அவர்களும் என்னுடனேகூட இருக்க விரும்புகிறேன்.

வ.26 நீர் என்னிடத்தில் வைத்த அன்பு அவர்களிடத்திலிருக்கும் படிக்கும் நானும் அவர்களிலிருக்கும் படிக்கும் உம்முடைய நாமத்தை அவர்களுக்குத் தெரியப்படுத்தினேன்; இன்னமும் தெரியப்படுத்துவேன்.

பிதாவே நீர் இந்த உலகத்தைப் படைப்பதற்கு முன்பாகவே நீர் என்னிடத்தில் அன்பாயிருந்தீர். பிதாவாகிய நீர் உம்முடைய மகிமையை குமாரனாகிய எனக்குத் தந்தீர். அந்த மகிமையை நீர் இந்த உலகத்தில் எனக்குத் தந்தவர்களும் காணும்படியாக அவர்களையும் என்னோடு சேர்த்துக்கொள்ள விரும்புகிறேன். என் ஜனங்களின் பாவங்களை நான் மன்னிக்காவிட்டால் அவர்கள் ஆவியிலும் ஆத்துமாவிலும் சரீரத்திலும் செத்து நரகத்திற்குப் போவார்கள். எனவே நான் என்னையும் ஜீவனையும் சிலுவையில் அறைய ஒப்புக் கொடுத்தேன். இவர்களை மன்னித்து பரலோகம் சேர்ப்பீராக என்று வேண்டினேன். ஆனால் பிதாவே, நீர் ஏன் என்னை கைவிட்டீர்?

9. மத்தேயு 26:53 நான் இப்பொழுது என் பிதாவே வேண்டிக் கொண்டால், அவர் பன்னிரண்டு லேகியோனுக்கு அதிகமான தூதரை என்னிடத்தில் அனுப்பமாட்டாரென்று நினைக்கிறாயா?

கெத்செமனே தோட்டத்திற்கு இயேசு தனித்து பிதாவிடம் ஜெபிப்பதிற்காக சீஷர்களை அழைத்துச் சென்றார் முக்கியமாக பேதுரு யாக்கோபு யோவான் ஆகிய மூன்று சீஷர்களையும் தனித்து ஜெபிக்க அழைத்துக்கொண்டு போனார். ஜெபித்து முடித்து திரும்பும் பொழுது யூதாஸ் யேசுவைக் காட்டிக் கொடுப்பதற்காக வந்தான். ரபீ வாழ்க என்று முத்தஞ் செய்தான். பிரதான ஆசாரியரும் ஜனத்தின் மூப்பரும் அனுப்பின ஜனங்கள் யேசுவைப் பிடித்தார்கள். வந்தவர்கள் பட்டயங்களையும் தடிகளையும் கொண்டு வந்த காட்சியைக் கண்ட பேதுரு தன் பட்டயத்தை உருவி பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரன் காதை வெட்டினான்.

நான் இப்பொழுது என் பிதாவை வேண்டிக் கொண்டால், அவர் பன்னிரண்டு லேகியோனுக்கு அதிகமான தூதரை என்னிடத்தில் அனுப்பமாட்டாரென்று நினைக்கிறாயா? என்று பேதுருவினிடத்தில் சொன்னார். பிதாவே உம்மேல் நான் வைத்திருந்த நம்பிக்கையை வெளிப்படுத்தினேனே. பிதாவே, நீர் ஏன் என்னைக் கைவிட்டீர்?

தொடரும்…
புத்தகம்: சிலுவையின் ஏழு வார்த்தைகளும் ஆசிர்வாதங்களும்.

படம்: By WeAppU [வணிக பயன்பாட்டிற்கு இலவசம், பட உரிமையாளரை மேற்கோள் காட்ட வேண்டியதில்லை], via CC0 கிரியேடிவ் காமன்ஸ், பிக்சாபே.காம் வலைத்தளத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது.

Leave a Reply

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com