சிலுவையின் வார்த்தை 04:02 | என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்?
1. ஆதியாகமம் 3: 15 அவர் உன் தலையை நசுக்குவார். நீ அவர் குதிங்காலை நசுக்குவாய்.
உலகத்து மக்கள் அனைவரின் பாவத்தையும் அக்கிரமத்தையும் நான் சிலுவையில் மன்னித்து உமக்கும் எனக்கும் சத்துருவாகிய பிசாசின் தலையை நசுக்கி விட்டேன். அனைவருக்காகவும் பாவத்தை ஜெயித்து உம்மை மகிமைப்படுத்தினேன். இப்பொழுது சத்துருவாகிய பிசாசு என் காலை நசுக்கி வேதனைப்படுத்திக் கொண்டிருக்கிறான். நீர் எனக்கு உதவ வரவில்லையா? ஏன் என்னைக் கைவிட்டீர்?
2. ஏசாயா 53:6 நாமெல்லாரும் ஆடுகளைப் போல வழி தப்பித் திரிந்து அவனவன் தன் தன் வழியிலே போனோம்.
வ.7 நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார். ஆனாலும் தம்முடைய வாயை அவர் திறக்கவில்லை; அடிக்கப்படும்படி கொண்டு போகப்படுகிற ஒரு ஆட்டுக்குட்டியைப் போலவும், தன்னை மயிர் கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப் போலவும் அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார்.
பிதாவே, கெத்சமனே தோட்டத்தில் என்னைப் பிடித்தது முதல் இதுவரை என்னைக் கண்டவர்களெல்லாரும் அடித்துக் காயப்படுத்தினார்கள், கன்னத்திலே அறைந்தார்கள், முகத்திலே துப்பினார்கள், தலையிலே முட்கிரீடம் சூடி கோலால் அடித்தார்கள். வாரினால் முதுகிலும் உடலெங்கும் அடித்து ரத்தம் வரப்பண்ணினார்கள். நான் ஒருவனுக்கும் விரோதமாக சாப வார்த்தைகளைச் சொல்லவில்லை. நீர் எனக்குத் துணையாகக் கொடுத்த தூதர்களைக் கொண்டு அவர்களைப் பயமுறுத்தவில்லை. ஒரு ஆட்டுக் குட்டியைப் போல அமைதியாயிருந்து ஏசாயா தீர்க்கதரிசியின் மூலம் நீர் சொன்ன வார்தையைக் கனப்படுத்தினேன். என் தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர்?
3. மத்தேயு 3:17 … வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: இவர் என்னுடைய நேசக்குமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன். யோர்தான் ஆற்றில் யோவான் ஸ்நானகனால் நான் ஞானஸ்நானம் பெற்றபொழுது பிதாவாகிய நீர் என் மீது எவ்வளவு பிரியமாயிருந்தீர். இவர் என்னுடைய நேசக்குமாரன் என்று செல்லமாய் அழைத்தீரே. அன்று முதல் நீர் எனக்குக் கொடுத்த ஊழியத்தையெல்லாம் நிறைவேற்றி முடித்திருக்கிறேன். பிதாவே என் பணி உமக்கு மகிழ்ச்சியாயில்லையா? ஏன் என்னைக் கைவிட்டீர்?
தொடரும்…
புத்தகம்: சிலுவையின் ஏழு வார்த்தைகளும் ஆசிர்வாதங்களும்.
படம்: By Geralt [வணிக பயன்பாட்டிற்கு இலவசம், பட உரிமையாளரை மேற்கோள் காட்ட வேண்டியதில்லை], via CC0 கிரியேடிவ் காமன்ஸ், பிக்சாபே.காம் வலைத்தளத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது.