சிலுவையின் வார்த்தை 01:04 | பிதாவே இவர்களை மன்னியும்.
ஆன்மிகம் | சிலுவையின் வார்த்தை 01:04 | பிதாவே இவர்களை மன்னியும்.
4. இஸ்ரவேலின் அதிபர்கள் மன்னிக்கப்படுவார்களா?
எசேக்கியேல் 22:1-14 வ.6 இதோ இஸ்ரவேலின் அதிபர்களில் அவரவர் தங்கள் புயபலத்திற்குத் தக்கதாக, உன்னில் ரத்தஞ் சிந்தினார்கள்.
யாக்கோபின் பன்னிரெண்டு கோத்திரங்களின் தலைமை ஸ்தானம் எருசலேம் பட்டணம். இது மகாராஜாவின் நகரம் என்றும், பரிசுத்த நகரம் என்றும் அழைக்கப்படுகிறது. சாலமோன் ராஜாவினால் கட்டப்பட்ட தேவாலயம் எருசலேமில் அமைந்துள்ளது. கானான் தேசத்தின் பன்னிரெண்டு கோத்திரங்களைச் சேர்ந்தவர்களும் வருஷத்தில் மூன்று தடவை பண்டிகையை ஆசாரிக்க வெகு ஆர்வமாய் எருசலேமுக்கு வருவார்கள். தங்கள் தசமபாகக் காணிக்கைகளையும் பலிகளையும் எருசலேம் தேவாலயத்தில் படைத்தது கர்த்தருடைய பாவமன்னிப்பையும் சமாதானத்தையும், மனமகிழ்ச்சியையும் பெற்றுச் செல்ல வருஷந்தோறும் வருவார்கள். மன்னிப்பைப் பெற்றார்களா?
என் வீட்டில் எங்கும் உண்மையுள்ளவன் என்று கர்த்தர் மோசேயைப் பாராட்டுகின்றார். அவன் தன்னுடைய நாற்பது ஆண்டு கால ஊழியத்தில் யாருக்கும் நீதி கேடு செய்யவில்லை. தன் கோத்திரத்து ஜனங்களுக்கு அல்லது தன்னுடைய குடும்பத்தாருக்கு மட்டும் எந்த பாரபட்சமும் காட்டவில்லை. அவன் வழியில் வந்த லேவியர்களும், ஆசாரியர்களும், பிரதான ஆசாரியர்களும் கர்த்தருடைய சத்தியத்தை உண்மையாய்ப் போதித்து உண்மையாய் வாழ்ந்தார்களா?
தொடரும்…
புத்தகம்: சிலுவையின் ஏழு வார்த்தைகளும் ஆசிர்வாதங்களும். படம்: By Walkerssk [வணிக பயன்பாட்டிற்கு இலவசம், பட உரிமையாளரை மேற்கோள் காட்ட வேண்டியதில்லை], via CC0 கிரியேடிவ் காமன்ஸ், பிக்சாபே.காம் வலைத்தளத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது.