கூட்டு ஜெபம்

இன்றைய நாளில் தாவீதின் ஒரு விஷேஷித்த ஜெபத்தை தியானிக்கப் போகிறோம். சங்கீதங்களின் புஸ்தகம் இருபது ஐந்திலே நாங்கள் உங்கள் இரட்சிப்பினால் மகிழ்ந்து எங்கள் தேவனுடைய நாமத்திலே கொடியேற்றுவோம். உமது வேண்டுதல்களையெல்லாம் கர்த்தர் நிறைவேற்றுவாராக. இந்த இருபதாவது சங்கீதம் தாவீதுனுடைய விஷேஷித்த நண்பர்களோடு கூட சேர்ந்து அவர்களுக்காகவும் பாரப்பட்டு ஜெபிக்கிற ஒரு ஜெபமாக, பாடலாக அமைந்திருக்கிறது. நாங்களும் அந்த இரட்சிப்பினால் மகிழ்ந்து எங்களுடைய தேவனுடைய நாமத்தில் கொடியேற்றுவோம். நானும் என் நண்பர்களும் கர்த்தருக்குள்ளாக மகிழ்ந்திருக்கிற, கர்த்தரை நம்புகிற, விசுவாசிக்கிற அந்த விசுவாச வாழ்க்கையிலே நாங்கள் ஒன்றுபட்டு வாழ்ந்து வருகிறோம். ஜெபித்து வருகிறோம். ஆண்டவருடைய கிருபைக்காக மன்றாடி வருகிறோம். கர்த்தர் எங்களுக்கு ஜெயத்தை தருவார்.

நாங்கள் செய்யகூடிய செயல்களில் ஆண்டவருடைய நாமத்தை மகிமைப்படுத்துவோம். அந்த அனுகூலமான காரியங்களை கர்த்தர் எனக்கு தந்தருளுவார். ஆகவே அருமையான நண்பரே, உண்மையான சகோதரரே, உமது வேண்டுதல்களையெல்லாம் கர்த்தர் நிறைவேற்றுவராக. இருதயத்தின் ஆழத்திலிருந்து ஜுவனுள்ள ஆண்டவரை நோக்கி மன்றாடி வேண்டிகொள்கிற விண்ணப்பங்களை கர்த்தர் கேட்டு அற்புதமான அடையாளமான காரியங்களை உம்முடைய வாழ்க்கையிலே அருளச்செய்து அவர் உம்மை ஆசிர்வதிப்பாராக.

கர்த்தருடைய கரம் உமக்கு உதவியாக ஒத்தாசையாக இருக்கும் என்று சொல்லி ஜெபிக்கிற ஒரு நல்ல ஜெபத்தை நாம் பார்க்கிறோம். அதே போன்று கர்த்தருடைய பிள்ளைகளே நாமும் மற்றவர்களுக்காக ஜெபிக்க வேண்டும். மற்றவர்களோடு கூட சேர்ந்து ஜெபித்து ஜெப வாழ்க்கையிலே வெற்றி பெற வேண்டும். ஆண்டவருடைய நாமத்தை மகிமைப்படுத்த வேண்டும். கர்த்தரை நோக்கி பார்க்கிற எல்லாருக்கும் ஆண்டவர் அருள் செய்வார். கிருபை செய்வார். நன்மைகளை கட்டளையிடுவார். எல்லா ஆசிர்வாதங்களையும் கொடுப்பார். கர்த்தருடைய ஜெபத்திலே விண்ணப்பங்களை வேண்டிக் கொள்கிற கர்த்தருடைய பிள்ளைகள் ஒவ்வொருவக்கும் கிருபை பாராட்டுவீராக.

ஆண்டவரே! எங்களுடைய ஜெபத்தை கேளும் எங்களுக்கு வேண்டிய நன்மைகளை தாரும். எங்களுக்கு நம்பிக்கையைத் தாரும். விசுவாசங்களை கட்டளையிடும். சோர்வுகளை எடுத்து போடும். நாங்கள் உங்களை பற்றிகொள்ள மகிமையை ஸ்தோத்திரங்களை ஏறெடுக்க கிருபை செய்யும். ஜெய கொடி உள்ள வாழ்க்கையை வெற்றி உள்ள வாழ்க்கையை தந்தருளி எங்களை ஆசிர்வதித்து சந்தோஷத்தைப்படுத்துவீராக. ஏசு கிறிஸ்து மூலம் ஜெபிக்கிறோம் நல்ல பிதாவே. ஆமென். ஆமென்.

ஆசிரியர்: போதகர் தேவசகாயம்

Leave a Reply

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com