இரக்கமுடையவர்
இன்றைய நாளில் வேதபாலகனாகிய எஸ்ராவின் இன்னொரு ஜெபத்தை தியானிக்க போகிறோம். எஸ்ராவின் புஸ்தகம் ஒன்பதாம் அதிகாரம் பதிமூன்றாம் வசனத்திலே இப்பொழுதும் எங்கள் தேவனே! எங்கள் பொல்லாத செய்கைகளினாலும் எங்கள் பெரிய குற்றத்தினாலும் இவைகளெல்லாம் எங்கள் மேல் தேவரீர் எங்கள் அக்கிரமத்துக்குதக்க ஆக்கினயங்கள் கிடையாமல் எங்களை இப்படி தப்பவிட்டிருக்கிறீர் என்று சொல்லி ஜெபிக்கிறதை நாம் பார்க்கிறோம்.
பொல்லாத செய்கைகளும் கர்த்தருடைய நாமத்தை தரித்திரிக்கதாய் நமக்கு எழுபது வருஷ காலம் பாபிலோனில் உள்ள சிறையில் இருந்து எரிசலேமுக்கு நேராக திரும்பி வந்தாலும் அவர்களுடைய கிரியைகள் அவர்களை விட்டு அகன்று போகவில்லை. விடுதலை நாட்களிலே ஆண்டவரை மகிமைப்படுத்தினார்கள். நாட்கள் செல்ல செல்ல பழைய வாழ்வு திரும்புகின்றது. நம்முடைய ஆத்மாவை கர்த்தருக்கு நேராக திருப்புவதற்கு பதிலாக உலக பிரகாரமான கிரியைகளுக்கு நேராக திருப்புகின்றார்கள். ஆக அடிமைத்தனத்திற்கு நேராக திரும்பி செல்கின்றார்கள். அங்கே அவர்களுடைய வழிபாடுகளிலே விழுந்து போகின்றார்கள். அக்கிரம கிரியைகளை நடப்பிக்கின்றார்கள்.
சகோதரன் ஒருவனுக்கு ஒருவன் விரோதமாக பல தீமையான காரியங்களை செய்து ஆண்டவரை துக்கப்படுத்துகின்றார்கள். அங்கே வழிபாடுகளானாலும் தங்களை கடைப்படுத்தி கொள்கின்றார்கள். தேவனை துக்கப்படுத்துகிறார்கள். விசாரப்படுத்துகிறார்கள். எப்படியெல்லாம் அவர்கள் தேவனுக்கு பிரியமில்லாத காரியங்களை செய்கின்றபோதிலும் நீதி உள்ள தேவன். நம்முடைய கோவத்தை உடனடியாக வெளிப்படுத்தாமல் இரக்கங்கிடைக்க பண்ணுகிறார். அதை நினைவு கூர்ந்து தேவபாலகனாகிய எஸ்ரா ஜெபிக்கிறதை நாம் பார்க்கிறோம்.
இரக்கமுள்ள ஆண்டவரே! நீர் கிருபையுள்ளவர். மனதுருக்கம் உள்ள ஆண்டவர். எங்களுடைய குற்றங்களை மன்னிக்கிறவர். எங்களுக்கு நீர் உதவி செய்கிறவர். அழித்து விரோதம் பண்ணுகிற தேவன் அல்ல. எங்களுக்கு வாழ்வை கொடுத்து ஆசிர்வதிக்க விரும்புகிறவர். மனந்திருந்த வாழ்வை எங்களுக்கு தந்தருளுவீராக. மன்றாட்ட ஜெபத்திற்கு ஏற்ற பலனை தாரும். உம்மை நோக்கி கதறி அழுது ஜெபிக்கிற பரிசுத்தவான்களின் ஜெபத்திற்கு ஏற்ற பலனை கொடுத்து கிருபையினால் தாங்குவீராக. நீர் எங்களை இரட்சித்து கொள்ளுவீராக. கிருபையினால் வழிநடத்தி சென்று ஆசிர்வதிப்பீராக. இந்நாளின் ஜெபத்தில் பங்குகொள்கிற தம்முடைய பிள்ளைகளை ஆசிர்வதித்து சந்தோஷப்படுத்துவீராக. ஏசுவின் மூலம் ஜெபிக்கிறோம் நல்ல பிதாவே. ஆமென். ஆமென்.
ஆசிரியர்: போதகர் தேவசகாயம்