இடையூறு
இன்றைய நாளில் தாவீதின் ஜெபத்தை தியானிக்க போகிறோம். சங்கீதம் முப்பத்து மூன்று இருபத்திரண்டில், கர்த்தாவே! நாங்கள் உம்மை நம்பியிருக்கிற படியே உமது கிருபை எங்கள் மேல் இருப்பதாக! தாவீது தன்னோடு கூட இருக்கிற கர்த்தருடைய பிள்ளைகளினுடைய நம்பிக்கையை வெளிப்படுத்திக் காட்டியிருக்கிறதை நாம் பார்க்கிறோம். தன்னுடைய விசுவாசத்திற்கும், தம்முடைய பரிசுத்த வாழ்வுக்கும் இடையூறு ஏற்படுத்தாது தானே அவருடைய கர்த்தர் நாமத்தை தரித்திரிக்கிறதான பிள்ளைகளை மையமாக வைத்து இந்த ஜெபத்தை ஏறெடுக்கிறதை நாம் பார்க்கிறோம்.
நாங்கள் உம்மையே நம்பியிருக்கிற படியே. ஆகவே, ஒரு விசுவாச வாழ்க்கையிலே ஒரு திருச்சபையிலோ, ஒரு சமுதாயத்திலோ, ஒரு கூட்டத்திலோ அநேகருடைய நம்பிக்கை ஒரு மனதாக இருக்கிறபொழுது ஒரு மனதோடு மன்றாடி வேண்டிக்கொள்கிற பொழுது, கர்த்தாவே! நீர் அதை அனுகூலமாக்கித் தருவீர். ஒரு சபையிலே கூடி இருக்கிற அனைத்து மக்களுடைய விசுவாசத்தின் ஜெபத்திற்கு நீர் பதில் கொடுப்பீர். எல்லோருக்கும் அமைதியான வழிப்பாட்டைக் கொடுத்து நீர் ஆசீர்வதிப்பீர் என்பதை நாங்கள் பார்க்கிறோம் கர்த்தாவே! உமது கிருபை எங்கள் மேல் இருப்பதாக.
ஒரு போராட்டம், உபத்திரகம், ஒரு சஞ்சனம், ஒரு நெருக்கங்கள், ஒரு பஞ்சம் பட்டினி இப்படிபட்டதான நிலைகளிலே எங்கள் கர்த்தர் எங்களுக்கு ஒரு விடுதலையைத் தருவார். வியாதிகளை நீக்குவார் எல்லா குறைபாடுகளை அகற்றி செழிப்புள்ள காலங்களை கொடுத்து எங்களை சந்தோஷப்படுத்துவார் என்று சொல்லி நாங்கள் நம்பியிருக்கிறோம். ஒரு மனப்பாட்டோடு வேண்டிக்கொள்கிற ஒரு ஜெபத்திற்கு பதில் கொடுக்கிற தேவன். ஆகவே, கர்த்தாவே உமது கிருபைகள் எங்கள் மேல் இருப்பதாக நீர் மன்னிக்கிறவர் இரட்சிக்கிறவர் இரக்கம் பாராட்டி நன்மைகளை அருளிச் செய்து சந்தோஷப்படுத்துகிற தேவன். இப்படியே எங்களுக்கு உதவி செய்வீராக.
இரக்கமுள்ள ஆண்டவரே! உம்மை நோக்கி பார்க்கிறோம். சமுதாயத்தில் எங்களுக்கு ஏற்பட்டிருக்கிற நெருக்கங்கள் எல்லா குறைபாடுகளையும் மாற்றி அமைக்கிற தேவன். தம்முடைய நீதியையும் நியாயத்தையும் நிலை நிறுத்துகிற தேவன். தம்முடைய பிள்ளைகளின் ஒருமனப்பாட்டையும் ஜெபத்திற்கு ஏற்ற பதிலையும் கொடுத்து நீர் அவர்களை ஆசிர்வதிப்பீராக. நம்பிக்கையிலே அவர்களை உறுதிப்படுத்துவீராக. விசுவாச வாழ்க்கையிலே அவர்களை ஸ்த்தோத்திரப்படுத்துவீராக. அவர்கள் ஒருமனப்பாட்டோடு வேண்டிக்கொள்கிற எல்லா நன்மைகளையும் கட்டளையிட்டு கர்த்தர் தங்களுடைய பிள்ளைகளை ஆசிர்வதிக்குமாறு நாங்கள் ஜெபிக்கிறோம்.
ஏழைகளின் மனதையும், ஏழைகளின் இருதயத்தையும் ஒரே சிந்தனைகளை எங்களுக்கு கட்டளையிடும். நாங்கள் உம்மை துதிக்கட்டும். நாங்கள் உம்மை போற்றி புகழ்ந்து உம்மை மகிமைப்படுத்தட்டும். உம்முடைய கிருபைகளை எங்களுக்கு கட்டளையிடுவீராக. உம்மை நம்பின பிள்ளைகள் வெட்கப்பட்டு போகாதபடி நீர் காப்பீராக. பெரிய காரியங்களை செய்யும் எங்கள் நன்மைகள் எல்லாவற்றையும் எங்கள் இரட்சகர் ஏசு கிருஸ்துவின் மூலம் ஜெபிக்கிறோம் நல்ல பிதாவே. ஆமென். ஆமென்.
ஆசிரியர்: போதகர் தேவசகாயம்