விளைச்சல்

கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக. கர்த்தர் உங்களோடு கூட இருப்பாராக. இந்நாளின் ஜெபத்தை கிதியோன் ஏறெடுக்கிறதை நாம் பார்க்கிறோம். மேயாதிபதிகளின் புஸ்தகம் ஆறாம் அதிகாரம் பதிமூன்றாவது வசனத்திலே, ஆ! என் ஆண்டவரே! கர்த்தர் எங்களோடு இருந்தால் இவையெல்லாம் எங்களுக்கு நேரிடுமானேல் கர்த்தர் எங்களை எகிப்திலிருந்து கொண்டு வரவில்லையா என்று எங்கள் பிதாக்கள் எங்களுக்கு விவரித்துச் சொன்ன அவருடைய அற்புதங்கள் எல்லாம் இங்கே இப்பொழுது கர்த்தர் எங்களை கைவிட்டு நீதியானர் கையில் எங்களை ஒப்புக்கொடுத்தாரே என்றான்.

தேவனாகிய கர்த்தர் அங்கே ஆலைக்கருகாமையிலே தம் தகப்பனுடைய வயலிலே விளைந்துதானே கதிர் கற்றைகளை அறுத்து அங்கே அதை தானியங்களை வேறுப்படுத்தி அந்த வேளைகளை செய்துக்கொண்டிருக்கிறபொழுது கர்த்தர் அவனுடைய கிரியைகளைப் பார்த்து இந்த கிதியோனை ஆண்டவர் ஆசிர்வதிக்கிறதை நாம் பார்க்கிறோம். நீதியானிரால் இந்த இஸ்ரவேல் ஜனங்கள் ஒடுக்கப்பட்டிருந்தார்கள். அவர்கள் இவர்களை அடிமைப்படுத்தியிருந்தார்கள். இவர்களுடைய வல்லமைகளை விளைச்சல்களை அவர்கள் அபகரித்துக் கொண்டுப்போய் கொண்டிருந்தார்கள். வாழ்வாதாரம் எல்லாம் கெட்டுப்போகின்ற நிலையிலே தன் தகப்பனுடைய விளைச்சலிலே தன்னுடைய பங்கை எப்படியாகிலும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்லி தைரியத்தோடு நீதியானியருக்கு பயப்படாமல் மனஉறுதியோடுகூட அந்த காரியங்களை செய்த காரியங்களை கர்த்தர் கண்டார். இந்த கிதியோனை ஆண்டவர் அழைத்து அவனை ஆசிர்வதிக்கிறார். கர்த்தருடைய தூதனானவர் அவனுக்கு தரிசனமாகி, பராக்கிரமசாலியே! கர்த்தர் உன்னோடு இருக்கிறார் என்றார். கிதியோன் செய்கிற தன் பணிகளை நேர்த்தியாக செய்கிறேன் உற்ச்சாகத்தோடு எனது கடமைகளை செய்கிறேன் கிதியோனை ஆண்டவர் ஆசிர்வதிக்கிறார்.

பராக்கிரமசாலியே! கர்த்தர் உன்னுடன் கூட இருக்கிறார் உனைக் கொண்டு பெரிய காரியங்களை செய்வார் என்று சொன்னபொழுது அங்கே கிதியோன் தன்னுடைய நிலைமைகளை சொல்லுகிறான். தன் முற்பிதாக்களுக்கு ஏற்பட்ட நிலைமைகளை சொல்லுகிறான். அப்படிப்பட்ட காலக்கட்டத்திலும் கூட ஆண்டவர் நம்மை தெரிந்துக்கொள்கிறார் நம்மை தனிப்பட்ட முறையிலே ஒரு மனிதனாக ஆண்டவர் தெரிந்துக்கொள்கிறார். அவருடைய நாமத்தை மகிமைப்படுத்துவதற்காக நம்மை அழைக்கிறார். அவருடைய தயவிளக்கனம் நம்மோடு கூட இருக்கட்டும் கர்த்தருடைய ஆளுகைக்குள்ளாக நாம் இருக்க வேண்டும் அவருடைய பிரசனத்திற்குள்ளாக இருக்க வேண்டும். அவருடைய செயல்பாடுகளுக்குள்ளாக நாம் செயல்பட்டு ஆண்டவரை மகிமைப்படுத்த வேண்டும். அவ்விதமான நன்மைகளை கர்த்தர் நமக்கு தந்தருளுவாராக! ஆசிர்வதிப்பாராக!

கிருபைகளின் ஆண்டவரே! நாங்கள் உங்களை ஸ்தோத்திக்கிறோம். நன்றி செலுத்துகிறோம். கிதியோனுக்கு ஆண்டவரே! நீர் காட்சிக்கொடுத்தீர் தரிசனம் கொடுத்தீர் உனக்கு இருக்கிற அந்த பலத்தோடு கூட நீதியானரை எதிர்த்து நீ போரிடு என்று சொல்வதை நாங்கள் பார்க்கிறோம்.

ஆண்டவரே! நீர் எங்களோடு கூட இருந்தால் இந்த நிலைமைகளெல்லாம் இந்த நஷ்டங்கள், இந்த பாடுகள் அந்நியருடைய அடக்குமுறைகளெல்லாம் எங்களுக்கு நேரிடுமா? என்று சொல்லி அவன் தன்னுடைய ஆதங்கத்தை சொல்லுகிறான்.

கர்த்தாவே! நாங்கள் எங்கள் இயலாமையை சொல்லுகிறோம் எங்களுடைய பலவீனங்களை அறிக்கையெடுக்கிறோம் எங்களை தாழ்த்துகிறோம் நீர் எங்களோடு கூட இருப்பீராக! எங்களை பலப்படுத்துவீராக! சத்துரப்படுத்துவீராக! எடுத்து பயன்படுத்துவீராக! உங்கள் தையவுள்ள கரத்தினால் எங்களை வழிநடத்தி செல்வீராக! ஏசுவின் மூலம் ஜெபிக்கிறோம் நல்லப்பிதாவே. ஆமென். ஆமென்.

ஆசிரியர்: போதகர் தேவசகாயம்

Leave a Reply

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com