விசுவாசம்

கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக. கர்த்தர் உங்களையும் ஆசிர்வதிப்பாராக.

இந்நாளின் ஜெபத்தை அன்னாள் ஏறெடுக்கிறதை நாம் பார்க்கிறோம். ஒன்று சாமுவேலின் புஸ்தகம் முதலாம் அதிகாரம் பதினொராவது வசனத்திலே, சேனைகளின் கர்த்தாவே! தேவரீர்! உம்முடைய அடியாளின் சிறுமியை கண்ணோக்கி பார்த்து உம்முடைய அடியாளை மறவாமல் நினைத்தருளி உமது அடியாளுக்கு ஒரு ஆண் பிள்ளையைக் கொடுத்தால் அவன் உயிரோடு இருக்கும் சகல நாளும் நான் அவனைக் கர்த்தருக்கு ஒப்புக்கொடுப்பேன். அவன் தலையின் மேல் சபலவேன் கத்தி படுவதில்லை என்று போர்த்தனைப் பண்ணினாள். இங்கே அன்னாள் மலடியாக இருந்தாள். அவளுக்கு குழந்தை இல்லை. அவளை துக்கப்படுத்தின குடும்பத்திலே அருமையான சகோதரி பென்னினாள் இருந்தாள். எல்லா சந்தோஷகரமான பண்டிகை நாட்களிலெல்லாம் துக்கமான வார்த்தைகளை அன்னாளுக்கு முன்பாக போட்டு அவளை மனநோகப்பண்ணி அவளை சஞ்ஜலபடுத்திக்கொண்டே இருப்பாள். மிதமான ஒரு காலக்கட்டத்திலே சிலோவிலே இருந்து தானே ஆலயத்திற்கு சென்று அன்னாள் கர்த்தரை நோக்கி மன்றாடி ஜெபிக்கிறாள். தன்னுடைய மனபாரங்கள் எல்லாவற்றையும் ஆண்டவருடைய சமூகத்திலே ஊற்றி ஜெபிக்கிறாள். கர்த்தருக்கு முன்பாக ஒரு போர்த்தனைபண்ணி ஜெபிக்கிறாள்.

தேவரீர்! நீர் எனக்கு ஒரு ஆண்மகனை கொடுப்பீரானால், நான் அவனை உமக்கு என்று வளர்ப்பேன். அவன் ஜீவனுள்ள காலமெல்லாம் நசரேனாக இருப்பான். அவனை ஆண்டவருக்கு அர்ப்பணித்தேன் என்று சொல்லுகிறாள். கர்த்தருடைய பிள்ளைகளே! நம்முடைய போர்த்தனையின் ஜெபம் ஆண்டவருடைய மனதிலே ஒரு மனஉருக்கத்தை ஏற்படுத்தும். ஆண்டவன் நம்மை ஆசிர்வதிக்க மனதிறங்குவார். நம்முடைய கண்ணீரை காண்கிற தேவன் நமக்கு ஒரு பெரிய விடுதலைக் கொடுத்து நம்மை சந்தோஷப்படுத்துவார். துக்கத்தை மாற்றுவார். அன்னாளுக்கு அற்புதங்களை செய்த ஆண்டவர் நமக்கும் உதவி செய்வார்.

நம்முடைய ஜெபத்தையும் கேட்பார் கர்த்தர் உம்முடைய வாழ்க்கையிலே பெரிய காரியங்களை செய்வாராக. இரக்கமுள்ள ஆண்டவரே! இந்த வேளைக்காக உம்மை ஸ்தோத்திக்கிறோம். அன்னாளின் ஜெபத்தைப்போன்று நாங்களும் போர்த்தனைப்பண்ணி ஜெபிக்கிறோம். என்னுடைய குடும்பத்துக்காக குடும்பத்தின் மக்களுக்காக எங்களுடைய உறவினர்களுக்காக நாங்கள் பாரத்தோடும் கண்ணீரோடும் கூட ஜெபிக்கிறோம்.

என்னுடைய பாரமுள்ள ஜெபத்தைக் கேட்டு யார் யாருக்கு என்னென்ன நன்மைகள் வேண்டுமோ அவைகளை அள்ளிச்செய்து அவர்களை ஆசிர்வதிப்பீராக! உம்முடைய ஆளுகை பாதுகாப்பு பராமரிப்பு இருக்கட்டும். உம்முடைய தேவீக சித்தத்தை திட்டத்தை நிறைவேற்றும். நன்மைக்கேற்றவாறு நடத்தும். ஏசுவின் நாமத்தினால் பிதாவே. ஆமென். ஆமென்.

ஆசிரியர்: போதகர் தேவசகாயம்

Leave a Reply

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com