வறுமை
இன்றைய நாளிலே சாரிபாத்து என்னும் விதவையின் ஜெபத்தை தியானிக்க போகிறோம். ஒன்று ராஜாக்களின் புஸ்தகம் பதினேழாம் அதிகாரம் பன்னிரண்டாம் வசனத்திலே பானையில் ஒரு பிடி மாவும் களயத்திலே கொஞ்சம் எண்ணையுமே அல்லாமல் என்னிடத்தில் ஒரு அடையும் இல்லை என்று உம்முடைய தேவனாகிய கர்த்தருடைய ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன். இந்த ஜெபத்தை சாரிபாத்து ஊரு விதவை சொல்லுகிறாள் ஜெபிக்கிறாள்.
கர்த்தர் தீர்க்கத்தரிசியாகிய எலியாவை யோதானுக்கு அடுத்த தேரியற்று ஆற்றினிடையிலே தங்கியிருக்க செய்து ஆகாபுராஜா ஏசேபினுடைய கண்களுக்கு அவர்களை மறைவாக வைத்து பாவத்தைக் கொண்டு அவர்களை போஷித்து வந்தார். இதை தேரியாற்று ஆற்றின் தண்ணீர் வற்றிப்போன காலக்கட்டத்திலே ஆண்டவர் எலியாவை அழைத்து அங்கே சாரிபாத்து ஊருக்கு அனுப்புகிறார். அங்கு ஒரு ஏழை விதைவையினிடத்திலே அனுப்பி தன்னை போஷிக்க ஏற்பாடு செய்கிறார். ஏழை விதவையைக் கண்டமாத்திரத்திலே எலியாற்றுக்கு குடிக்க கொஞ்சம் தண்ணீர் கொண்டு வா என்று கூறுகிறான்.
தண்ணீர் எடுப்பதற்காக செல்லுகிறபொழுது ஒரு அப்பமும் கொண்டு வா என்று சொல்லிக் கேட்கிறான். இந்த கேள்வி சாரிபாத்து ஒரு விதவையை கலங்க செய்துவிட்டது அவளுக்கு இருக்க நெருக்கத்தை உணரசெய்துவிட்டது. அவள் இருதயத்திலே ஒரு பெரிய போராட்டத்தோடு இந்த உள்ள நொறுங்கிய நிலையிலே தீர்க்கத்தரிசினிடத்திலே இந்த வார்த்தையை சொல்லுகிறார். பானையில் ஒரு பிடி மாவும், கலசத்திலே கொஞ்சம் எண்ணையுமே அல்லாமல் வேறு ஒன்றும் இல்லை என்று உள்ளபடியாக சொல்லுகிறாள். அந்த உள்ளத்தில் இருக்கிற அந்த ஏக்கம் அந்த வறுமையின் நெருக்கம் அதுவே ஜெபமாக மாறுகிறது. கர்த்தர் அந்த ஜெபத்தை கேட்கிறார். அருங்கொண்ட நருங்கொண்ட இருதயத்தோடு நாம் கேட்கிற ஜெபத்திற்கு அவர் பதில்கொடுப்பார். உண்மையானவைகளை பேசுகிறபொழுது கர்த்தர் அந்த காரியங்களை அங்கீகரித்து ஆசிர்வதிப்பார்.
கர்த்தாவே இந்த ஏழை விதவையினுடைய இருதயத்தினுடைய வேண்டுதலை பாரத்தை அறிந்த கர்த்தர் தீர்க்கத்தரிசியின் மூலமாக ஒரு செழிப்புள்ள காலத்தை கட்டளையிட்டு அவளையும் அவளுடைய குடும்பத்து மக்களையும் எலியா தீர்க்கத்தரிசியையும் போஷித்து வந்ததை போல எங்களையும் போஷிப்பீராக! உம்முடைய ஊழியர்களை உம்முடைய ஊழியங்களை தியானம் பண்ணுகிற தாங்குகிற உதவி செய்கிற எந்தவொரு சகோதரனையும் சகோதரியையும் நீர் ஆசிர்வதித்து சந்தோஷப்படுத்துவீராக! உம்முடைய நன்மைகள் அவர்களுக்கு ஏராளாமாய் கிடைக்க உம்முடைய கிருபை அவர்களோடு கூட இருப்பதாக! ஏசுவின் மூலம் ஜெபிக்கிறோம் நல்ல பிதாவே. ஆமென். ஆமென்.
ஆசிரியர்: போதகர் தேவசகாயம்