மனநிறைவு

இன்றைய நாளில் தாவீதின் ஜெபத்தை தியானிக்க போகிறோம்.  சங்கீதம் முப்பதினான்கு ஆறில், இந்த ஏழை கூப்பிட்டான்! கர்த்தர் கேட்டு அவனை அவன் நெருக்கங்களுக்கெல்லாம் நீங்களாக்கி இரட்சித்தார்.  இந்த ஏழைக் கூப்பிட்டால் கர்த்தர் அவனுடைய சத்தத்தைக் கேட்டு அவனை இரட்சித்தார் என்று மன நிறைவோடு ஆண்டவருக்கு நன்றி சொல்லுகிறதை நாம் பார்க்கிறோம்.

இஸ்ரவேல் ஜனங்களிலே எல்லாக் கோத்திரத்து மக்களுக்கும் நீதி செய்வதற்காக அவர்களுடைய பிரச்சனைகளை தீர்த்து வைப்பதற்காக பத்து பேருக்கு அதிபதி, ஐம்பது பேருக்கு அதிபதி, நூறு பேருக்கு அதிபதி, ஆயிரம் பேருக்கு அதிபதி என்று சொல்லி அதிபதிகள் ஒன்று, உறவுக்கள் ஒன்று, அதிபதிகள் எல்லாரும் ஒன்று அவர்கள் எல்லாரும் தன்னுடைய பதவியின் அந்தஸ்துனாலே எழைகளை அற்பமாக எண்ணுகிறார்கள்.  ஏழைகளினுடைய விண்ணப்பங்களுக்கு அவர்கள் செவிக்கொடுக்க மறுக்கிறார்கள்.  அப்படிப்பட்ட காலக்கட்டத்திலே இவ்விதமான மக்கள் திக்கற்றவர்கள் ஆதரவற்றவர்கள் அனாதைகள் யாருடைய உதவியை தேடிப்போவார்கள். ஜீவனுள்ள ஆண்டவரிடத்திலே சேருவதை தவிர வேறு வழியே இல்லை அதை தான் இங்கே தாவீது குறிப்பிட்டு சொல்லுகிறான். இந்த ஏழைக் கூப்பிட்டான் கர்த்தர் கேட்டு அவனை அவனுடைய இடுக்கங்களுக்கெல்லாம் இரட்சித்தார்.

கர்த்தரே நம்முடைய சத்தத்திற்கு செவி கொடுக்கிறவர். நம்முடைய இருதயத்தின் வேதனைகள் பாரங்கள் சஞ்சலங்கள்  எல்லாவற்றிற்க்கும் கர்த்தர் ஒருவரே பதில் கொடுக்கிற தேவனாக இருக்கிறார்.  அவரே நமக்கு அனுகூலமான காரியங்களை கட்டளையிடுபவராக இருக்கிறார்.  நம்மை ஆற்றுகிறவரும் தேற்றுகிறவரும் திடப்படுத்துகிறவரும் நம்முடைய ஆண்டவரே. ஆகவே அவருக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும் அவரை நாம் மகிமைப்படுத்த வேண்டும்.  நம்முடைய அந்தஸ்த்தினால் அல்ல, நம்முடைய பதவியினால் அல்ல, நம்முடைய எல்லா மேன்மைகளினாலும் அல்ல, நம்முடைய தாழ்மையிலே ஆண்டவர் நமக்கு உதவி செய்கிறார்.  தாழ்மையுள்ளவர்களுக்கு கர்த்தர் இரக்கம் பாராட்டுகிறார்.  சிறுமையானவர்களுக்கு ஆண்டவர் பதில் கொடுக்கிறார். ஆண்டவர் அவர்களை நிராகரிப்பதில்லை.

இரக்கமுள்ள ஆண்டவரே! நாங்கள் உம்மை துதிக்கிறோம்.  உகிதமான சூழ்நிலையிலே இருக்கிற மக்களை நீர் கண்ணோக்கி பார்ப்பீராக.  திக்கற்றவர்களுக்கும் ஆதரவற்றவர்களுக்கும் அனாதைகளுக்கும் நீர் புகழிடமாய் இருப்பீராக.  ஆண்டவரே! தங்களுடைய நெருக்கங்களில் மத்தியிலே, இடுக்கங்களுக்கு மத்தியிலே, மனவேதனைகளுக்கு மத்தியிலே உம்மை நோக்கி அவர்கள் கூப்பிடுகிற சத்தத்தை நோக்கி நீர் அதை கேட்டு அவர்களுடைய பிரச்சனைகளை நீர் தீர்த்து வைத்து, அவர்களுடைய வியாதிகளை நீர் அகற்றி போட்டு, கஷ்டங்கள் நஷ்டங்களை நீர் மாற்றி அமைத்து, நீர் அவர்களுக்கு நன்மைகளை கொடுத்து நீர் அவர்களை ஆசிர்வதிப்பீராக.  சாமாதானத்தின் தேவன் தம்முடைய பிள்ளைகள் கூட இருப்பீராக நீரே பெரிய காரியங்களை செய்யும்.  ஏசு கிருஸ்து மூலம் ஜெபிக்கிறோம் நல்ல பிதாவே. ஆமென்.  ஆமென்.

ஆசிரியர்: போதகர் தேவசகாயம்

Leave a Reply

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com