பாவம்
இன்றைய நாளின் ஜெபத்தை ஒபேதியாவின் ஜெபத்தின் மூலமாக தியானிக்க இருக்கிறோம். ஒன்று ராஜாக்கள் பதினெட்டாம் அதிகாரம் பதிமூன்றாம் வசனத்திலே ஏசேபேல் கர்த்தரின் தீர்க்க தரிசிகளை கொன்றுபோடுகிற பொழுது நான் கர்த்தருடைய தீர்க்கத்தரிசிகளாகிய நூறு பேரை ஒவ்வொரு கெபிலை ஐம்பது ஐம்பது பேராக ஒழித்து வைத்து அவர்களுக்கு அப்பமும் தண்ணீரும் கொடுத்து பராமரித்து வந்த என்னுடைய செய்கையை என் ஆண்டவனுக்கு அறிவிக்கப்படவில்லையோ என்று சொல்லி ஒபேதியா இந்த வார்த்தைகளை கூறுகிறதை நாம் பார்க்கிறோம்.
எலியா தீர்க்கதரிசிகளிடத்திலே தான் இந்த வார்த்தைகளை ஒபேதயா சொல்லுகிறான். இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாவும் ராஜாத்தியாகிய ஏசேபேலும் இஸ்ரவேல் ஜனங்களை பாகால் வணக்க வழிப்பாட்டிற்கு நேராக வழிநடத்தி செல்கிறார்கள். ராஜாவும் ராணியும் போட்டிப்போட்டு கொண்டு இஸ்ரவேல் ஜனங்களை வேறு வழிகளிலே திசைத்திருப்பி செல்வதற்கு பாவகரமான வழிகளிலே நடத்தி செல்வதற்கு போட்டிப்போட்டு கொண்டு செயல்படுகிறார்கள். அதுமட்டுமல்லாமல் கர்த்தருடைய தீர்க்கத்தரிசிகளையும் கொன்று போடுகிறதிலே மிகத்தீவிரம் காட்டுகின்றார்கள். அவர்களுடைய பாவம் பெருகுகிறது. அங்கே பஞ்சதியாண்டவர் கட்டளையிடுகிறார் தீர்க்கத்தரிசியாகிய எலியாவின் மூலமாக. அந்நாட்களிலே தான் அரண்மனை விசாரிப்புகாரானாக இருந்த ஒபேதியா கர்த்தருடைய தீர்க்கத்தரிசிகள் நூறு பேரை ஐம்பது ஐம்பது பேராக கெபிகளில் வைத்து அவர்களுக்கு அப்பமும் தண்ணீரும் கொடுத்து பாதுகாத்து பராமரித்து வருகிறார். இந்த நன்மையை கர்த்தர் தன்னுடைய தீர்க்கத்தரிசியாகிய எலியாவுக்கு வழிப்படுத்திக்காட்டவில்லையோ நான் இப்போது ஆகாவு ராஜாவின் கைகளிலே மாட்டிக் கொள்ள வேண்டுமோ என்று சொல்லி கதறி அழுகிறான். தன்னுடைய நெருக்கத்தை அங்கே சொல்லுகிறான்.
கர்த்தர் நம்முடைய அம்பாய குரலை கேட்கிறார். இருதயத்தினுடைய வேதனைகளைக் காண்கிற தேவன் விடுதலைக் கொடுப்பார். அவர் செய்கிற நன்மைகள் மறைக்கப்பட்டுப்போவதில்லை. நம்முடைய தியானங்கள் கர்த்தருடைய சமூகத்திலே ஏற்றுக்கொள்ளப்படும்.
கர்த்தாவே! இந்த ஒபேதியாவை போன்று என்னுடைய பாரமுள்ள இருதயத்தை வெளிப்படுத்துகிறோம். எங்களுக்கு ஏற்படுகிற விபரீதங்கள், விக்கினங்கள், நாசமோசங்கள் எல்லாவற்றிலும் நீர் மாற்றிபடவல்லவாராய் இருக்கிறீர். உங்கள் பிள்ளைகளுடைய தாழ்மையான ஜெபங்களை கேளும். உன்னுடைய நன்மையான கிரியைகளை அங்கீகரியும் நாங்கள் செய்கிற ஊழியங்களை அங்கீகரிப்பீராக! கர்த்தரை கண்டும் கர்த்தருடைய பணிவிடைக்காரர்களை கண்டும் தீர்க்கத்தரிசிகளை கண்டும் ஊழியர்களை கண்டும் உம்முடைய பிள்ளைகள் செய்கிற நன்மைகளை நினைத்து நீர் அவர்களை ஆசிர்வதிப்பீராக!
ஒரு கலசந்த நீர் கொடுக்கிறதுடைய கொடுக்கிறவனுக்கும் அதற்கேற்றிய பலன் கிடைக்கும் என்று நீர் சொன்னீரே! வாக்குமாறாத கர்த்தர் அவ்விதமான நன்மைகளை கொடுப்பீராக! எங்களையும் ஆசிர்வதிப்பீராக! இந்த தியானத்தை ஜெபிக்கிற ஒவ்வொருக்கும் உன்னுடைய நன்மைகளை கொடுத்து ஆசிர்வதிப்பீராக! சந்தோஷபடுத்துவீராக! ஏசுவின் மூலம் ஜெபிக்கிறோம் நல்ல பிதாவே. ஆமென். ஆமென்.
ஆசிரியர்: போதகர் தேவசகாயம்