பரிசுத்த வாழ்வு

இன்றைய நாளில் தாவீதின் ஜெபத்தை தியானிக்க இருக்கிறோம். சங்கீதம் பதினாறு ஒன்று இரண்டிலே என் நெஞ்சமே! நீர் கர்த்தரை நோக்கி, தேவரீர்! என் ஆண்டவராய் இருக்கிறீர். என் செல்வம் உமக்கு வேண்டியதாய் இராமல் பூமியில் உள்ள பரிசுத்தவான்களுக்கும் நான் என் முழு பிரியத்தை வைத்திருக்கிற மகா ஆத்மாக்களுக்கும் அது வேண்டியதாய் இருக்கிறது என்று சொன்னால் தாவீது இவ்விதமாக ஜெபிக்கிறான்.

தேவரீர்! நீர் என்னுடைய பணத்தை செல்வத்தை நீர் எதிர்பார்க்கவில்லை. என்னுடைய வாழ்வை பரிசுத்தமாக்க வேண்டும் என்று விரும்புகிறீர். உண்மையுள்ள வாழ்வு வாழ வேண்டும் என்று நீர் விரும்புகிறீர். உமக்கு உத்தம சாட்சிகளாக ஜுவிக்க வேண்டும் என்று விரும்புகிறீர். நான் பரிசுத்தராய் இருக்கிறதை போல நீங்கள் பரிசுத்தராய் இருங்கள் என்று சொன்ன ஆண்டவருக்கு இந்த பரிசுத்தமுள்ள வாழ்வே மகிமையான செல்வமாக காணப்படுகிறது. அதே வேளையிலே மனிதன் சம்பாதிக்கிற பொருளோ, செல்வமோ, பணமோ எதுவாக இருந்தாலும் உலகத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிற பரிசுத்தவான்களுக்கோ நீதிமான்களுக்கோ கர்த்தருடைய பிள்ளைகளுக்கோ அது தேவைப்படலாம். அவர்களுக்கு நாம் உதவி செய்தால் ஆண்டவருக்கு அது மகிமையாகக் காணப்படும். நாம் கொடுத்து மகிழ்ந்து சந்தோஷப்படுகிறபொழுது கர்த்தரும் நம்மை பார்த்து மகிழ்கிறார்.

ஆண்டவர் நமக்கு வேண்டிய எல்லா நன்மைகளையும் தருவார். எல்லா ஸ்லாக்கியங்களையும் கொடுத்து நம்மை சந்தோஷப்படுத்துவார். மகிமையுள்ள தேவன் நாம் கொடுக்கிற பொருளிலே அல்ல, நாம் கொடுக்கிற கனிவுள்ள வாழ்வினாலே மகிழ்ச்சியடைய விரும்புகிறார். அந்த வாழ்வு வாழ கர்த்தர் நமக்கு அருள் பாராட்டுவாராக. இரக்கமுள்ள ஆண்டவரே! இந்த வேளையிலே எங்களை தாழ்த்தி அற்பணிக்கிறோம். எம்முடைய செல்வம் அல்ல, எம்முடைய பணம் அல்ல, பொருள் அல்ல. கனிவுறுகிற வாழ்வே உமக்கு முக்கியம். அன்புள்ள வாழ்க்கையே, பரிசுத்தமுள்ள வாழ்க்கையே, நீதியுள்ள வாழ்க்கையே, நியாயமுள்ள வாழ்க்கையே உமக்கு விருப்பம். அதிலே நாங்கள் கனிகொடுத்து உம்மை மகிழ்விக்க நீர் எங்களுக்கு அருள் செய்வீராக. இவ்வுலகத்திலே நாங்கள் சம்பாதிக்கிற பணமும் பொருளும் இவ்வுலகத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிற பரிசுத்தவான்களுக்கோ நீதிமான்களுக்கோ மகாத்மாக்களுக்கோ உதவியாக இருக்கட்டும்.

நாங்கள் எங்கள் தேவனுடைய நாமத்தை மகிமைப்படுத்த நீர் எங்களுக்கு அருள் செய்வீராக. இந்நாளின் ஜெபத்திலே பங்கு கொண்டிருக்கிற ஒவ்வொரு பிள்ளைகளை நீர் ஆசிர்வதிப்பீராக. கர்த்தர் தம்முடைய பிள்ளைகளுக்கு போதுமானவராய் இருப்பீராக. ஏசு கிறிஸ்து மூலம் ஜெபிக்கிறோம் நல்ல பிதாவே. ஆமென். ஆமென்.

ஆசிரியர்: போதகர் தேவசகாயம்

Leave a Reply

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com