பட்டுபோன மரம்

இன்றைய நாளில் பேதுருவின் வார்த்தைகளை தியானிக்கப் போகிறோம். மார்க் பதினொராம் அதிகாரம் இருபத்தி ஓறாம் வசனத்திலே ரபி, யுதோ நீர் சபித்த அத்திமரம் பட்டுபோயிற்று. இயேசுவே! நீர் சபித்த அத்திமரம் பட்டுபோயிற்று. பசியாற வேண்டும் என்று சொல்லி அந்த மரத்தை தேடி போனீரே, அங்கே எந்த பலனும் கிடைக்காதபடியினால் நீர் அந்த மரத்தை சபித்துபோட்டீர். அது இப்பொழுது பட்டு போயிற்று. அது உயிரோடு இல்லை என்று சொல்லி பேதுரு ஏசுவினிடத்திலே அந்த மரத்தை சுட்டிகாட்டி பேசுகிறதை நாம் பார்க்கிறோம்.

அத்திமரத்தை படைத்தவர் ஏசு கிறிஸ்துவாகிய ஆண்டவர். மனுக்குலத்தை படைத்தவரும் அவர்தான். ஒரு நன்மை வரும். ஒரு நாட்டிற்கு ஒரு தேசத்திற்கு ஒரு குடும்பத்திற்கு ஒரு மக்களுக்கு நன்மை வரும் என்று சொல்லி அவர் நம் ஒவ்வொருவரையும் எச்சரிக்கிறார். நாம் பலன் கொடுக்க வேண்டும். படைத்த தேவனுடைய மன விருப்பங்களை நாம் நிறைவேற்ற வேண்டும். என்ன நோக்கத்தோடு, என்ன திட்டத்தோடு கூட நம்மை உருவாக்கினாரோ படைத்தாரோ அந்த திட்டத்திற்கு நாம் ஆயத்தமாக இருக்க வேண்டும். ஆகவே பட்டுபோன வாழ்வு நம்மிலே இருந்து அகல வேண்டும். பிரயோஜனமற்ற காரியங்கள் நம்மை விட்டு அகன்று போக வேண்டும். மத்தேயு இருபத்தாறு முப்பதில், பிரயோஜனமற்ற ஊழியக்காரனாகிய இவனை புறம்பான இருளிலே தள்ளிபோடுங்கள். அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாகியிருக்கும் என்று ஏசு சொல்கிறதை நாம் பார்க்கிறோம்.

பலன் கொடுக்காத ஒரு மனிதன் கிறுதாவாக வாழ்கிறதாலே பிரயோஜனமில்லை. அவனை புறம்பான இருளிலே தள்ளி போடுங்கள் என்று ஆண்டவர் சொல்கிறார். அதிகமான கோபத்திற்கு நாம் ஆளாகாதபடி அவருடைய கிருபைக்கு நம்மை ஒப்பு கொடுக்க வேண்டும். ஆண்டவரே! என்னிலே இருக்கிற குறைபாடுகளை மன்னியும். என்னிடத்திலே இருக்கிற நீடுதலான காரியங்களை நீர் அகற்றி போடும். உமக்கு பிரயோஜனமான பிள்ளைகளாக எங்களை எடுத்து பயன்படுத்தும் என்று சொல்லி நாம் வேண்டிக்கொள்கிறோம். நம்மை தாழ்த்துவோம். நம்முடைய குற்றங்குறைகளை அறிக்கையிடுவோம். ஆண்டவர் நம்முடைய ஜெபத்திற்கு பதில் கொடுப்பார்.

இரக்கமுள்ள ஆண்டவரே! இந்த வார்த்தைகளை நாங்கள் நினைவு கூர்ந்து பார்க்கிறோம் கர்த்தாவே. நாங்கள் ஒவ்வொருவரும் உம்முடைய சாபத்திற்கு உள்ளாகக் கூடாது. உம்முடைய துக்கத்தை நாங்கள் அதிகரிக்கக்கூடாது கர்த்தாவே. உமக்கு கோபத்தை உண்டாக்குகிறவர்களாய் நாங்கள் மாறிவிடக்கூடாது கர்த்தாவே. கீழ்படிதலை தாரும். தாழ்மையை தாரும். பொறுமையை தாரும். கனிவுள்ள வாழ்வைத் தாரும். அவை உம்மை திருப்திப்படுத்தட்டும். உம்மை சந்தோஷப்படுத்தட்டும் கர்த்தாவே.

நீர் எங்கள் ஒவ்வொருவருடைய ஜெபத்திற்கு ஏற்ற பலனை கொடுப்பீராக. உம்முடைய ஆளுகைக்குள்ளாக எங்களை வைத்து பாதுகாத்து கொள்வீராக. உம்முடைய சட்டைகளின் நிழலிலே வைத்து எங்களை காத்து கொள்வீராக. கர்த்தர் பெரிய காரியங்களை செய்யும் ஏசு கிறிஸ்து மூலம் ஜெபிக்கிறோம் நல்ல பிதாவே. ஆமென். ஆமென்.

ஆசிரியர்: போதகர் தேவசகாயம்

Leave a Reply

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com