நீடுதல்

இன்றைய நாளில் தாவீதின் ஜெபத்தை தியானிக்கப் போகிறோம். சங்கீதம் முப்பத்தியொன்பது எட்டில், என் நீடுதல்கள் எல்லாவற்றிலும் இருந்து என்னை விடுதலையாக்கும். மூடனுடைய நிந்தனைக்கு என்னை ஒப்புகொடாதேயும். தாவீது தன்னுடைய குறைவுகளை அறிக்கையிடுகிறான். நான் நீடுதல் செய்திருக்கிறேன். என் ஆண்டவருடைய வார்த்தைகளை நான் கடைப்பிடிக்கவில்லை. அவருடைய கற்பனைகளை அவருடைய சாட்சி பிரமாணங்களை நான் பின்பற்றவில்லை. நான் அதை அற்ப்பமாக எண்ணி அதை மீறி நடந்து வந்திருக்கிறேன்.

என்னுடைய மனதையும், மனசாட்சியையும் நான் கடினப்படுத்தி கொண்டு நீடுதலான காரியங்களை நான் செய்திருக்கிறேன். இன்னும் சொல்லப்போனால் என்னுடைய நீடுதலினாலே ஒவ்வொரு காரியங்களுக்கும் அடிமைப்பட்டுகிடக்கிறேன். என்னுடைய பழக்கவழக்கங்களினாலே நான் கட்டப்பட்டு இருக்கிறேன். பழைய பாவங்களிலே கட்டுண்டு கிடக்கிறேன். அது எனக்கு வேதனையை கொடுக்கிறது. அதிலிருந்து எனக்கு விடுதலையை தாரும். அறிக்கையிடுகிறேன், மனஸ்தாபப்படுகிறேன். உம்முடைய வார்த்தைகளுக்கு திரும்பவும் கீழ்படிவேன் என்று சொல்லி என்னை தாழ்த்தி அற்பணிக்கிறேன். ஆண்டவரே! நீர் என்னை மன்னிக்காவிட்டால் என் நீடுதல்களை நீர் என்னிலே இருந்து எடுத்துபோடாவிட்டால் மூடர்கள் என்னை நிந்திப்பார்கள். உலகத்து மக்கள் என்னை நிந்திப்பார்கள். அவ்விதமான ஒரு அவச்சொல் கர்த்தாவே எனக்கு உண்டாகாதபடி உம்முடைய பரிசுத்தக் கரத்தினால் என்னைத் தொட்டு என் நீடுதல்களை என்னைவிட்டு அகற்றி என் வாயின் நீடுதல்கள், என் கண்களின் நீடுதல்கள், என் இருதயத்தினுடைய நீடுதல்கள், என் கால்களினுடைய நீடுதல்கள் எல்லாற்றிருலும் இருந்து விடுதலை கொடுத்து என்னை உம்முடைய சத்திய வழியிலே, நீதியின் வழியிலே வழிநடத்திச் செல்வீராக. உமக்கு மகிமை உண்டாக என்னை நடத்திச் செல்வீராக. உம்முடைய கிருபை என்னோடுகூட இருக்கட்டும். இரக்கமுள்ள ஆண்டவரே! என்னை தாழ்த்தி அற்பணிக்கிறேன். இன்னும் ஒருமுறை உமக்கு முன்பாக என்னை அற்பணிக்கிறேன். கிருபையாக இரும். பரிசுத்தமுள்ள ஆண்டவர் தம்முடைய பரிசுத்த இரத்தத்தை அடியேனுடைய அருகிலே சிந்தி உம்முடைய கரங்களினால் என்னை கழுவி, என்னை சுத்தம் பண்ணும். உமக்கு உகந்த பாத்திரமாக மாற்றும். இல்லையென்று சொன்னால் சத்ரு என்னை நிந்திப்பான். மூடர்கள் என்னை நிந்திப்பார்கள். கர்த்தாவே! நான் வெட்கத்திற்கு உள்ளானவனாக மாறுவேன். அவ்விதமான பரிதாபமான நிலையில் இருந்து என்னை மீட்டுகொள்வீராக. இரட்சித்துக்கொள்வீராக. உம்முடைய பிள்ளையாக மாற்றுவீராக. இரட்சண்யத்தின் சந்தோஷத்தை கொடுத்து ஆசிர்வதிப்பீராக. ஏசு கிறிஸ்து மூலம் ஜெபிக்கிறோம் நல்ல பிதாவே. ஆமென். ஆமென்.

ஆசிரியர்: போதகர் தேவசகாயம்

Leave a Reply

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com