நம்பிக்கை
இந்த நாளில் தாவீதின் ஜெபத்தை தியானிக்கப் போகிறோம். சங்கீதம் முப்பத்தியென்று ஒன்றில், கர்த்தாவே! உம்மை நம்பியிருக்கிறேன். நான் ஒருகாலும் வெக்கம் அடையாதபடி செய்யும். உமது நீதி நிமித்தம் என்னை விடுவிய்யும். நான் உன்னை நம்பியிருக்கிறேன் என்று தாவீது மனதுருக்கத்தோடு கூட சொல்கிறான். தன்னுடைய நம்பிக்கையை வெளிப்படுத்துகிறான். உம்மையே தஞ்சமாக்கி கொண்டிருக்கிறேன்.
நீர் ஒருவரே எமக்கு உதவி செய்யக் கூடிய தேவன் என்று சொல்லி அவன் தன் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறான். நான் வெட்கப்பட்டு போகாதபடிக்கு காத்துக்கொள்வீராக. என்னுடைய சமூதாயத்திலே என்னுடைய ஜனங்களுக்கு மத்தியிலே உம்மை நம்பியிருக்கிற நான் வெட்கப்பட்டு போய் விடக் கூடாது. என் இனத்தாரோ, என்னுடைய எதிராளிகளோ என்னுடைய சத்ருக்களோ என்னை நெம்பித்து, தூஷித்து, ஆண்டவரே! என்னை நோகப்பண்ணிவிடக்கூடாது கர்த்தாவே! என்னுடைய நம்பிக்கையை நீர் உறுதிப்பண்ணுவீராக.
என்னுடைய விசுவாசத்திற்கேற்ற பலனை கொடுத்து என்னை சந்தோஷப்படுத்துவீராக. துக்கங்களை மாற்றி, கவலைகளை மாற்றி, கண்ணீரைத் துடைத்து சகல ஆறுதலையும் தேறுதலையும் கொடுத்து திடப்படுத்துவீராக. தைரியப்படுத்துவீராக. ஆண்டவரே! நீர் நீதி செய்கிற தேவன். நீர் உண்மையுள்ள தேவன். உத்தமமாய் உம்மை நோக்கி கூப்பிடுகிறவர்களுக்கு நீர் செவிசாய்க்கிற தேவன். நீர் அவர்களுக்கு விடுதலை செய்வீராக. இவ்விதமான நெருக்கங்களிலே கடந்து செல்கிற எங்களை தாழ்த்தி அற்பணிக்கிறோம். கிருபைக்காக மன்றாடுகிறோம்.
கர்த்தாவே! எங்களை நோக்கி பாரும். தாவீதுனுடைய நம்பிக்கைக்குரியவராக காணப்பட்டீர். அவருடைய விசுவாசத்தை நீர் வர்த்திக்கப்பண்ணினீர். சத்ருக்கள் மத்தியிலே அவன் வெட்கப்பட்டு போகாதபடிக்கு அவனுக்கு நல்ல அனுகூலமான காரியங்களை கட்டளையிட்டீர். அதேபோல எங்களுடைய நாட்களிலும் எங்களுக்கும் உதவி செய்வீராக. எங்களுக்கு எந்த நிந்தைகளும் அவமானங்களும் வராதபடி நீர் காத்துக்கொள்வீராக. உம்முடைய வல்லமையுள்ள கரத்தினால் எங்களுக்கு நீதி செய்வீராக. எல்லா அநியாயத்தையும் அக்கிரமக் கிரியைகளையும் மாற்றிப்போட்டு உம்முடைய தயையுள்ள கரத்தினால் எங்களை தாங்கி திடப்படுத்தி, தைரியப்படுத்தி ஆசிர்வதிப்பீராக. நீரே எங்களுக்கு போதுமானவராய் இருந்தருளும். உம்முடைய நன்மைகளினால் எங்களை சந்தோஷப்படுத்தும். ஏசு கிறிஸ்து மூலம் ஜெபிக்கிறோம் நல்ல பிதாவே. ஆமென். ஆமென்.
ஆசிரியர்: போதகர் தேவசகாயம்