தமிழகத்தில் +2 பொது தேர்வில் 91.3% மாணவ மாணவிகள் தேர்ச்சி!

தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வில் 91.3% மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். முதன்முறையாக இவ்வாண்டு 600 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்ட இந்த பொது தேர்வில் மாணவிகள் 93.64% பேரும் மாணவர்கள் 88.57% பெரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்ட வாரியாக கணக்கிடப்பட்ட சதவிகிதத்தில் திருப்பூர் மாவட்ட மாணவ மாணவிகள் 95.37% தேர்ச்சி பெற்று முதலிடத்தில் உள்ளனர். இதற்கு அடுத்ததாக ஈரோடு மற்றும் பெரம்பலூர் மாவட்ட மாணவ மாணவிகள் 95.23% மற்றும் 95.15% தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்த ஆண்டு தமிழகத்தில் 1281 பள்ளிகள் 100% தேர்ச்சியை பெற்றுள்ளன. தமிழகத்தில் மொத்தம் உள்ள 7083 மேல்நிலை பள்ளிகள் உள்ளன. இவற்றில் 1281 (18.1%) பள்ளிகளில் உள்ள அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. மேலும் அரசு பள்ளிகளில் 3,34,592 மாணவர்கள் +2 பொது தேர்வு எழுதினர். இதில் 2,83,609 (84.8%) மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த ஆண்டு அறிவியல் பாடம் தேர்விலேயே மாணவர்கள் அதிக தேர்ச்சி விகிதம் பெற்றுள்ளனர். கலை மற்றும் வணிகவியல் பாடப்பிரிவுகளில் சுமார் 80% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் 2697 மாற்றுத்திறனுள்ள மாணவ மாணவிகள் இந்த ஆண்டு தேர்வு எழுதினர். இதில் 2404 (89.1%) மாற்றுத்திறனுள்ள மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

வருகிற சனிக்கிழமை 20ம் தேதி முதல் 26ம் தேதி வரை மாணவ மாணவியர் மதிப்பெண் பட்டியலை பெற்றுக்கொள்ளலாம். விரும்புவோருக்கு விடைத்தாள் மதிப்பெண்கள் மறுக்கூடலுக்கு வருகிற வாரம் 22ம் தேதி முதல் 24ம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம். தேர்வில் வெற்றியை தழுவ விட்ட மாணவர்கள் ஜூன் மாதம் 6ம் தேதி முதல் 13ம் தேதி வரை மறுதேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வருகிற ஏப்ரல் மாதம் 29ம் தேதி வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

+2 வகுப்பு பொது தேர்வு முடிவுகள்:

www.tnresults.nic.in

www.dge.tn.nic.in

www.dge1.tn.nic.in

www.dge2.tn.nic.in

Leave a Reply

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com