ஜுவ ஆத்மா
இன்றைய நாளில் தாவீதின் இன்னொரு ஜெபத்தை தியானிக்கப் போகிறோம். சங்கீதங்களின் புஸ்தகம் ஒன்பதாம் அதிகாரம் பத்தொன்பதாவது, இருபதாவது வசனத்திலே, எழுந்தருளும் கர்த்தாவே! மனுஷன் பலன் கொள்ளாதபடி செய்யும். ஜாதிகளை மனுஷன் வென்று அறியும்படிக்கு அவர்களுக்கு பயம் உண்டாக்கும் கர்த்தாவே! எழுந்தருளும் கர்த்தாவே மனுஷர் பலனலியாதபடி செய்யும். தேவனாகிய ஆண்டவர் களிமண்ணிலே ஆதாமை படைத்தார்.
அவருடைய நாசியில் ஜுவ சுவாசத்தை ஊதினார். அவன் ஜுவ ஆத்மா ஆனான். ஆதாமின் பிள்ளைகளாக நாமும் இருக்கிறோம். கர்த்தர் ஜுவனை கொடுத்தபடியினால் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். அவருடைய கிருபை இல்லாவிட்டால் நாம் மண்ணாக காய்ந்துபோன இலை போன்று நாம் மாறிப்போவோம். இவ்விதமாக காய்ந்து வெயிலிலே காய்ந்து அடுப்பிலே போடப்படுகிற புழுவுக்கு சமானமானவர்களாக நாம் இருந்தாலும் நாம் பெருமையோடும் மேட்டுமையோடும் அகங்காரத்தோடும் ஆணவத்தோடும் நாம் வாழ்கின்றோம். கர்த்தருடைய கிருபையை நாம் உணர்கிறதில்லை. இதை சங்கீதக்காரன் அறிந்து சொல்கிறான். மனுஷன் பலன் கொள்ளாபடி செய்யும். வல்லமையுள்ள ஆண்டவருக்கு முன்பாக ஜுவனுள்ள ஆண்டவருக்கு முன்பாக நான் ஒன்றுமில்லை என்பதை உணரச்செய்யுங்கள் என்று சொல்கிறான்.
பிரஜாதிகள் தங்களை மனுஷர் என்று அறியும்படிக்கு அவர்களுக்கு பயம் உண்டாக்கும் என்று சொல்கிறான். தேவன் இல்லையென்று மதிகளும் சொல்லி கொள்கிறான். அதே போன்ற மக்களாக மணமக்களாக நாம் இருந்துவிட கூடாது. படைத்தான். படைப்பெல்லாம் மனுவுக்காக மனுவை படைத்தான். தன்னை அறிந்து வணங்கு என்று ஒரு ஸ்லோகன் உண்டு. அந்த வார்த்தையின் படி படைத்த தேவனை அறிவோம். தேவனுள்ள ஆண்டவருக்கு நம்மை அற்பணிப்போம். அவருடைய கிருபை நம்மோடுகூட இருப்பதாக. அவரே நம்மை வாழ்விக்கிறவர். உணர்வு பயத்தை எங்களுக்கு தாரும்.
கர்த்தாவே! நீர் படைத்த தேவன் உமக்கு முன்பாக நாங்கள் ஒன்றுமில்லை. நீர் எங்களை வாழ்விக்கிறீர். நீர் எங்களை நடத்தி செல்கிறீர். அந்த தயையுள்ள கரம் எங்களோடுகூட இருக்கட்டும். தாழ்மையைத் தாரும். நிதானத்தை தாரும். தேவ பயத்தை கட்டளையிடும். உமக்கு மகிமை செலுத்த அருள் செய்வீராக. கர்த்தாவே இந்த தியான ஜெபத்தை ஏறெடுக்கிற ஒவ்வொரு பிள்ளைகளுக்கு வேண்டிய நன்மையை கொடுத்து அவர்களை ஆசிர்வதித்து அவர்களை சந்தோஷப்படுத்த வேண்டுமாக ஜெபிக்கிறோம். ஏசு கிறிஸ்து மூலம் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே. ஆமென். ஆமென்.
ஆசிரியர்: போதகர் தேவசகாயம்