மக்கள் மத்தியில் ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு வரவேற்பு.
[ad_1]
பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக் கொண்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் காமினி லொகுகே குறிப்பிடுகையில், ஜனாதிபதியின் செயல்பாடுகளை விமர்சிக்கும் உரிமை எதிர்க்கட்சிக்கு கிடையாது. மத்திய வங்கி தொடர்பில் ஜனாதிபதி எடுத்த நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அரசியல் தேவைகளை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டிய அவசியம் ஜனாதிபதிக்கு கிடையாது.
மத்திய வங்கியின் ஆளுநர் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி வழங்கிய பணிப்புரை தற்போது பிரதான பேச்சு பொருளாக காணப்படுகிறது. ஜனாதிபதி அரசு ஊழியர்களை அச்சுறுத்துவதாக எதிர்கட்சியினர் விமர்சனங்களை வைக்கிறார்கள். ஜனாதிபதியின் செயற்பாடுகளை விமர்சிக்கும் உரிமை எதிர்க்கட்சிக்கு கிடையாது. அமைச்சரவையின் தலைவர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி நிதி நிலை தொடர்பான தீர்மானங்களை எடுத்துள்ளார். இதில் அரசியல் லாபம் தேடிக்கொள்ள வேண்டிய அவசியம் அவருக்கு கிடையாது. 2019ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் தீர்மானங்களே பொதுதேர்தலில் பொதுஜன பெரமுனவிற்கு கிடைக்கும என்று கூறினார்.
[ad_2]