சிலுவையின் வார்த்தை 07:01 | பிதாவே என் ஆவியை உம்முடைய கைகளில் ஒப்புவிக்கிறேன்.
லூக்கா 23:46 இயேசு பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச் சொன்னார்; இப்படிச் சொல்லி ஜீவனை விட்டார்.
இயேசு சிலுவையில் சொன்ன ஏழாம் வார்த்தை. முதல் வார்த்தையில் “பிதாவே இவர்களுக்கு மன்னியும்” என்றார். இரண்டாவதாக, “இன்றைக்கு நீ என்னுடனேகூட பரதீஸிலிருப்பாய்” என்றார். மூன்றாம் வார்த்தையில், “ஸ்திரீயே, அதோ உன் மகன்; சீஷனே, அதோ உன் தாய்” என்று கூறினார். நான்காம் வார்த்தையில், “என் தேவனே, என் தேவனே, ஏன் என்னை கைவிட்டீர்” என்றார். ஐந்தாம் வார்த்தையில், “தாகமாயிருக்கிறேன்” என்றார். ஆறாம் வார்த்தையில், “முடிந்தது” என்றார். ஏழாவதாக, “பிதாவே, என் ஆவியை உம்முடைய கைகளில் ஒப்புவிக்கிறேன்” என்றார்.
I. ஆவி தன்னைத் தந்த தேவனிடத்தில் செல்லுகிறது.
பிதாவாகிய தேவன் குமாரனாகிய கிறிஸ்துவை இந்த பூமிக்கு அனுப்பினார். தேவன் தனக்குக் கொடுத்த பணிகளை எல்லாவற்றையும் செய்து முடித்துவிட்டு தன்னை அனுப்பினவரிடத்தில் தன ஆவியை ஒப்படைக்கிறார்.
பிரசங்கி 12:7 இவ்விதமாய் மண்ணானது தான் முன்னிருந்த பூமிக்குத் திரும்பி, ஆவி தன்னைத் தந்த தேவனிடத்திற்கு மறுபடியும் போகாததற்கு முன்னும் அவரை உன் வாலிப பிராயத்திலே நினை.
ஆதி. 3:19 நீ பூமியிலிருந்து எடுக்கப்பட்டபடியால்……. நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய் என்றார்.
தேவன் மண்ணினாலே மனுஷனை உண்டாக்கி ஜீவ சுவாசத்தை அதன் நாசியிலே ஊதினார். மனிதன் ஜீவ ஆத்துமாவானான். நம்முடைய சரீரம் மண்ணாயிருக்கிறது. இந்த மண்ணினாலே உண்டாக்கப்பட்ட சரீரத்திற்குள் தேவன் நம்முடைய ஆவியை – ஜீவ சுவாசத்தைக் கொடுத்து உயிரடையச் செய்தார்.
சாவு ஏற்படும் பொழுது மண்ணான சரீரம் மண்ணுக்குத் திரும்புகிறது. மண்ணான சரீரத்திற்குள்ளிருந்து ஆவி தன்னைத் தந்த பிதாவினிடத்தில் சொல்லுகிறது.
தொடரும்…
புத்தகம்: சிலுவையின் ஏழு வார்த்தைகளும் ஆசிர்வாதங்களும். படம்: வணிக பயன்பாட்டிற்கு இலவசம், பட உரிமையாளரை மேற்கோள் காட்ட வேண்டியதில்லை, via CC0 கிரியேடிவ் காமன்ஸ், பிக்சாபே.காம் வலைத்தளத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது.