சிலுவையின் வார்த்தை 05:03 | தாகமாயிருக்கிறேன்.
2. போர்ச் சேவகர்களே, உங்கள் மேல் தகமாயிருக்கிறேன்.
மத்தேயு 27:27 தேசாதிபதியின் போர்ச் சேவகர் போர்ச் சேவகரின் கூட்டம் முழுவதையும் அவரிடத்தில் கூடி வரச்செய்து வ.28 அவர் வஸ்திரங்களைக் கழற்றி சிவப்பான மேலங்கியை அவருக்கு உடுத்தி வ.29 முள்ளுகளால் ஒரு முடியைப் பின்னி அவர் சிரசின் மேல் வைத்து, அவர் வலது கையில் ஒரு கோலைக் கொடுத்து இயேசு முன்பாக முழங்காற் படியிட்டு, யூதருடைய ராஜாவே வாழ்க என்று அவரைப் பரியாசம் பண்ணி, வ.30 அவர்மேல் துப்பி, அந்தக் கோலை எடுத்து, அவரைச் சிரசில் அடித்தார்கள்.
போர்ச் சேவகர்கள், உங்கள் போரில் ஒரு தாகமுண்டு. மாற்கு 5:27 யேசுவைக் குறித்து கேள்விப்பட்டு நான் அவருடைய வஸ்திரங்களையாகிலும் தொட்டால் சொஸ்தமாவேன் என்று அவருடைய வஸ்திரத்தைத் தொட்டாள். உடனே அவளுடைய உதிரத்தின் ஊறல் நின்றுபோயிற்று; அந்த வேதனை நீங்கி ஆரோக்கியமடைந்ததை அவள் தன் சரீரத்தில் உணர்ந்தாள். என் வஸ்திரத்தின் ஓரத்தை விசுவாசத்தோடு தொட்ட பெரும்பாடுள்ள ஸ்த்ரீ பூரண சுகமடைந்தாள். சந்தோஷமாய்த் திரும்பிப்போனாள். ஆனால் போர்ச் சேவகர்களாகிய நீங்கள் என் வஸ்திரத்தை அற்பமாக எண்ணினீர்கள். பரியாசம் பண்ணினீர்கள். விசுவாச நம்பிக்கையோடு என் வஸ்திரங்களைக் கழற்றியிருப்பீர்களானால் உங்களிலே ஒரு அற்புதம் நடந்திருக்கும். இதனால் உங்கள் பேரில் தாகமாயிருக்கிறேன்.
மத்தேயு 26:7 ஒரு ஸ்த்ரீ விலையேறப்பெற்ற பரிமள தைலமுள்ள வெள்ளைக்கல் பரணியைக் கொண்டு வந்து, அவர் போஜன பந்தியிலிருக்கும்போது அந்த தைலத்தை அவர் சிரசின்மேல் ஊற்றினாள். வ.13 இந்த சுவிசேஷம் உலகத்தில் எங்கெங்கே பிரசங்கிக்கப்படுமோ அங்கங்கே இவளை நினைப்பதற்காக இவள் செய்ததும் சொல்லப்படும் என்று மெய்யாகவே உங்களுக்குத் சொல்லுகிறேன்.
ஒரு பெண் யேசுவாகிய என் தலையில் வெள்ளைக்கல் பரணியை ஊற்றினதினால் உலகம் உள்ளளவும் நீங்காத புகழைப் பெற்றாள். ஆனால் பெலசாலிகளும், ராணுவ வீரருமாகிய நீங்களோ முட்களினால் ஒரு கிரீடத்தைச் செய்து என் தலையில் வைத்து அவகீர்த்தியைப் பெற்றுக் கொண்டீர்களே! போர்ச் சேவகராகிய நீங்கள் அனைவரும் என்னை ஒரு எதிரியாக, பகையாளியாக நினைத்து என்னை அடித்து காயப்படுத்தி சிலுவையில் ஏற்றி மரண தண்டனை கொடுத்து ஜெயித்துவிட்டோம் என்று கர்வம் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் உண்மையில் தோற்றுப் போனது நீங்கள்தான். நீங்கள் நடப்பித்த கிரியைகளினால் ஒரு நன்மையோ, ஆசீர்வாதமோ, ஒரு அற்புதமோ உங்கள் வாழ்க்கையில் நடக்கவில்லை. இன்னொரு வாய்ப்பு உங்களுக்கு கிடைக்காதே போகும். எனவே உங்களைக் குறித்து தாகமாயிருக்கிறேன்.
யோவான் 4:5 யாக்கோபு தன் குமாரனாகிய யோசேப்புக்கு கொடுத்த நிலத்துக்கு அருகே இருந்த சமாரியாவிலுள்ள சீகார் என்னும் ஊருக்கு வந்தார். வ.6 அங்கே யாக்கோபுடைய கிணறு இருந்தது. வ.8 நீர் யூதனாயிருக்க சமாரியா ஸ்திரீயாகிய என்னிடத்தில் தாகத்துக்குத்தா என்று எப்படி கேட்கலாம் என்றாள்.
தாகத்துக்கு தண்ணீர் தா என்று இயேசு கேட்டதற்கு சமாரியா ஸ்த்ரீ வாக்குவாதம் பண்ணி நேரத்தைக் கடத்தி அவருடைய தாகத்தை அதிகரிக்கச் செய்து அவரை நாவறண்டு சாகப் பண்ணலாம் என்று நினைத்தாள். ஆனால் உண்மையில் தாகம் சமாரியா ஸ்திரீக்குத்தான் ஏற்பட்டது.
வ.13 இயேசு அவளுக்குப் பிரதியுத்திரமாக: இந்தத் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கு மறுபடியும் தாகமுண்டாகும்.
வ.14 நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது. நான் அவனுக்கு கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்திய ஜீவ காலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும் என்றார்.
வ.15 அந்த ஸ்த்ரீ அவரை நோக்கி: ஆண்டவரே, எனக்குத் தாகமுண்டாகாமலும், நான் இங்கே மொண்டு கொள்ள வராமலிருக்கும்படி அந்தத் தண்ணீரை எனக்கு தரவேண்டும் என்றாள்.
சமாரியப் பெண் கேட்ட நித்திய, ஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றை இயேசு அவளுக்குக் கொடுத்தார். அவள் வாழ்வு மாறியது. அவளுடைய கசப்புள்ள வாழ்க்கையை இயேசு மாற்றினார். ஆனால் போர்ச் சேவகர்களாகிய நீங்கள் தாகமாயிருக்கிறேன் என்று இயேசு கூறியதைக் கேட்டவுடன் கசப்புக் காடியைக் கொடுத்து அவரை ஏமாற்றிவிடலாம் என்று நினைத்தீர்கள். ஆனால் தாகம் உங்களுக்குத்தானே ஏற்பட்டது. அதனால்தான் இயேசு போர்ச்சேவகர்களை நோக்கி தாகமாயிருக்கிறேன் என்கிறார்.
தொடரும்…
புத்தகம்: சிலுவையின் ஏழு வார்த்தைகளும் ஆசிர்வாதங்களும்.
படம்: By Jackmac34 [வணிக பயன்பாட்டிற்கு இலவசம், பட உரிமையாளரை மேற்கோள் காட்ட வேண்டியதில்லை], via CC0 கிரியேடிவ் காமன்ஸ், பிக்சாபே.காம் வலைத்தளத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது.