சிலுவையின் வார்த்தை 05:02 | தாகமாயிருக்கிறேன்.
1. மனந்திரும்பாத கள்ளன் மேல் இயேசு தாகமாயிருக்கிறார்
அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டார் என்பதற்கு அடையாளமாக இரண்டு கள்ளர்களுக்கு மத்தியில் இயேசு சிலுவையில் அறையப்பட்டார். இந்தக் காட்சியைக் கண்டு சந்தோஷப்படுவதற்காக வந்தவர்கள் அநேகர். யேசுவைப் பரியாசம் செய்து அவரை இகழ்ந்தார்கள். பிரதான ஆசாரியர், வேதபாரகர்களும், ஜனத்தின் மூப்பர்களும் நீ இஸ்ரவேலின் ராஜாவானால் இப்பொழுது சிலுவையிலிருந்து இறங்கி வரட்டும், அப்பொழுது அவனை விசுவாசிப்போம் என்றார்கள். இதைக்கேட்ட கள்ளரும் இயேசுவை நிந்தித்தார்கள்.
லூக்கா 23:39 அன்றியும் சிலுவையில் அறையப்பட்டிருந்த குற்றவாளிகளில் ஒருவன்: நீ கிறிஸ்துவானால் உன்னையும் எங்களையும் ரட்சித்துக்கொள் என்று அவரை இகழ்ந்தான்.
வ.40 மற்றவன் அவனை நோக்கி: நீ இந்த ஆக்கினைக்கு உட்பட்டவனாயிருந்தும் தேவனுக்குப் பயப்படுகிறதில்லையா? நாமோ, நியாயப்படி தண்டிக்கப்படுகிறோம்; நாம் நடப்பித்தவைகளுக்குத்தக்க பலனை அடைகிறோம்; இவரோ தகாததொன்றையும் நடப்பிக்கவில்லையே என்று அவனைக் கடிந்துகொண்டு, வ.42 இயேசுவை நோக்கி: ஆண்டவரே நீர் உம்முடைய ராஜ்ஜியத்தில் வரும்பொழுது அடியேனை நினைத்தருளும் என்றான்.
வ.43 இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடனேகூட பரதீசிலிருப்பாய் என்றார்.
சிலுவையில் தொங்கிய ஒரு கள்ளனை இயேசு ரட்சித்து தம்முடைய ராஜ்ஜியத்தில் சேர்ந்தார். ஆனால் மற்றக் கள்ளனோ ரட்சிக்கப்படவில்லை. அவன் நிமித்தமாகவே, நான் தாக்கமாயிருக்கிறேன் என்றார். சகோதரனே சகோதரியே இயேசுவின் தாக்கத்தைத் தீர்த்தாயா? அல்லது அவருடைய தாகத்தை அதிகரிக்கச் செய்கிறாயா? இன்றே மனத்திரும்பு. மனந்திரும்புகிறவர்களே இயேசுவின் தாகத்தைத் தீர்க்க முடியும்.
தொடரும்…
புத்தகம்: சிலுவையின் ஏழு வார்த்தைகளும் ஆசிர்வாதங்களும்.
படம்: By Ambroz [வணிக பயன்பாட்டிற்கு இலவசம், பட உரிமையாளரை மேற்கோள் காட்ட வேண்டியதில்லை], via CC0 கிரியேடிவ் காமன்ஸ், பிக்சாபே.காம் வலைத்தளத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது.