சிலுவையின் வார்த்தை 03:04 | ஸ்திரீயே, அதோ, உன் மகன்.
4. இயேசு தன் தாய்க்கு பாதுகாப்பைக் கொடுத்தார்.
ஒரு வாலிப பெண்ணுக்கு பாதுகாப்பாயிருப்பது அவளைப் பெற்று வளர்த்த தாயும் தகப்பனும் அவளுடைய சகோதர சகோதரிகளும் ஆவார்கள். திருமணம் ஆன பின்னர் அவளுக்குப் பாதுகாப்பாயிருப்பது அவளுடைய கணவனும், கணவனுடைய தாயும் தகப்பனும் ஆவார்கள். யோசேப்பு மரித்த பின்னர் மரியாளுக்கு பாதுகாப்பைக் கொடுக்க பெற்றோர் பெரியோர் இல்லை. இந்த சூழ்நிலையில் ஏசுவும் அவருடைய சகோதரர்களும் மரியாளுக்குப் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இயேசுவின் சகோதர சகோதரிகளுக்கும் திருமணமாகி தங்கள் குடும்பத்தினரை கவனிக்கும் பொறுப்பு ஏற்பட்டது. இந்த காலக்கட்டத்தில் மரியாளும் இயேசுவின் ஊழியத்தில் அதிக வாஞ்சையுடையவராக காணப்பட்டார். ஏசுவும் அதை ஏற்று கொண்டார். மேலும் எருசலேமில் பஸ்கா பண்டிகையில் பங்கு கொள்வதற்காக மரியாள் தன் சகோதரியுடன் சென்றிருந்தார்கள்.
பஸ்காவை இயேசு தம்முடைய சீஷர்களுடன் மேல் வீட்டில் ஆசரித்தார். அவர்கள் ஸ்தோத்திர பாட்டை பாடி முடித்தவுடன் இயேசு தம்முடைய சீஷர்களுடன் ஜெபிப்பதற்காக கெத்சமனே தோட்டத்திற்குச் சென்றார்கள். அவர் ஜெபம் பண்ணி முடித்தவுடன் யூதாஸ் காரியோத் கெத்சமனே தோட்டத்தில் இயேசுவை முத்தமிட்டு பிரதான ஆசாரியரின் ஆட்களுக்கு காட்டி கொடுத்தான். இயேசுவை பிலாத்துவின் அரண்மனைக்கு கொண்டு சென்று பொய் சாட்சிகளை நிறுத்தினார்கள். பிலாத்து இயேசுவை சிலுவையில் அறைய ஒப்புக் கொடுத்தான். போர்சேவகர் இயேசுவை அடித்து காயப்படுத்தி அவர் தோளின் மேல் சிலுவையை ஏற்றி கொல்கொதா மலைக்குக் கொண்டு சென்றார்கள். இயேசுவை சிலுவையில் அறைந்தார்கள். அவருக்கு வலது பக்கத்திலும் இடது பக்கத்திலும் இரண்டு கள்ளர்களைச் சிலுவையில் அறைந்தார்கள். பலர் இயேசுவை நிந்தித்தார்கள், தூஷித்தார்கள். நீ கிருஸ்துவானால் சிலுவையை விட்டு இறங்கி வா என்று பரியாசம் பண்ணினார்கள். கள்ளர்களில் ஒருவனும்: நீ கிருஸ்துவனால் உன்னையும் எங்களையும் ரட்சித்துக்கொள் என்று பரியாசம் பண்ணினான்.
ஆனால் யேசுவோ சிலுவையில் தமது இறுதி வார்த்தைகளை பேசினார். முதலாவதாக பிதாவே இவர்களை மன்னியும். தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார். இரண்டாவதாக இன்றைக்கு நீ என்னுடனே கூட பரதீஸிலிருப்பாய் என்றார். மூன்றாவதாக, ஸ்திரீயே அதோ உன் மகன், சீஷனே அதோ உன் தாய் என்றார்.
தொடரும்…
புத்தகம்: சிலுவையின் ஏழு வார்த்தைகளும் ஆசிர்வாதங்களும்.
படம்: By Geralt [வணிக பயன்பாட்டிற்கு இலவசம், பட உரிமையாளரை மேற்கோள் காட்ட வேண்டியதில்லை], via CC0 கிரியேடிவ் காமன்ஸ், பிக்சாபே.காம் வலைத்தளத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது.