சிலுவையின் வார்த்தை 03:03 | ஸ்திரீயே, அதோ, உன் மகன்.
3. கற்பனைகளின்படி இயேசு வாழ்ந்தார்.
யாத் . 20:12 உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன் நாட்கள் நீடித்திருப்பதற்கு, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம் பண்ணுவாயாக.
லேவி. 19:3 உங்களில் அவனவன் தன் தன் தாய்க்கும் தன் தன் தகப்பனுக்கும் பயந்திருக்கவும்…கடவீர்கள் .
இவைகள் தேவனாகிய கர்த்தர் மோசேயின் மூலமாய் கோத்திர பிதாக்களுக்கும் அவர்களுடைய சந்ததியினருக்கும் கொடுத்த கட்டளைகளாகும்.
நீதி. 1:8; 6:20 “உன் தாயின் போதகத்தைத் தள்ளாதே” என்று சாலமன் ஞானி பிள்ளைகளுக்கு ஆலோசனை கொடுக்கிறான்.
நீதி. 23:22 உன் தாய் வயது சென்றவளாகும் போது அவளை அசட்டை பண்ணாதே.
மேலும் சாலமன் முதிர்ந்த வயதிலிருக்கும் எந்த ஒரு தாயையும் அவளுடைய பிள்ளைகள் அசட்டை பண்ணாமலும், பரியாசம் பண்ணாமலும் இருக்க வேண்டும் என்கிறார்.
தேவனுடைய அநாதி தீர்மானத்தின்படி குமாரனாகிய கிறிஸ்து மரியாளிடத்தில் பிறந்தார். மாம்சத்தில் பிறந்த கிறிஸ்து மோசே கொடுத்த கட்டளைகளுக்கும் கற்பனைகளுக்கும் அப்பாற்பட்டவராகத் தன்னைக் காட்டிக் கொள்ளவில்லை. மீறி நடக்கவும் இல்லை. பிதாவாகிய தேவனுடைய திட்டத்தின்படி மரியாளுக்கும் யோசேப்புக்கும் மகனாகப் பிறந்த இயேசு அந்தந்த வயதுக்கும் காலக் கட்டத்திற்கும் தக்கபடி தன்னுடைய தாய் தந்தையருக்கு கீழ்ப்படிந்து நடந்தார்.
இயேசு தம்முடைய ஊழியத்தை ஆரம்பித்த நாட்களுக்கு முன்னரே யோசேப்பு மரித்துப் போனான். இதனால் மரியாள் கணவனை இழந்த விதவைத் தாயானாள். இயேசு தான் ஊழியத்துக்கு செல்கிற இடத்துக்கெல்லாம் தன் தாயாகிய மரியாளையும் அழைத்துச் செல்கிறார். இதனால் இயேசுவின் தாயாகிய மரியாளுக்கு ஒரு பாதுகாப்பும் ஜனங்கள் மத்தியில் மதிப்பும் உண்டாயிற்று.
தொடரும்…
புத்தகம்: சிலுவையின் ஏழு வார்த்தைகளும் ஆசிர்வாதங்களும்.
படம்: By Didgeman [வணிக பயன்பாட்டிற்கு இலவசம், பட உரிமையாளரை மேற்கோள் காட்ட வேண்டியதில்லை], via CC0 கிரியேடிவ் காமன்ஸ், பிக்சாபே.காம் வலைத்தளத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது.