சிலுவையின் வார்த்தை 03:02 | ஸ்திரீயே, அதோ, உன் மகன்.

2. தன் தாய் மரியாள் மீது இயேசு அன்பாயிருந்தார்.

கானா ஊர் கல்யாண வீட்டிலே திராட்சைரசம் குறைவுபட்டது. இயேசுவின் தாய் இயேசுவை நோக்கி அவர்களுக்குத் திராட்சைரசம் இல்லை என்றாள்.

யோவான் 2:4 அதற்கு இயேசு ஸ்திரீயே, எனக்கும் உனக்கும் என்ன, என் வேளை இன்னும் வரவில்லை என்றார்.

இயேசுவின் தாய் வேலைக்காரரை நோக்கி: அவர் உங்களுக்கு என்ன சொல்லுகிறாரோ, அதன்படி செய்யுங்கள் என்றாள். யோவான் 2:5

இயேசு தன் தாய் சொன்ன வார்த்தைகளைக் கனம் பண்ணினார். கற்சாடிகளில் தண்ணீர் நிறப்பச் சொன்னார். பின்னர் அதை பந்தி விசாரிப்புக்காரரிடத்தில் கொண்டுபோய்க் கொடுக்கச் சொன்னார். அவர் சொன்னபடி அவர்கள் செய்தபொழுது தண்ணீர் ரசமாக மாறிற்று.

யேசுவுக்குப் பன்னிரண்டு வயதானபோது அவருடைய தாய் தகப்பன் எருசலேமுக்கு போனார்கள். பண்டிகை முடிந்து எல்லோரும் ஊருக்குத் திரும்பினார்கள். யேசுவோ எருசலேமிலேயே இருந்துவிட்டார்.இது அவருடைய தாயாருக்கும் யோசேப்புக்கும் தெரியாதிருந்தது. பிரயாணக்காரரின் கூட்டத்திலே இருப்பாரென்று அவர்கள் நினைத்து உறவின் முறையாரிடத்திலும் அறிமுகமானவரிடத்திலும் அவரைத் தேடினார்கள். எருசலேமுக்குத் திரும்பிப் போனார்கள். மூன்று நாளைக்குப் பின்பு அவர் தேவாலயத்தில் போதகர் நடுவில் உட்கார்ந்திருக்கவும் அவர்கள் பேசுகிறதைக் கேட்கவும், அவர்களை வினாவவும் கண்டார்கள்.தாய் தகப்பன்மாரும் அவரைக் கண்டு ஆச்சரியப்பட்டார்கள். அவருடைய தாயார் இயேசுவை நோக்கி: மகனே! ஏன் எங்களுக்கு இப்படிச் செய்தாய்? இதோ, உன் தகப்பனும் நானும் விசாரத்தோடே உன்னைத்தேடினோமே என்றார்.

லூக்கா 2:49 அதற்கு நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? என் பிதாவுக்கடுத்தவைகளில் நான் இருக்க வேண்டியதென்று அறியீர்களா என்றார்.

வ.51 பின்பு அவர் அவர்களுடனே கூடப் போய் நசரேத்தூரில் சேர்ந்து, அவர்களுக்கு கீழ்ப்படிந்திருந்தார். அவருடைய தாயார் இந்தச் சங்கதிகளையெல்லாம் தன் இருதயத்திலேயே வைத்துக்கொண்டாள்.

தொடரும்…
புத்தகம்: சிலுவையின் ஏழு வார்த்தைகளும் ஆசிர்வாதங்களும்.

படம்: By Geralt [வணிக பயன்பாட்டிற்கு இலவசம், பட உரிமையாளரை மேற்கோள் காட்ட வேண்டியதில்லை], via CC0 கிரியேடிவ் காமன்ஸ், பிக்சாபே.காம் வலைத்தளத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது.

Leave a Reply

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com