சிலுவையின் வார்த்தை 02:05 | இன்றைக்கு நீ என்னுடனே கூட பரதீசிலிருப்பாய்.
5. இயேசு பரதீஸின் வாழ்வை கள்ளனுக்கு உறுதிப்படுத்தினார்.
லூக்கா 23:43 இயேசு அவனை நோக்கி இன்றைக்கு நீ என்னுடனே கூட பரதீஸிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
“அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனை பேரோ, அத்தனை பேறும் தேவனுடைய பிள்ளைகளாகும்படிக்கு அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார்.”
சிலுவையில் அறையப்பட்ட ஏசுவே நம்முடைய பாவங்களை மன்னிக்கிறவரும், ரட்சிக்கிறவறும், நித்திய ஜீவ வாழ்வைக் கொடுக்கிறவருமாயிருக்கிறார் என்று சிலுவையில் தொங்கிய கள்ளன் நம்பினான், இயேசுவின் நாமத்தைப் பற்றிக்கொண்டு அறிக்கையிட்டான். “உன் நம்பிக்கை வீண் போகாது” என்ற வாக்கின்படியே கள்ளனுக்கும் ஒரு உறுதியான வார்த்தையை – வாக்குத்தக்கத்தை இயேசு கொடுத்தார். இந்த சிலுவை மரணத்திற்குப்பின் கள்ளனுக்கு ஒரு வாழ்வை உறுதி செய்கிறது. அது காலதாமதமாகாமல் இன்றைக்கே கிடைக்கும் என்று இயேசு சொல்கிறார். மேலும் நீ தனித்துச் செல்ல வேண்டியதில்லை என்னுடனே கூட இருப்பாய் என்றும் இயேசு சொல்லுகிறார். “நான் இருக்கும் ஸ்தானத்தை பெறுவீர்கள்” என்ற இயேசுவின் வார்த்தை மனந்திரும்பின கள்ளனுக்கும் சொல்லப்படுகிறது. சிலுவையில் தொங்கின வேதனைகளை அனுபவித்துக் கொண்டிருக்கும் கள்ளனுக்கு பரதீஸின் வாழ்வை இயேசு கொடுக்கிறார். மேலும் இந்த இயேசு பரதீஸிலும் மனந்திரும்பிய கள்ளனோடிருந்து அவனைத் தேற்றுவார் என்பதை தெரிந்துக்கொள்ளுகிறோம்.
“ஊரிலும் உற்றார் மத்தியிலும் உலகத்திலும் சிறுமைப்பட்டிருந்த கள்ளன் சிலுவையில் ரட்சகராகிய யேசுவைக் கண்டு கொண்டான். தன் பாவ வாழ்வுக்கு ஒரு முடிவை இயேசுவின் மூலம் பெற்றுக் கொண்டான். பாவத்தை அறிக்கை செய்துவிட்டு விடுகிறவர்களுக்கு கிடைக்கும் நித்திய ஜீவவாழ்வைப் பெற்று அனுபவிக்கிறான் சிலுவையில் தொங்கிய கள்ளன். அவன் இனி கள்ளனல்ல. களங்கமில்லா பரிசுத்தன். இயேசுவின் ரத்தத்தால் கழுவப்பட்டவன். இயேசுவின் ராஜ்ஜியத்தில் ஆடிப்பாடி மகிழும் உத்தமன்.”
தொடரும்…
புத்தகம்: சிலுவையின் ஏழு வார்த்தைகளும் ஆசிர்வாதங்களும்.
புத்தகம்: சிலுவையின் ஏழு வார்த்தைகளும் ஆசிர்வாதங்களும். படம்: By Gerd Altmann [வணிக பயன்பாட்டிற்கு இலவசம், பட உரிமையாளரை மேற்கோள் காட்ட வேண்டியதில்லை], via CC0 கிரியேடிவ் காமன்ஸ், பிக்சாபே.காம் வலைத்தளத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது.