சிலுவையின் வார்த்தை 02:01 | இன்றைக்கு நீ என்னுடனே கூட பரதீசிலிருப்பாய்.
ஆன்மிகம் | சிலுவையின் வார்த்தை 02:01 | இன்றைக்கு நீ என்னுடனே கூட பரதீசிலிருப்பாய்.
1. சிலுவையில் அறையப்பட்டிருந்த குற்றவாளியின் நிந்தனை
லூக்கா 23:39 அன்றியும் சிலுவையில் அறையப்பட்டிருந்த குற்றவாளிகளில் ஒருவன். நீ கிருஸ்துவானால் உன்னையும் எங்களையும் ரட்சித்துக்கொள் என்று அவரை இகழ்ந்தான். மரணத்தின் வேளையிலும் யேசுவைக் குற்றஞ் சொல்லி நிந்தித்து பரிகாசம் பண்ணுகிற ஒரு குற்றவாளியை பார்க்கிறோம். தனக்கு ஏற்பட்ட ஆக்கினையை மறந்து அநியாயமாய் சிலுவையில் அறையப்பட்டிருக்கிற இயேசுவை, நீதிபராரை உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டியை இகழ்ந்து பேசுகிற குற்றவாளியைப் பார்க்கிறோம். இவன் குற்ற உணர்வு இல்லாதவன். தன் குற்றத்தை மறைக்கிறவன். நீதியையும் அநீதியையும் ஒன்று என்று சாதிக்கிறவன் இவன். இருளையும் வெளிச்சம் என்றே துணிந்து பேசுகிறவன். பாவத்திற்கும் பரிசுத்தத்திற்கும் வித்தியாசம் தெரியாதவன். பாவத்தைத் தண்ணீரைப் போல் குடித்தவன். கொலைகாரனும் கொள்ளைக்காரனுமாகிய இவன் சுயநீதிக்காரனாயிருக்கிறான். இவன் யேசுவையும் அவருடைய அற்புதங்களையும் வல்லமையான செயற்கைகளையும் அவருடைய நீதியின் உபதேசங்களையும் கேட்காத அறியாத ஒரு அந்நியனாயிருக்கிறான். இவன் பாவ இருளில் வாழ்ந்து தன்னை மறைத்துக் கொண்டிருக்கிறவன். “துன்மார்க்கர் போடும் வெளிச்சம் பாவமே”. ஆனால் யேசுவோ இருளில் இருக்கிற ஜனங்களுக்கு வெளிச்சத்தைக் கொடுத்து அவர்களுடைய வாழ்க்கையில் ஒளி ஏற்ற வந்தவர் என்பதை அறியாதவன். பாவ இருளில் கண் சொருகிப்போன குருடனாயிருக்கிறான்.
நீ செய்த குற்றத்திற்காக கொலைபாதகச் செயல்களுக்காக சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட பொழுது நீ எத்தனை பேரை நிந்தித்தாய், சாபவார்த்தைகளையும் தூஷண வார்த்தைகளையும் பேசியிருக்கிறாய். நான் வெளியே வந்தால் யாரையெல்லாம் வெட்டிச் சாய்ப்பேன் என்று சவால் விட்டாய்.
உனக்கு முன் சிலுவையில் தொடங்கிக் கொண்டிருக்கிற யேசுவைப் பார்த்தாயா? தன்னை அடித்தவர்களையும் நிந்தித்தவர்களையும் மன்னித்தவர், பிதாவாகிய தேவனையும் மன்னிக்கச் சொல்லி மன்றாடுகிறவர். உன்னையும் என்னையும் மன்னிப்பார். நமக்கு மீட்ப்பைக் கொடுத்து நம்மை மகிழ்விப்பார்.
தொடரும்…
புத்தகம்: சிலுவையின் ஏழு வார்த்தைகளும் ஆசிர்வாதங்களும். படம்: By lechenie-narkomanii [வணிக பயன்பாட்டிற்கு இலவசம், பட உரிமையாளரை மேற்கோள் காட்ட வேண்டியதில்லை], via CC0 கிரியேடிவ் காமன்ஸ், பிக்சாபே.காம் வலைத்தளத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது.