சிலுவையின் வார்த்தை 01:06 | பிதாவே இவர்களை மன்னியும்.
ஆன்மிகம் | சிலுவையின் வார்த்தை 01:06 | பிதாவே இவர்களை மன்னியும்.
6. இயேசுவின் மன்னிப்பு எல்லோருக்கும் கிடைக்கும்.
லூக்கா 19:10 இழந்து போனதைத் தேடவும், ரட்சிக்கவுமே மனுஷ குமாரன் வந்திருக்கிறார்.
1 தீமோத்தேயு 1:15 பாவிகளை ரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார்.
யோவான் 5:14 இதோ, நீ சொஸ்த்தமானாய், அதிகக் கேடானதென்றும் உனக்கு வராதபடிக்கு இனிப்பாவஞ் செய்யாதே என்றார்.
1 யோவான் 1:9 நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.
எந்த ஒரு மனுஷனும் ஜாதியானும் தேசத்தானும் தன்னைக் கிறிஸ்துவுக்கு முன் தன்னைத் தாழ்த்தி பாவியாகிய என்மேல் கிருபையாயிரும் என்று மன்னிப்புக் கேட்டால் கிறிஸ்து அவனை மன்னிப்பார்.
ஏசுகிறிஸ்துவின் ரத்தத்தினால் பாவங்கள் கழுவப்பட்டு மன்னிக்கப்பட்டவனும் மனந்திரும்பினவனும் ஏசுகிருஸ்துவிலே நிலைநிற்க வேண்டும். யேசுவினால் மன்னிக்கப்பட்டவர்கள் உறுதியாய் நிலைத்து நிற்க வேண்டும். அதிகக் கேடானதொன்றும் வராதபடிக்கு இனிப் பாவஞ் செய்யாதிருப்போம். பிதாவே இவர்களையும் எங்களையும் மன்னியும்.
யூதாஸ்காரியோத், பிரதான ஆசாரியர்கள், அன்னா, காய்பா, எருசலேமின் அதிபர்கள், ஏரோது, பிலாத்து, போர்சேவகர்கள் யேசுவைப் பிடித்து அடித்தார்கள். நிந்தனை செய்தார்கள், பரியாசம் பண்ணினார்கள். சிலுவையில் அறைந்தார்கள். பிதாவே, இவர்களை மன்னியும் தாங்கள் செய்கிறது இன்னது என்று அறியாதிருக்கிறார்கள் என்று பிதாவிடம் வேண்டினார். மன்னிக்கிறது பிதாவினுடைய காரியம். ஆனால் இவர்களுடைய கிரியைகளுக்கு ஏற்றபலன் இவர்களுக்கு வந்தே தீரும்.
தொடரும்…
புத்தகம்: சிலுவையின் ஏழு வார்த்தைகளும் ஆசிர்வாதங்களும். படம்: By Gerd Altmann [வணிக பயன்பாட்டிற்கு இலவசம், பட உரிமையாளரை மேற்கோள் காட்ட வேண்டியதில்லை], via CC0 கிரியேடிவ் காமன்ஸ், பிக்சாபே.காம் வலைத்தளத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது.