கைவிடாதவர்
இன்றைய நாளில் தாவீதின் ஜெபத்தை தியானிக்கப் போகிறோம். சங்கீதம் இருபது ஒன்றிலே ஆபத்து நாளிலே கர்த்தர் நமது ஜெபத்தை கேட்பாராக. யாக்கோபின் தேவனுடைய நாமம் உமக்கு உயர்ந்த அடைக்கலமாவதாக. இது தாவீதுனுடைய இன்னொரு விஷேஷித்த ஜெபமாக காணப்படுகிறது. தன்னோடுகூட நெருங்கி நிற்கிற ஒரு நல்ல நண்பனுக்கு அல்லது கடவுளுடைய பிள்ளைகளுக்கு அவர்களுக்காக பாரப்பட்டு ஜெபிக்கிற ஒரு நல்ல சுபாவத்தை நாம் பார்க்கிறோம்.
ஆபத்து நாளிலே அருமையான சகோதரனே! நீர் ஆண்டவரை நோக்கி ஜெபி என்று சொன்னால், கர்த்தர் உம்முடைய ஜெபத்தை கேட்பார். கர்த்தர் உம்முடைய வார்த்தைக்கு பதில் கொடுப்பார். உம்முடைய ஆபத்தான சூழ்நிலைகளில் இருந்து அவர் உன்னை விடுவித்து இரட்சித்து கொள்வார். யாக்கோபின் தேவனுடைய நாமம் உமக்கு அடைக்கலமாக இருக்கும். பாதுகாப்பாக இருக்கும். உதவியாக இருக்கும் கர்த்தர் உன்னை கைவிடமாட்டார். ஆகவே கர்த்தரிடத்திலே கேளுங்கள், ஆண்டவரிடத்திலே மன்றாடுங்கள் நம்பிக்கையோடு விசுவாசத்தோடு கூட கர்த்தரிடத்திலே ஜெபியுங்கள்.
கர்த்தர் உம்முடைய ஜெபத்திற்கு பதில் கொடுத்து உம்மை ஆசிர்வதிப்பார் என்று சொல்கிற ஆலோசனையின் ஜெபத்திற்காக நாம் ஆண்டவருக்கு நன்றி செலுத்துவோம். கர்த்தருடைய பிள்ளைகளே! இதேபோன்று நாமும் நம்மோடுகூட இருக்கிறவர்களுக்காக ஜெபிக்க வேண்டும். மற்றவர்களை திடப்படுத்தி தைரியப்படுத்தி சந்தோஷப்படுத்தி அவர்களை கர்த்தருக்குள்ளாக வழிநடத்துகிற சுபாவத்திற்குள்ளான நாம் கடந்து செல்ல வேண்டும். அதிகமான கிருபைகளை கர்த்தர் நம் ஒவ்வொருவருக்கும் கொடுப்பாராக. நம்முடைய ஆபத்திலே மட்டுமல்ல மற்றவர்களுடைய ஆபத்திலும் கர்த்தர் பிள்ளைகளுடைய ஜெபத்திற்கு பதில் கொடுப்பார். அவர்களை தேற்றுவார். திடப்படுத்துவார். இவ்விதமான காரியங்களிலே நாம் கர்த்தருடைய நாமத்தை மகிமைப்படுத்துவோம்.
கர்த்தருடைய பிள்ளைகளே! கர்த்தரை நோக்கி பாருங்கள். ஜெபியுங்கள். மன்றாடுங்கள். வேண்டிகொள்ளுங்கள். கர்த்தருடைய அனுக்கிரகம் உங்களைத் தாங்கும். இரக்கமுள்ள கர்த்தர் தம்முடைய பிள்ளைகளுடைய இக்கட்டான சூழ்நிலைகளில் இருந்து விடுதலை கொடுத்து அவர்களை இரட்சிப்பீராக. அவர்களுக்கு பாதுபாப்பையும் பராமரிப்பையும் கொடுத்து அவர்களை ஆசிர்வதித்து காத்து கொள்வீராக. உம்முடைய நன்மையின் கரம் அவர்களோடுகூட இருக்கட்டும். பெரிய காரியங்களை செய்யும் ஏசு கிறிஸ்து மூலம் ஜெபிக்கிறோம் நல்ல பிதாவே. ஆமென். ஆமென்.
ஆசிரியர்: போதகர் தேவசகாயம்