கர்த்தருக்கான தேவாலயம்

இந்த நாளில் கோரேசு ராஜாவின் ஜெபத்தை தியானிக்க போகிறோம். எஸ்ராவின் புஸ்தகம் முதலாம் அதிகாரம் இரண்டாம், மூன்றாம் வசனத்திலே கோரேசு இந்த ஜெபத்தை ஏறெடுக்கிறான். கர்த்தருடைய ஜனங்கள் எல்லாரிலும் எவன் உங்களுக்குள் இருக்கிறானோ அவனோடு தேவன் இருப்பாராக. அவன் யூதாவிலுள்ள எரிசலேமுக்கு போய் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய ஆலயத்தை கட்டக்கடவன்.

எரிசலேமிலே வாசம் பண்ணுகிற தேவனே தேவன். கர்த்தருடைய நாமத்தை தரித்திரிக்கிற அவருடைய பிள்ளைகளோடு கூட தேவன் இருப்பாராக. எரிசலேமிலே வாசம் பண்ணுகிற தேவனே தேவன். நூற்றி இருபத்தி ஏழு நாடுகளின் அதிபதியாக பாபிலோன் தேசத்து அதிபதியாக கோரேசு ராஜா காணப்படுகிறான். இந்த கோரேசை ஆண்டவர் எரிசலேமிலே ஆலயத்தை கட்டுவதற்காக அழைக்கின்றார். இந்த கிருபையினாலேதான் கோரேசு ராஜா யூத மக்களை பாபிலோனிலே சிறையிலிருக்கிற அடிமைத்தனத்திலே இருக்கிற மக்களை விடுவிக்கவும், உற்சாகப்படுத்தவும், எரிசலேமிலே இருக்கிற ஆலயத்தை கட்டுவதற்காக அனுப்பிவிடவும் ஆயத்தமாக இருக்கிறார்.

கர்த்தருடைய ஜனங்களே! அந்த ஆண்டவர் உங்களோடு கூட இருக்கிறார். எரிசலேமிலே வாசம் பண்ணுகிற தேவனே தேவன். அந்த ஆண்டவருக்கு நீங்கள் மகிமை செலுத்தும்படியாக வலிமையான மகத்துவமான காரியங்களை செய்யும் படியாக நீங்கள் ஆவியிலே உற்சாகம் அடைந்து எரிசலேமுக்கு நேராக சென்று பரலோகத்தின் தேவனுக்காக ஒரு தேவாலயத்தை கட்டுங்கள். கர்த்தர் உங்களோடுகூட இருப்பார். அவர் உங்களுடைய காரியங்களை வாய்க்க செய்வார். வெகுஜனங்களை உற்சாகப்படுத்துகிறதை நாம் பார்க்கிறோம். எரிசலேமிலே வாசம் பண்ணுகிற தேவனே தேவன். யோரேசு ராஜாக்கு முந்தின ராஜாக்கள் எல்லாரும் சிரியாவில் உள்ள மக்களை வீர மக்களை யுத்தத்திலே வென்று அடிமைப்படுத்தி சிறை கைதிகளாக பாபிலோனுக்கு நேராக கொண்டு வந்தார்கள். எழுபது வருஷ கால அடிமைத்தனம் அவர்களுக்கு கொடுக்கப்பட்டது.

ஏற்ற நாட்களிலே ஆண்டவர் அந்த கோரேசு ராஜாவை தெரிந்து கொண்டு அவன் மூலமாக அழிந்து போன சுட்டெரிக்கப்பட்ட குப்பை மேடாக காணப்படுகிற அந்த இடத்திலே மகிமையுள்ள தேவனுக்கு ஒரு தேவாலயத்தை கட்ட அந்த ஜனங்களை உற்சாகப்படுத்துகிறதை நாம் பார்க்கிறோம். நம்முடைய முற்பிதாக்கள் செய்த குற்றங்கள் குறைவுகள் பல நஷ்டங்கள் கஷ்டங்களை நமக்கு கொடுத்திருக்கலாம். நாமும் நம்முடைய தவறுகளை உணருவோம். அறிக்கையிடுவோம். கர்த்தர் நமக்கு கொடுக்கிற வாய்ப்பை பயன்படுத்தி ஆண்டவருக்காக நாம் சேவை செய்வோம். கர்த்தர் விரும்புகிற காரியங்களை நாம் செய்து அவரை மகிமைப்படுத்துவோம். அவரை கணப்படுத்துவோம்.

கர்த்தர் நமக்கு உறுதுணையாக இருப்பார். இஸ்ரவேலின் தேவன் எரிசலேமிலே வாசம் பண்ணுகிற தேவன் நம்முடைய நாட்களிலும் பெரிய காரியங்களை செய்வார். நாம் அதற்காக ஆயத்தப்படுவோம். நாம் உற்சாகப்படுவோம். ஆண்டவருக்காக கிரியை செய்வோம். கர்த்தருடைய பிள்ளைகளே! கர்த்தருக்கென்று பணிவிடை செய்யுங்கள். ஆண்டவருக்கு மகிமையான காரியங்களை நடத்துங்கள். கர்த்தர் நம்மைக் கொண்டு பெரிய காரியங்களை செய்வார்.

இரக்கமுள்ள ஆண்டவரே! இந்த வேளையிலும் கோரேசு ராஜாவை போன்று எங்களோடுகூட இருக்கிற மக்களை நாங்கள் உற்சாகப்பட செய்வீராக. உமக்கென்று வலிமையான மகத்துவமான காரியங்களை செய்வதற்கு அநேக ஜனங்கள் ஆயத்தப்படுத்த எங்களுக்கு கற்று தாரும். இந்த குறிப்பிட்ட வசனங்களை எங்களுக்கு தாரும். நாங்கள் அவர்களை உற்சாகப்படுத்தவும் நாங்களும் சேர்ந்து உம்முடைய நாமத்தை மகிமைப்படுத்தவும் நீர் எங்களுக்கு அருள் செய்வீராக. எங்கள் குடும்பம், எங்களுடைய பிள்ளைகள், எங்களுடைய சந்ததியினர் உமக்கு மகிமை செலுத்த வேண்டும். அந்த கிரியைகளை எங்களிடத்தில் மகிமைப்படுத்துவீராக. கர்த்தாவே! உற்சாகமாக உமக்கென்று ஊழியஞ்செய்கிற ஆத்மாக்கள் ஆதாயம் பண்ணுகிற கர்த்தருடைய ஆலயத்தை கட்டுவதற்காக கொடுத்து உதவுகிற ஒவ்வொரு பிள்ளைகளையும் நீர் ஆசிர்வதிப்பீராக. அவர் மூலமாக பெரிய காரியங்களை செய்யும் ஏசு கிறிஸ்து மூலம் ஜெபிக்கிறோம் நல்ல பிதாவே. ஆமென். ஆமென்.

போதகர்: ஆசிரியர் தேவசகாயம்

Leave a Reply

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com