கர்த்தரின் மன்னிப்பு

இன்றைய நாளிலே சாலமோனின் ஜெபத்தை தியானிக்கப் போகிறோம்.  இரண்டு நாலாமாகமம் நாலாம் அதிகாரம் இருபத்தி ஆறாம் இருபத்தி ஏழாம் வசனத்திலே அவர்கள் உமக்கு விரோதமாக பாவம் செய்ததினால் வானம் அடைப்பட்டு மழைப்பெய்யாத பெய்யாதிருக்கும் பொழுது தங்கள் பாவங்களை விட்டு திரும்பினால் உமது அடியாரும் உமது ஜனமாகிய இஸ்ரவேலும் செய்த பாவத்தை மன்னித்து அவர்கள் நடக்கவேண்டிய வழியை அவர்களுக்கு போதித்து, தேவரீர்! உமது ஜனத்திற்கு சுதந்திரமாகக் கொடுத்த உம்முடைய தேசத்தை மழை பெய்ய கட்டளையிடுவீராக! என்று சொல்லி சாலமோன் ஜெபிக்கிறான்.

எரிசலேமின் தேவாலயத்தைக் கட்டி திருதிஷ்டை செய்யப்பட்ட நாளிலே பரலோகத்தின் தேவனை நோக்கி சாலமோன் நீண்ட ஜெபத்தை ஏறெடுக்கிறான்.  பல ஜெபங்களை அங்கே குறிப்பிட்டு சொல்லுகிறான்.  அவைகளில் ஒன்றாக இது இருக்கிறது.  ஜனங்கள் கர்த்தருக்கு பிரியமில்லாத காரியங்களை செய்தால் ஆண்டவர் அவர்களை தண்டிக்கிறார். தேசத்திலே மழையே பெய்யாதபடி வறட்சியை கட்டளையிடுகிறார்.  அவ்விதமான சூழ்நிலைகளிலே நஷ்டங்களும் கஷ்டங்களும், காடுகளும் வடிகிறபொழுது தாங்கள் செய்தது தவறு, நீருதல் என்கிறதை உணர்ந்து தன்னுடைய பாவங்களை அறிக்கை செய்து மனம் திருந்தி ஆண்டவருடைய சமூகத்திலே மன்றாடி ஜெபத்தை ஏறெடுத்தார்.

கர்த்தர் அந்த ஜெபத்தையெல்லாம் கேட்கிறார்.  மன்னித்து அவர்களுக்கு திரும்பவும் அந்த நன்மைகளைக் கொடுத்து அவர்களை ஆசிர்வதிக்கிறார்.  அவர் இரக்கமுள்ள ஆண்டவர். நம்முடைய ஜெபத்தை கேட்கிறவர்.  ஆகவே, வானத்தையும் பூமியையும் படைத்த தேவன், அனுகூலத்திற்கு வேண்டிய நன்மைகளை அந்தந்த காலக்கட்டங்களிலே கொடுப்பார்.  ஜீவராசிகளுக்கு வேண்டிய நன்மைகளைக் கொடுப்பார் போஷிப்பார். ஆசிர்வதிப்பார்.  நாமும் மறுதளித்து ஆண்டவரை துக்கப்படுத்தின காரியங்களை அறிக்கை செய்வோம்.  கண்ணீரோடு கூட ஜெபிப்போம்.

உத்தம மனஸ்தாபத்தோடு கூட நாம் வேண்டிக்கொள்வோம்.  கர்த்தர் நமக்கு மனதிறங்குவார்.  நன்மைகளை கொடுத்து ஆசிர்வதிப்பார்.  இரக்கமுள்ள ஆண்டவரே! பாவம் செய்யாத மனுஷனில்லையே ஆண்டவரே மாமிசமாக இருக்கக்கூடிய எந்த மனிதனும் பாவம் செய்தவனாய் இருக்கிறான்.  ஆனால் ஆண்டவரே அறிக்கை செய்கிறபொழுது நீர் இரக்கம் பாராட்டுவீராக.

பாவியைத் தள்ளாமல் நீர் ஏற்றுக்கொள்வீராக மனம் திரளுகிறபொழுது சந்தோஷப்படுகிறவர் நீர் எங்களுக்கு மனதிறங்குவீராக தேசத்திற்கும் நாட்டிற்கும் ஜனங்களுக்கும் வேண்டிய நன்மைகளைக் கொடுத்து ஆசிர்வதிப்பீராக காலகாலங்களிலே பெய்யக்கூடிய மழைகளை கொடுத்து தேசத்தை செழிப்பாக்குவீராக ஆசிர்வாதமான மழைகளை கொடுத்து  ஆசிர்வதிப்பீராக.  உம்மை நோக்கி வேண்டுகிற ஒவ்வொரு பிள்ளைகளுடைய ஜெபத்திற்கேற்ற பலனை தந்தருளுவீராக. ஏசு கிருஸ்த்து மூலம் ஜெபிக்கிறோம் நல்ல பிதாவே ஆமென்.  ஆமென்.

ஆசிரியர்: போதகர் தேவசகாயம்

 

Leave a Reply

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com