கர்த்தரின் கரம்

இன்றைய நாளில் தாவீதின் ஜெபத்தை ஏறெடுக்கப் போகிறோம். முப்பதாம் சங்கீதம் முதலாம் வசனத்திலே கர்த்தாவே! என் சத்ருக்களை என்னை மேற்கொண்டு மகிழ ஒட்டாமல் நீர் என்னை கைதூக்கி எடுத்தபடியினால் நான் உம்மை போற்றுவேன். கர்த்தருக்கு துதி செலுத்துகின்றான் தாவீது. சத்ருக்கள் அவனை மேற்கொள்ளாதபடி வல்லமையுள்ள ஆண்டவர் மீட்டுகொண்டபடியினாலே, இரட்சித்து கொண்டபடியினாலே ஆண்டவருக்கு துதி செலுத்துகிறான். பொல்லாதவர்களுடைய சீற்றங்களுக்கு பொறாமைக்காரர்களுடைய வஞ்சகத் திட்டங்களுக்கு ஆளாகிபோகாதபடி கிருபையுள்ள ஆண்டவர் தம்முடைய கரத்தை நீட்டி தாவீதை இரட்சித்தபடியினாலே அவன் ஆண்டவருக்குள்ளாக மகிழுகிறான், கர்த்தரை துதிக்கிறான், நீர் நல்லவர், நீர் ஆபத்திலே உதவி செய்கிற தேவன்.

சத்ருக்களுடைய இஷ்டத்திற்கு ஒப்பு கொடாத தேவன். நீரே மீட்டெடுக்கிறவர். இந்த கிருபையை நினைத்து ஆண்டவருடைய தயவை நினைத்து ஆண்டவருக்கு நன்றி செலுத்துவோம். நான் உம்மை போற்றுவேன், உம்மை புகழுவேன், உம்மை மகிமைப்படுத்துவேன் என்று சொல்லி அவன் இருதயத்திலே சந்தோஷப்படுகிறான். இவ்விதமான சூழ்நிலைகளின் மத்தியிலே கடந்து செல்கிற மக்கள் ஒவ்வொருவருக்கும் நீர் உதவி செய்வீராக. ஆபத்து காலத்திலே என்னை நோக்கி கூப்பிடும், நான் உனக்கு மறு உத்தரவு அருளிச்செய்வேன் என்று சொன்ன கர்த்தர் தம்முடைய பிள்ளைகளுடைய அங்கலாய்ப்பிற்கு நீர் பதில் கொடுப்பீராக. அவர்களுடைய ஜெபத்திற்கு நீர் பதில் கொடுத்து இரட்சித்து கொள்வீராக. நீரே அவர்களுக்கு உதவி செய்யும்.

இரக்கமுள்ள ஆண்டவரே! நாங்கள் உம்மை நோக்கி பார்க்கிறோம். சத்ருக்கள் எங்களை சூழ்ந்து கொண்டு பொல்லாத கிரியைகளை நடப்பித்து எங்களை அழித்து போடுவதற்காக எங்களை விழத்தள்ளுவதற்காக பல சதி சர்பணைகளை செய்து வருகிறார்கள் கர்த்தாவே. ஆனால் என் தேவனாகிய ஆண்டவர் உம்முடைய வல்லமையுள்ள கரத்தினால் உம்முடைய பிள்ளைகளாகிய எங்களை உம்முடைய சட்டைகளின் நிழலிலே வைத்து பாதுகாத்து கொள்வீர். தீமைக்கும் பொல்லாப்புக்கும் நாச மோசங்களுக்கும் அழிவுகளுக்கும் உள்ளாகாதபடிக்கு எங்களை இரட்சித்து கொள்கிறீர். இதற்காக நாங்கள் உம்மை ஸ்தோத்திரிக்கிறோம். நீர் எங்களை மீட்டு கொண்டதற்காக உமக்கு ஸ்தோத்திரங்களை ஏறெடுக்கிறோம்.

உம்மிடத்திலே நன்மைகளை பெற்றுகொண்ட நாங்கள் இருதயபுறமாக உங்களுக்கு ஸ்தோத்திரங்களை ஏறெடுக்கிறோம். இரக்கமுள்ள ஆண்டவரே! இந்த ஜெபத்தை தியானிக்கிற ஒவ்வொரு பிள்ளைகளையும் நீர் ஆசிர்வதியும். உம்முடைய தெய்வீக சந்தோஷத்தை சமாதானத்தை கர்த்தர் தம்முடைய பிள்ளைகள் அனைவருக்கும் தந்தருளுவாராக. ஏசு கிறிஸ்து மூலம் ஜெபிக்கிறோம் நல்ல பிதாவே. ஆமென். ஆமென்.

ஆசிரியர்: போதகர் தேவசகாயம்

Leave a Reply

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com