உறைவிடம்
இன்றைய நாளில் தாவீதின் ஜெபத்தை தியானிக்க போகிறோம். சங்கீதம் முப்பதிரண்டு ஏழில், நீர் எனக்கு மறைவிடமாய் இருக்கிறீர் என்னை நீர் இக்கட்டுகளுக்கு இழைத்து காத்து, இரட்சண்ணிபாவங்கள் என்னை சூழ்ந்துக் கொள்ளும்படி செய்வீர் என்று தாவீது ஜெபிக்கிறான். நீர் எனக்கு மறைவிடமாய் இருக்கிறீர். எல்லா தீமைக்கும் பொல்லாப்புக்கும் நான் ஆளாகாதபடி உம்முடைய சட்டைகளின் நிழலிலே வைத்து காத்துக் கொள்கிற தேவனாக இருக்கிறீர் என்று சொல்லுகிறான்.
நீரே எனக்கு நம்பிக்கையின் உறைவிடம் என்று அவன் தன்னுடைய இருதயத்தின் எண்ணத்தை வெளிப்படுத்துகிறான். சத்ருக்களாலோ, தீயவர்களாலோ, பொல்லாதவர்களாலோ, எனக்கு எந்த தீங்கும் ஏற்பட்டுவிடாதபடிக்கு எல்லா சோதனைகளுக்கும் என்னை விலக்கி காக்கிற தேவனாய் இருக்கிறீர். பாவத்திலே நான் உன்னோடு கூட இருந்து உன்னை தப்புவிப்பேன் என்று சொன்ன கர்த்தர் என்னுடைய கரம் தனக்கு அனுகூலமாக இருந்தது என்று சொல்லி தாவீது சொல்லுகிறான்.
என்னை விலக்கி காத்துக்கொண்டு பொல்லாதவருடைய சதி சர்ப்பணைகளில் இருந்து என்னை காத்துக்கொண்டு வந்தீர். அதனாலே நாம் சந்தோஷப்படுகிறேன். நான் ஆனந்த களிப்படைந்து மகிழ்ச்சியின் பாடல்களைப் பாடி உம்மைத் துதிக்கும் படியான ஒரு வாய்ப்பை கொடுத்திருக்கிறீர் என்று சொன்னார். ஆம் கர்த்தாவே! உம்மை நம்பின பிள்ளைகள் வெட்கப்பட்டு போகவில்லை. நீர் அவர்களை கைவிடவில்லை.
நீர் அவர்களுடைய துக்கத்தை மாற்றினீர். அவர்களது சஞ்சலத்தை எடுத்துப் போட்டீர். சத்ருக்களுடைய கைகளில் இருந்து விடுதலைக் கொடுத்தீர். இதனாலே நாங்கள் உம்மை துதிக்கிறோம். இதனாலே நாங்கள் உம்மை போற்றி புகழ்ந்து உம்மை மகிமைப்படுத்துகிறோம். இரக்கம் பாராட்டுவீராக. துதியில் பாடல்களை கொடுத்து சந்தோஷப்படுத்துகிறீர் அதற்காக உம்மை துதிக்கிறோம்.
இரக்கமுள்ள ஆண்டவரே! புனிதமான நெருக்கங்களுக்கும், போராட்டங்களுக்கும், உபத்தரங்களுக்கும் மத்தியிலே காணப்படுகிற எந்தவொரு சகோதரியையும் சகோதரர்களையும் நீர் இரட்சித்துக்கொள்ளுவீராக. விடுவித்துக்கொள்ளுவீராக. அவர்களை நீர் சந்தோஷப்படுத்தூவீராக. அவர்கள் உம்மை துதித்து போற்றி மகிமைப்படுத்த அருள்பாராட்டுவீராக. நீரே வல்லமை உள்ள தேவன் என்பதை வெளிப்படுத்தியருளும் கர்த்தாவே! உம்முடைய கிருபை எங்களுடைய ஒவ்வொருவருக்கும் போதுமானதாய் இருப்பதாக. இயேசுவின் நாமத்தினால் பிதாவே ஜெபிக்கிறோம் நல்ல பிதாவே. ஆமென். ஆமென்.
ஆசிரியர்: போதகர் தேவசகாயம்