ஆண்டவரை மகிமைப்படுத்துவோம்!
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக. இந்நாளின் ஜெபத்தை தாவீது மூலமாக நாம் கற்றுக்கொள்ள இருக்கிறோம். இரண்டு சாமுவேல் ஏழாம் அதிகாரம் இருபத்து ஒன்பதாம் வசனத்திலே இப்போதும் உமது அடியானுடைய வீடு என்றைக்கும் உமக்கு முன்பாக இருக்கும்படி அது ஆசிர்வதித்தருளும்.
உம்முடைய ஆசிர்வாதத்தினாலே உமது அடியானுடைய வீடு என்றைக்கும் ஆசிர்வதிக்கப்பட்டிருப்பதாக கர்த்தருக்கு மகிமை உண்டாக ஒரு பெரிய மகிமையான ஆலயத்தைக் கட்ட வேண்டும் என்று சொல்லி வாஞ்சித்த தாவீதுக்கு ஆண்டவர் மறுஉத்தரவாக அருளை செய்கின்றார். நான் அவனுடைய வீட்டை கட்டுவேன் என்று சொல்லி. இந்த நன்மையான வார்த்தைகளை தான் கேட்ட உடனே தாவீது உடனடியாக தானே ஆலையத்திற்கு சென்று ஆண்டவருக்கு ஸ்தோத்திரங்களை கொடுக்கிறான். ஆண்டவரை மகிமைப்படுத்துகிறான்.
உமது அடியானுடைய வீடு என்றைக்கும் உமக்கு முன்பாக இருக்கும்படி அதை ஆசிர்வதித்தருளும் தானும், என் குடும்பமும், என் பிள்ளைகளும் உமக்கு முன்பாக இருக்கும்படியாக ஆசிர்வதித்தருளும் என்று சொல்லி ஆண்டவரிடத்திலே அவன் கேட்டுக்கொள்கிறான். உமது அடியானுடைய வீடு என்றைக்கும் ஆசிர்வதிக்கப்பட்டிருப்பதாக. ஆக கர்த்தருக்கு என்று சொல்லி ஒரு நாம் ஒரு நன்மையான காரியத்தை செய்து அவரை மகிமைப்படுத்த வேண்டும் என்று விரும்புகிறபொழுது கர்த்தர் நமக்கு பெரிய காரியங்களை செய்கிறார். அதை தான் ஏசுவாகிய ஆண்டவரும் சொல்லுகிறார், கொடுங்கள் அப்போது உங்களுக்கு கொடுக்கப்படும் நாம் ஆண்டவருக்கு என்று கொடுப்போம் நாம் கொடுத்ததை அவர் நமக்கு திருப்பி கொடுப்பார். நாம் ஆண்டவரை மகிமைப்படுத்துகிற பொழுது அவர் நம்மை மகிமைப்படுத்துவார்.
என்னை கணம் பண்ணுகிறவர்களை நான் கணம் பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லியிருக்கிறார். ஆகவே, நம்முடைய பொருளால் நம்முடைய உழைப்பால் நம் ஆண்டவருக்கு கணத்தையும் மகிமையும் செலுத்துவோம் கர்த்தர் நம்மோடு கூட இருப்பார்.
கர்த்தாவே! இந்த ஜெபத்தை நாங்கள் ஏறெடுக்கிறோம் உமது அடியானுடைய வீடு என்றைக்கும் உமக்கு முன்பாக ஆசிர்வதிக்கப்பட்டிருப்பதாக. எங்களை நினைத்தருளுவீராக. எங்களுக்கு இரக்கம் பாராட்டுவீராக. எங்களை சுற்றிலும் கோட்டை அரணுமாக இருந்து எங்களை காத்துக்கொள்வீராக! நாங்கள் உம்மை மகிமைப்படுத்தட்டும். உமக்கு சாட்சியாக ஜீவிக்கட்டும். கர்த்தர் எங்களை கொண்டு பெரிய காரியங்களை செய்வீராக! ஏசு கிருஸ்த்து மூலம் ஜெபிக்கிறோம் நல்ல பிதாவே. ஆமென். ஆமென்.
ஆசிரியர்: போதகர் தேவசகாயம்