ஆண்டவரிடம் அடைக்கலம்
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக. கர்த்தர் உங்களையும் ஆசிர்வதிப்பாராக. இந்நாளின் ஜெபத்தை போவாஸ் ஏறெடுக்கிறதை நாம் பார்க்கிறோம். ரூத்தின் புஸ்தகம் இரண்டாம் அதிகாரம் பன்னிரண்டாம் வசனத்திலே நாம் இவ்விதமாக பார்க்கிறோம். உன் செய்கைக்குத்தக்கதாக பலனை கர்த்தர் உனக்கு கட்டளையிடுவாராக!
இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய சட்டைகளின் கீழ் அடைக்கலமாக வந்த உனக்கு அவராலே நிறைவான பலன் கிடைப்பதாக! என்று சொல்லுகிறான். தன்னுடைய வயலிலே கதிர்களை பொறுக்கிக்கொண்டிருந்த ரூத்தை பார்த்து போவாஸ் இந்த வார்த்தைகளைச் சொல்லி ரூத்தை தைரியப்படுத்துகிறதை, திடப்படுத்துகிறதை நாம் பார்க்கிறோம். இது ஒரு மென்மையான ஜெபமாக இருக்கிறது. உன் செய்கைக்குத்தக்க பலனை கர்த்தர் உனக்கு கட்டளையிடுவாராக! இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய சட்டைகளின் கீழ் அடைக்கலமாக வந்த உன்னை ஆண்டவர் ஆசிர்வதிப்பாராக! என்று சொல்லுவதை நாம் பார்க்கிறோம்.
ரூத்மோவாவிய பெண் அங்கே தன்னுடைய கணவனை அறுந்த நிலையிலும் தன்னுடைய மாமியாகிய நகுமியை பற்றிக்கொண்டு, உம்முடைய தேவன் என்னுடைய தேவன் நீ தங்குகிற இடத்திலே நானும் தங்குவேன் என்று சொல்லி அவளோடு கூட புறப்பட்டு வருகிறதை நாம் பார்க்கிறோம். விடாபிடியாக ஆண்டவரை பிடித்துக்கொள்கிறாள். அந்நிய வெளிப்பாடுகளை உதறிவிட்டு அங்கே நகுமியின் தேவனை ஆண்டவர் ஏற்றுக் கொள்கிறார். இந்த செய்திகளெல்லாம் இங்கே பெத்தலகேமிற்கு வந்த பின்னர் அங்கே அந்த கிராமத்திலே அந்த மக்களுக்கு சொல்லப்படுகிறது. அதைக் கேட்டு தானே இந்த போவாஸ் அவளை ஆசிர்வதிக்கிறான்.
நீ இஸ்ரவேலின் தேவனுடைய சட்டைகளின் கீழாக வந்திருக்கிறாய், உன் கிரியைகளுக்கு பலனுண்டு என்று சொல்லி அவளை ஆசிர்வதிக்கிறதை நாம் பார்க்கிறோம். இது ஒரு மென்மையான காரியம். அதே மகள் தான் அங்கே போவாஸ்க்கு மனைவியாக மாறுகிறாள். அவள் மூலமாக தான் அந்த சந்ததி தழைக்கிறது. அந்த சந்ததியிலே தான் ஏசு கிருஸ்த்துவாகிய ஆண்டவரும் பிறக்கிறார். கிருபையுள்ள ஆண்டவரே! நாங்கள் உம்மை ஸ்தோத்திரிக்றோம். நன்றி செலுத்துகிறோம். இஸ்ரவேலின் தேவனுடைய சட்டைகளின் கீழாக நாங்கள் வர வேண்டும்.
ஆண்டவரே! நாங்கள் எடுக்கிற தீர்மானங்கள் நாங்கள் மேற்கொள்கிற கிரியைகள் உமக்கு மகிமையாக இருக்க வேண்டும். எங்களை ஆசிர்வதிப்பீராக! திட மனதை தாரும் தைரித்தை தாரும். நாங்கள் உம்முடைய வழிகளிலே சென்று உமக்கு ஸ்தோதிரங்களை எடுக்க கிருபை செய்வீராக! எங்கள் கர்த்தர் எங்களுக்கு வேண்டிய நன்மைகளை கொடுத்து எங்களை ஆசிர்வதிப்பீராக! ஏசுவின் நாமத்தினால் பிதாவே. ஆமென். ஆமென்.
ஆசிரியர்: போதகர் தேவசகாயம்