அறிக்கை
இன்றைய நாளில் தாவீதின் ஜெபத்தை தியானிக்கப் போகிறோம். சங்கீதம் முப்பத்தி இரண்டு ஐந்தில் நான் என் அக்கிரமத்தை மறைக்காமல் என் பாவத்தை உமக்கு அறிவித்தேன். என் நீடுதல்களை கர்த்தருக்கு அறிக்கையிடுவேன் என்றேன். தேவரீர் என் பாவத்தின் தோஷத்தை மன்னித்தருளும். தாவீது தெளிந்த மனதோடுகூட ஆண்டவருடைய சமூகத்திலே ஜெபிக்கிறான். தன்னுடைய அக்கிரமத்தையும் பொல்லாத சிந்தனைகளையும் தீயக் காரியங்களையும் அவன் ஆண்டவருக்கு மறைக்காமல் அதை வெளிப்படையாக சொல்கிறான்.
தான் செய்த பாவங்கள் எல்லாவற்றையும் அவன் ஆண்டவருக்கு முன்பாக அறிக்கையிடுகிறான். வேதம் சொல்கிறது தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான். அவைகளை அறிக்கை செய்துவிட்டு விடுகிறவனோ இரக்கம் பெறுகிறான். நீதி செய்கிற ஆண்டவருக்கு முன்பாக தன்னுடைய குற்றங்களை அறிக்கையிட்டு மனஸ்தாபம்படுகிற மக்களுக்கு நீர் மன்னிக்கிறீர். அவருடைய அக்கிரமக்கிரியைகளில் இருந்து விடுதலை கொடுக்கிறீர்.
என் நீடுதல்களை ஒவ்வொன்றாக நான் எந்தெந்த காரியத்தில் எல்லாம் நான் ஆண்டவருடைய கட்டளைகளுக்கு கற்பனைகளுக்கு எதிராக செயல்பட்டு இருக்கிறேன் என்பதை அவன் நினைவுப்படுத்தி சொல்கிறான். ஒரு உத்தம இருதயம் நீதியுள்ள ஆண்டவருக்கு முன்பாக பரிசுத்தமுள்ள ஆண்டவருக்கு முன்பாக தன்னை மறைத்து கொள்ள விரும்பவில்லை. அவற்றை ஒவ்வொன்றாக அறிக்கையிடுகிறான், சொல்கிறான். நாமும் அப்படியே செய்வோம் என்று சொன்னால் மனதுருக்கம் உள்ள ஆண்டவர் நம்முடைய பாவத்தை மன்னிப்பார்.
நம்முடைய குற்றங்களை குறைகளை மன்னித்து நமக்கு இரக்கம் பாராட்டுவார். இந்த பாவ தோஷத்தை எனக்கு மன்னித்தீர் என்று சொல்லி சந்தோஷப்படுவார். அறிக்கையிடுகிறதினால் வருகிற ஒரு பெரிய சந்தோஷம் மனந்திரும்புகிற ஒரு பாவியின்நிமித்தம் பரலோகத்திலே மிகுந்த சந்தோஷமுண்டு. அந்த சந்தோஷம் மனந்திருந்துகிறவர்களுக்கும் பரலோகத்திலே மனந்திருந்துகிற மக்களை பார்க்கிறவர்களுக்கும் ஒரு பெரிய சந்தோஷம். ஆண்டவரே எங்களுக்கு அந்த சந்தோஷத்தை தாரும். பாவத்தினால் துக்கத்தோடும், வேதனையோடும் சஞ்சலத்தோடும் கூனிக்குறுகி அலைகிறதைவிட அறிக்கையிட்டு மனஸ்தாபப்பட்டு இரக்கத்தை பெற்று கொண்டு சந்தோஷப்படுவது எவ்வளவு சமாதானம், எவ்வளவு சந்தோஷம் இந்த சந்தோஷத்தை எங்களுக்கு தாரும்.
ஆண்டவரே! உமக்கு முன்பாக எங்களை தாழ்த்தும் ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் நீர் மன்னிப்பைக் கட்டளையிடுவீராக. பாவத்தின் தோஷங்கள், பாவக் கிரியைகள், அக்கினி சாபங்கள், அதனால் வரக்கூடிய தண்டனைகள் எல்லாவற்றில் இருந்தும் விடுதலைக் கொடுத்து அவர்களை மகிழப்பண்ணுவீர்களாக. துக்கத்தை சஞ்சலத்தை எடுத்து போடுவீராக. சமாதானத்தை கொடுத்து உம்முடைய பிள்ளைகளை தைரியப்படுத்துவீர்களாக. நீர் உம்முடைய பிள்ளைகளுக்கு போதுமானவராய் இருப்பீராக. இரக்கமுள்ள ஆண்டவரே! உம்மை நோக்கி ஜெபிக்கிற உம்முடைய பிள்ளைகள் ஒவ்வொருவருக்கும் உதவி செய்யுங்கள். உள்ளதை உள்ளதென்றும் இல்லதை இல்லையென்றும் என்று சொல்கிற தம்முடைய பிள்ளைகளுக்கு நீர் செவிக்கொடுத்து அவர்களை மன்னித்து ஆசிர்வதித்து சந்தோஷப்படுத்தும், சமாதானத்தின் தேவன் தம்முடைய பிள்ளைகளுக்கு போதுமானவராய் இருப்பாராக. ஏசுவின் மூலம் ஜெபிக்கிறோம் நல்ல பிதாவே. ஆமென். ஆமென்.
ஆசிரியர்: போதகர் தேவசகாயம்