உணவில் சோடியம் அதிகமாக உட்கொள்ளல் மற்றும் உயர் இரத்த அழுத்தத்துடன் அதன் தொடர்பு  யாது?

உயர் இரத்த அழுத்தத்தின் பரவல் மற்றும் உணவில் சோடியம் அதிகமாக உட்கொள்வதை அடையாளம் காண மலேசியாவின் சிலாங்கூரில் மலாய் மக்களிடையே ஆய்வு நடத்தப்பட்டது.

கிளாங் பள்ளத்தாக்கில் (நகர்ப்புறம்) உள்ள வீடுகளில் இருந்து 2013 முதல் 2015 வரை தரவுகள் சேகரிக்கப்பட்டது. சிலாங்கூரில் (கிராமப்புறப் பகுதி) மத்திய நில மேம்பாட்டு ஆணையத்தின் (FELDA-Federal Land Development Authority) பல குடியேற்றங்களில் இருந்தும் தரவுகள் சேகரிக்கப்பட்டது. இரண்டு வகையான கேள்வித்தாள்கள் தயாரிக்கப்பட்டது. ஒன்று சமூகம் சார்ந்த வினாத்தாள் மற்றும் மற்றொன்று உணவு சார்ந்த கேள்வித்தாள் ஆகும்.

இந்த ஆய்வில் மொத்தம் 3,453 பெரியவர்கள் பங்கேற்றனர். பதிலளித்தவர்களின் சராசரி வயது 50.9 (± 10.23) ஆண்டுகள் ஆகும். உயர் இரத்த அழுத்தத்தின் பாதிப்பு 23.3% ஆகும். சராசரி சோடியம் நுகர்வு 3.6 (± 6.63) கிராம்/நாள், 1.6 கிராம் தற்போதைய WHO பரிந்துரையை விட அதிகம். 60 வயதிற்குட்பட்ட ஆண்களில், குறைந்த கல்வி நிலை கொண்ட கிராமப்புற மக்களிடையே, இல்லத்தரசிகள் மற்றும் அதிக அளவு சோடியம் உணவு உட்கொள்ளல் கொண்டவர்கள் ஆகியோரிடையே உயர் இரத்த அழுத்தம் அதிகமாக இருந்தது. பகுப்பாய்வில் வயது, கிராமம், பாலினம் மற்றும் திருமண நிலையை ஆகியவற்றை கணக்கெடுப்பில் வைத்து பார்க்கும்பொழுது, இவை உயர் இரத்த அழுத்த நிகழ்வுகளை பாதிக்கும் என்று காட்டப்பட்டுள்ளது.

சிலாங்கூரில் மலாய் மக்களின் கணிசமான விகிதம் WHO பரிந்துரையை விட உட்கொள்ளல் அதிகமாக உள்ளபோது உயர் சோடியத்துடன் உயர் இரத்த அழுத்தமாக இருந்தது. உயர் இரத்த அழுத்தம் கிராமப்புற இடம் மற்றும் அதிக சோடியம் உட்கொள்ளல் ஆகியவற்றுடன் தொடர்புடையது. நீடித்த மற்றும் செலவு குறைந்த மக்கள் தொகை அடிப்படையிலான சுகாதார மேம்பாடு மற்றும் பலதரப்பட்ட அணுகுமுறையைப் பயன்படுத்தி தடுப்பு தலையீடுகள் போதுமான சமூக சோடியம் உட்கொள்ளலை உறுதி செய்ய வேண்டும்.

References:

  • Isa, Z. M., Ibrahim, N., Ismail, N. H., Jaafar, M. H., Tamil, A. M., & Yusof, K. H. (2021). Dietary sodium intake and its association with hypertension: A cross-sectional study in Selangor, Malaysia. JPMA. The Journal of the Pakistan Medical Association71(2), S68-S73.
  • Appel, L. J., Espeland, M. A., Easter, L., Wilson, A. C., Folmar, S., & Lacy, C. R. (2001). Effects of reduced sodium intake on hypertension control in older individuals: results from the Trial of Nonpharmacologic Interventions in the Elderly (TONE). Archives of internal medicine161(5), 685-693.
  • Isaacson, L. C., Modlin, M., & Jackson, W. P. U. (1963). Sodium intake and hypertension. Lancet1.
  • Laatikainen, T., Nissinen, A., Kastarinen, M., Jula, A., & Tuomilehto, J. (2016). Blood pressure, sodium intake, and hypertension control: lessons from the North Karelia Project. Global heart11(2), 191-199.
  • Dahl, L. K., & Love, R. A. (1954). Evidence for relationship between sodium (chloride) intake and human essential hypertension. AMA archives of internal medicine94(4), 525-531.

Leave a Reply

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com