கனடாவில் உள்ள இலங்கை தமிழ் குடும்பங்களின் நிலை யாது?
குடும்ப அமைப்புகள் உறவுகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படலாம். அதை அறிந்துகொள்ள உதவும் விதமாக Vappu Tyyskä, et. al., (2021) அவர்களின் ஆய்வு கட்டுரை இளம் பருவத்து-பெற்றோர் உறவுகளை அணுகு விவரித்துக்காட்டுகிறது. அவற்றின் அடிப்படையில் தலைமுறைகளுக்கிடையேயான உறவுகள் மூன்று பகுதிகளாகக் கையாளுகின்றன.(அ) செயல்பாட்டு ஒற்றுமை, (ஆ) ஒருமித்த ஒற்றுமை மற்றும் (இ) ஒழுங்குமுறை ஒற்றுமை. கனடாவின் டொராண்டோவில் உள்ள இலங்கைத் தமிழ் சமூகத்தில் 20 பதின்ம வயதினருடன் நேர்காணல்கள் நடைபெற்றன. அவற்றில் பெற்றோரிடம் குழந்தையுடனான உறவுப் பற்றி பேசப்பட்டது. பதின்ம வயதினர் தங்களின் அனுபவத்தை மோதல்கள் இருந்தபோதிலும், பரஸ்பர உறவுகளாக இருப்பதை விவரிப்பதாக ஆய்வு காட்டுகிறது.
தலைமுறைகளுக்கிடையேயான குறிப்பிடத்தக்க பகுதிகள் (a) கல்வி, (b) கலாச்சார அடிப்படை மதிப்புகள் மற்றும் (c) சுதந்திரத்தின் அளவுகள் உள்ளிட்டவைகளுக்கு முக்கிய இடம் இருந்தன. பாலின வேறுபாடுகள் தொடர்பாக முக்கியமான பங்கு வகிக்கின்றது. மகன்கள் பெறுவதை விட மகள்களுக்கு பெற்றோர்கள் குறைவாக சுதந்திரம் வழங்கப்படுவதாக ஆய்வு காட்டுகிறது. கூட்டு வேறுபாடு என்பது ஒருவரின் வயது மற்றும் பெற்றோருடன் மதிப்புகள் மற்றும் எதிர்பார்ப்புகளை சீரமைத்தல் ஆகியவற்றிலிருந்து தோன்றும். புலம்பெயர்ந்த நபர் வயதானவர் எனில், பொதுவான மதிப்புகளைக் கொண்டிருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று ஆய்வு முடிவுகள் கூறுகிறது.
References:
- Tyyskä, V. (2015). Sri Lankan Tamil Families in Canada: Problems, Resiliency, and Intergenerational Solidarity. Family Science Review, 20(2), 47-64.
- Pandalangat, N., & Kanagaratnam, P. (2021). Refugee mental health framework: A systematic tool and approach that optimizes outcomes. Asian American Journal of Psychology, 12(3), 241.
- Hyman, I., Mason, R., Guruge, S., Berman, H., Kanagaratnam, P., & Manuel, L. (2011). Perceptions of factors contributing to intimate partner violence among Sri Lankan Tamil immigrant women in Canada. Health care for women international, 32(9), 779-794.
- Beiser, M., Goodwill, A. M., Albanese, P., McShane, K., & Kanthasamy, P. (2015). Predictors of the integration of Sri Lankan Tamil refugees in Canada: pre-migration adversity, mental health, personal attributes, and post-migration experience. International Journal of Migration, Health and Social Care.
- Amarasingam, A. (2008). Religion and ethnicity among Sri Lankan Tamil youth in Ontario. Canadian Ethnic Studies, 40(2), 149-169.