மருத்துவமனைகளில் தொற்று தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுத் திட்டங்களை அதிகரிப்பதற்கான சவால்கள் மற்றும் வாய்ப்புகள் யாவை?

தமிழ்நாட்டில் கிராமப்புறங்களில் உள்ள மூன்று பொது மாவட்ட மருத்துவமனைகளில் தொற்று தடுப்பு மற்றும் கட்டுப்பாடு (IPC-infection prevention and control) திட்டத்தை செயல்படுத்துவதில் உள்ள தடைகளை ஆராய்வதை நோக்கமாக கொண்டு ஆராய்ச்சியாளர்களால் ஆய்வு நடப்பட்டது.

இதற்காக தமிழகத்தில் இருந்து மூன்று,  இரண்டாம் நிலை பொது மாவட்ட மருத்துவமனைகளில் தலைமை மருத்துவ அதிகாரிகள் (CMO), மருத்துவர்கள் மற்றும் IPC செவிலியர்களுடன் புலனாய்வாளர்கள் நேர்காணல்(n = 17) நடத்தப்பட்டது.

நேர்காணல்களிலிருந்து ஆறு முக்கிய கருப்பொருள்கள் வெளிவந்தன. அவையாவன:

(1) திட்டம் தொடங்குவதற்கு முன்பு நடைமுறையில் இருந்த IPC நடைமுறைகள்;

(2) செயல்படுத்துவதற்கான தடைகள்;

(3) IPC திட்டத்தின் செயல்திறன் பற்றிய உணர்வுகள்;

(4) திட்டத்தின் எதிர்கால விரிவாக்கத்திற்கான பரிந்துரைகள்;

(5) சுகாதார துப்புரவு தொழிலாளர்களின் பங்கு,

(6) நீர், துப்புரவு மற்றும் சுகாதாரம் (WaSH-water, sanitation and hygiene) உள்கட்டமைப்பு.

பங்குதாரர்கள் மூன்று மருத்துவமனைகளில் IPC பற்றிய அறிவு, தொற்று கட்டுப்பாடு தொடர்பான நடத்தை மற்றும் ஒட்டுமொத்த சுகாதாரத் தரத்தில் முன்னேற்றங்களைக் குறிப்பிட்டனர். IPCக்கு கீழ் மட்டுமே வேலை செய்யக்கூடிய ஒரு பணியாளர் செவிலியர் மற்றும் அனைத்து ஊழியர்களின் தொடர்ச்சியான பயிற்சியின் அவசியத்தையும் குறிப்பிட்டனர்.

பயனுள்ள IPC திட்டத்தைப் பெறுவதற்காக உயர் செயல்பாட்டு உள்கட்டமைப்பு மற்றும் மருத்துவமனை சுகாதாரப் பணியாளர்களுக்கான பயிற்சியின் முக்கியத்துவத்தை இந்த ஆய்வின் முடிவுகள் எடுத்துக்காட்டுகின்றன. இந்த IPC திட்டத்தின் அளவீட்டுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டாலும், இந்த ஆய்வில் கோடிட்டுக் காட்டப்பட்ட செயல்படுத்துவதற்கான தடைகள் பரிசீலிக்கப்பட வேண்டும். மிகவும் பயனுள்ள IPC திட்டத்தை அடைய, பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பரிந்துரைக்கப்படுகிறது:

(1) ஒவ்வொரு மாவட்ட மருத்துவமனையிலும் IPC நடவடிக்கைகளைச் செயல்படுத்த குறைந்தபட்சம் ஒரு முழுநேர செவிலியர் இருக்க வேண்டும்.

(2) IPC க்கான மாநில மற்றும் தேசிய கொள்கைகள் ஒத்திசைக்கப்படுவதை உறுதிசெய்து,

(3) IPC நடவடிக்கைகளுக்கு போதுமான மற்றும் நிலையான நிதியை வழங்குதல்.

References:

  • Guhan, M., Kumar, M., Butzin-Dozier, Z., & Graham, J. (2021). Challenges and opportunities for scaling up infection prevention and control programmes in rural district hospitals of Tamil Nadu, India. International Journal of Infection Control17(1).
  • Jeyapaul, S., Oommen, A. M., Cherian, A. G., Marcus, T. A., Malini, T., Prasad, J. H., & George, K. (2021). Feasibility, uptake and real-life challenges of a rural cervical and breast cancer screening program in Vellore, Tamil Nadu, South India. Indian Journal of Cancer58(3), 417.
  • Siddharth, A. R., Shanthi, E., & Jayashree, K. (2021). Assessment of Knowledge, Attitude and Practice regarding HPV Vaccination and Cervical cancer among Medical students of a Tertiary care hospital in Chennai, Tamil Nadu. Annals of the Romanian Society for Cell Biology, 13714-13725.
  • Murugan, K., Savitha, T., & Vasanthi, S. (2012). Retrospective study of antibiotic resistance among uropathogens from rural teaching hospital, Tamilnadu, India. Asian pacific Journal of tropical Disease2(5), 375-380.
  • Bijoy, G., & Anjum, U. (2020). A Descriptive Study to Assess the Knowledge and Practice on Personal Protective Equipment among Student Nurses in a Selected College of Nursing, New Delhi. International Journal of Nursing & Midwifery Research (E-ISSN: 2455-9318)7(4), 8-12.

Leave a Reply

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com