வைட்டமின் D குறைபாட்டுடன் முழங்கால் கீல்வாதம்(KOA)
ஆரோக்கியமான நபர்களுடன் ஒப்பிடும்போது மூட்டு மாற்று அறுவை சிகிச்சைக்கு திட்டமிடப்பட்டுள்ள முழங்கால் கீல்வாதம் (KOA- Knee Osteoarthritis) நோயாளிகளின் வைட்டமின் D நிலையை மதிப்பிடுவதே Regupathy Annamalai, et. al., (2022) அவர்களின் ஆய்வின் நோக்கமாகும். சென்னை மாநகரம் மற்றும் தமிழகத்தின் கிராமப்புற பகுதிகளில் போதனா மருத்துவமனை நடத்திய மருத்துவ முகாம்களின் போது ஆய்விற்கு தேவையான தரவுகள் சேகரிக்கப்பட்டன. முழங்கால் கீல்வாத நோயால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு 10 பேரில் 5 பேருக்கும் சீரம் வைட்டமின் D அளவு <10ng/ml உடன் வைட்டமின் D குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது. வயது, பாலினம் மற்றும் உடல் நிறை குறியீட்டெண் (BMI-Body Mass Index) போன்ற தொடர்புடைய காரணிகளுடன் வைட்டமின் D -யின் சீரம் அளவுகளை தொடர்புபடுத்தவும் ஆய்வு முயற்சித்தது. பாலினத்துடன் குறிப்பிடத்தக்க தொடர்பு காணப்பட்டது, பெண் நோயாளிகள் குறைந்த சீரம் வைட்டமின் டி அளவைக் கொண்டுள்ளனர். அதிக ஆபத்துள்ள நபர்களைக் கண்டறிதல் மற்றும் KOA நோயாளிகளுக்கு குறைந்த அளவிலான சீரம் 25-OH வைட்டமின் D போன்ற ஆபத்து காரணிகளைத் திருத்துவது நன்மை பயக்கும் மற்றும் எலும்பு முறிவைக் குறைக்கும். இதனால் வயதானவர்களுக்கு ஆபத்து உள்ளது என்பவை ஆய்வின் முடிவுகளாகும்.
References:
- Annamalai, R. (2022). Association of Vitamin D Deficiency with Knee Osteoarthritis (KOA) in Population of Tamil Nadu, India. Issues and Developments in Medicine and Medical Research Vol. 5, 155-162.
- Heidari, B., & Babaei, M. (2019). Therapeutic and preventive potential of vitamin D supplementation in knee osteoarthritis. ACR open rheumatology, 1(5), 318-326.
- Tripathy, S. K., Gantaguru, A., Nanda, S. N., Velagada, S., Srinivasan, A., & Mangaraj, M. (2020). Association of vitamin D and knee osteoarthritis in younger individuals. World journal of orthopedics, 11(10), 418.
- Heidari, B., Javadian, Y., Babaei, M., & Yousef-Ghahari, B. (2015). Restorative effect of vitamin D deficiency on knee pain and quadriceps muscle strength in knee osteoarthritis. Acta Medica Iranica, 466-470.
- Ramasamy, B., Magne, F., Tripathy, S. K., Venugopal, G., Mukherjee, D., & Balamurugan, R. (2021). Association of Gut Microbiome and Vitamin D Deficiency in Knee Osteoarthritis Patients: A Pilot Study. Nutrients, 13(4), 1272.