திருக்குறள் | அதிகாரம் 48

பகுதி II. பொருட்பால்

2.1 அரசியல்

2.1.10 வலியறிதல்

 

குறள் 471:

வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்

துணைவலியும் தூக்கிச் செயல்.

 

பொருள்:

செயலின் வலிமையை, தனது சொந்த பலத்தை, எதிரி, மற்றும் கூட்டாளிகளின் வலிமை எடைபோட்ட பின்னர் செயலில் இறங்க வேண்டும்.

 

குறள் 472:

ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச்

செல்வார்க்குச் செல்லாதது இல்.

 

பொருள்:

தங்கள் சொந்த திறனைப் பற்றி அறிந்து ஆராய்ந்து அச்செயலை செய்ய துணிபவர்களுக்கு தோல்வி என்று எதுவுமில்லை.

 

குறள் 473:

உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி

இடைக்கண் முரிந்தார் பலர்.

 

பொருள்:

தங்கள் பலத்தை அறியாமல், பலர் ஆர்வத்துடன், பெருமையுடன் போருக்குப் புறப்பட்டு அதன் நடுவே சிதைந்து விடுவார்கள்.

 

குறள் 474:

அமைந்தாங்கு ஒழுகான் அளவறியான் தன்னை

வியந்தான் விரைந்து கெடும்.

 

பொருள்:

எவனொருவன் தன் சொந்த வளங்களைப் பற்றி அறியாமல் தன் மகத்துவத்தைப் புகழ்ந்து பேசுகிறானோ அவன் விரைவில் அழிந்து விடுவான்.

 

குறள் 475:

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்

சால மிகுத்துப் பெயின்.

 

பொருள்:

மயில்களின் இறகுகள் மட்டுமே ஏற்றப்பட்ட பாண்டியின் அச்சு மரத்தில் அதிக சுமை இருந்தால் அது உடைந்து விடும்.

 

குறள் 476:

நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந்து ஊக்கின்

உயிர்க்கிறுதி யாகி விடும்.

 

பொருள்:

மரக்கிளையின் நுனி வரை ஏறி வந்தவன் மேலும் மேலே ஏற முயற்சித்தால் அவரது உயிருக்கு ஆபத்தாக இருக்கும்.

 

குறள் 477:

ஆற்றின் அளவறிந்து ஈக அதுபொருள்

போற்றி வழங்கும் நெறி.

 

பொருள்:

ஒரு மனிதன் தனது திறனை கொடுக்கும் அளவை அறிந்து, அதற்கேற்ப கொடுக்க வேண்டும்; அப்படி கொடுப்பது அவரது சொத்துக்களை பாதுகாக்க வழி ஆகும்.

 

குறள் 478:

ஆகாறு அளவிட்டி தாயினும் கேடில்லை

போகாறு அகலாக் கடை.

 

பொருள்:

ஒருவருரின் வருமானம் சிறியதாக இருந்தாலும், அவரது செலவு பெரிதாக இல்லாவிட்டால் அது அவருக்கு அழிவை ஏற்படுத்தாது.

 

குறள் 479:

அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல

இல்லாகித் தோன்றாக் கெடும்.

 

பொருள்:

தனது சொத்தின் அளவு தெரியாமல் வாழ்பவனின் செழுமையும் ஒருநாள் அழிந்து போகும்

 

குறள் 480:

உளவரை தூக்காத ஒப்புர வாண்மை

வளவரை வல்லைக் கெடும்.

 

பொருள்:

விவேகத்துடன் எடைபோடாமால், சொத்தை செலவிட்டால், அவருடைய செல்வத்தின் அளவு விரைவில் அழிந்துவிடும்.

Leave a Reply

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com