கோவிட்-19 நோயாளிகளிடையே நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் பயன்பாடு

நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் தடை(AMR- Antimicrobial resistance) என்பது உலகளாவிய சுகாதாரப் பிரச்சினையாகும், இது நோயுற்ற தன்மை மற்றும் இறப்பு விகிதத்தில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளது. குறிப்பாக நோய் எதிர்ப்பு குறைபாடுள்ள நோயாளிகளிடையே இதன் ஆற்றல் வீரியமிக்கதாக உள்ளது. பல பாக்டீரியா நோய்த்தொற்றுகளின் சிகிச்சைக்கு இது ஒரு தீவிர அச்சுறுத்தலாகவும் மாறுகிறது. மருத்துவமனைகள் மற்றும் உள்ளூர் கிளினிக்குகளில் நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் பரவல் மற்றும் பொருத்தமற்ற பயன்பாடு AMR-இன் முக்கிய காரணமாகும். இந்தச் சூழ்நிலையில், அறுவைச்சிகிச்சை மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் (SICUs- surgical intensive care units) அனுமதிக்கப்பட்ட கோவிட்-19 நோயாளிகளின் பாக்டீரியா தொற்று மற்றும் AMR விகிதங்களின் பரவலைக் கண்டறிய 2 ஆகஸ்ட் 2021 முதல் 31 அக்டோபர் 2021 வரை பாகிஸ்தானின் லாகூரில் உள்ள மூன்றாம் நிலை பராமரிப்பு மருத்துவமனையில் Basit Zeshan, et. al., (2022) அவர்களால் ஆய்வு நடத்தப்பட்டது. நோயாளிகளிடமிருந்து மருத்துவ மாதிரிகள் சேகரிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து கிர்பி பாயர் வட்டு பரவல் முறை மற்றும் குறைந்தபட்ச தடுப்பு செறிவைப் (MIC-minimum inhibitory concentration) பயன்படுத்தி நுண்ணுயிர் எதிர்ப்பி உணர்திறன் சோதனை (AST-Antibiotic Susceptibility Testing) செய்யப்பட்டது. நோயாளியின் மருத்துவ பதிவேட்டில் இருந்து மற்ற கூட்டு நோய்களின் தரவுகளும் சேகரிக்கப்பட்டன. தற்போதைய ஆய்வு மிகவும் பொதுவான நோய்க்கிருமிகள் ஈ.கோலை (32%) மற்றும் க்ளெப்சில்லா நிமோனியா (17%) என்று காட்டுகிறது. பெரும்பாலான ஈ.கோலை சிப்ரோஃப்ளோக்சசின் (16.8%) மற்றும் ஆம்பிசிலின் (19.8%) ஆகியவற்றை எதிர்க்கும். க்ளெப்சில்லா நிமோனியா ஆம்பிசிலின் (13.3%) மற்றும் அமோக்ஸிசிலின் (12.0%) ஆகியவை அதிக எதிர்ப்புத் திறன் கொண்டது. நாள்பட்ட சிறுநீரக நோய் (CKD-Chronic Kidney Disease) மற்றும் சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள் (UTIs-Urinary Tract Infections) ஆகியவை நோயாளிகடையே பொதுவாக  காணப்பட்ட கூட்டுநோய்களாக ஆய்வில் அறியப்பட்டது. சுமார் 17 வகையான நுண்ணுயிர் எதிர்ப்பி, கார்பபெனெம், ஃப்ளோரோக்வினொலோன்கள், அமினோகிளைகோசைட் மற்றும் குயினோலோன்கள், ஆகியவை ICU நோயாளிகளில் அதிகமாகக் காணப்படுகின்றன. தற்போதைய ஆய்வு, SICU-களில் COVID-19 நோயாளிகள் உட்கொள்ளும் நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் மருத்துவத் தாக்கம் மற்றும் AMR விகிதங்கள், பல்வேறு நோய்த்தொற்றுகளுடன் மதிப்புமிக்க தரவுகளை வழங்குகிறது.

References:

  • Zeshan, B., Karobari, M. I., Afzal, N., Siddiq, A., Basha, S., Basheer, S. N., … & Noorani, T. Y. (2022). The Usage of Antibiotics by COVID-19 Patients with Comorbidities: The Risk of Increased Antimicrobial Resistance. Antibiotics11(1), 35.
  • Chedid, M., Waked, R., Haddad, E., Chetata, N., Saliba, G., & Choucair, J. (2021). Antibiotics in treatment of COVID-19 complications: a review of frequency, indications, and efficacy. Journal of infection and public health14(5), 570-576.
  • Goncalves Mendes Neto, A., Lo, K. B., Wattoo, A., Salacup, G., Pelayo, J., DeJoy III, R., … & Azmaiparashvili, Z. (2021). Bacterial infections and patterns of antibiotic use in patients with COVID‐Journal of medical virology93(3), 1489-1495.
  • Mustafa, L., Tolaj, I., Baftiu, N., & Fejza, H. (2021). Use of antibiotics in COVID-19 ICU patients. The Journal of Infection in Developing Countries15(04), 501-505.
  • Chong, W. H., Saha, B. K., Ramani, A., & Chopra, A. (2021). State-of-the-art review of secondary pulmonary infections in patients with COVID-19 pneumonia. Infection49(4), 591-605.

Leave a Reply

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com