எனது முதல் வலை இடுகை!

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

அகர முதல எழுத்தெல்லாம்:

மொழிகளின் எழுத்துக்கள் ‘அகர’ எழுத்தை முதலில் வைத்துத் தொடங்குகின்றன. ‘அகரம்’ அனைத்து எழுத்துக்களுக்கும் முதன்மையானது, முன்னோடியானது, மற்றும் அடிப்படையானது ஆகும். ‘எழுத்தெல்லாம்’ என்பது அனைத்து உலக மொழிகளின் எழுத்துக்களிலும் என பொருள்படும்.

ஆதிபகவன்:

‘ஆதிபகவன்’ என்ற சொல் தொன்மையான, பண்டைய, வரலாற்றுக்கு முந்தைய கடவுளைக் குறிக்கிறது. திருவள்ளுவர் எந்தச் சமயத்தையும் மனதில் கொண்டு இந்தக் குறளைப் எழுதவில்லை என்பது தமிழ் அறிஞர்களின் கருத்து. ஆகவே ‘ஆதிபகவன்’ என்ற சொல் இந்த ‘அண்டசராசரத்திற்கு மூலகாரணர்’ என்னும் பொருளிலேயே படைக்கப்பட்டுள்ளது.

முதற்றே:

‘முதற்றே’ என்ற சொல் ‘முதல்’ என்ற சொல்லை அடிப்படையாகக் கொண்டு, ‘தொன்மை’, ‘பழமை’, ‘முன்னோடி’, ‘முந்தைய’, ‘பண்டைய’, மற்றும் ‘புராதன’ போன்ற சொற்களின் பொருளை குறிக்கும்.

உலகு: 

‘உலகு’ என்ற சொல் நாம் உயிர் வாழும் உலகம் என்ற பொருளும், இந்த அண்டசராசரத்தில் வாழும் அனைத்து உயிர்கள் என்ற உயிர்ப்பொருளும் உண்டு.

post

Leave a Reply

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com