இளங்கலைப் பட்டதாரிகளின் புத்தகம் வாசிக்கும் பழக்கம்

வாசிப்பு ஒரு மனிதனை பரிபூரணமாக்குவதுமட்டுமின்றி, புத்திகூர்மையாகவும் தெளிந்த சிந்தனைமனப்பான்மைக்கும் தூண்டுகிறது. இது பல்கலைக்கழக மாணவர்களுக்கு மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். மாணவர்கள் வாசிப்புப் பழக்கத்தை வளர்ப்பதில் பல்வேறு தடைகளை எதிர்கொள்கின்றனர். எனவே, மாணவர்களின் வாசிப்புப் பழக்கத்தை மதிப்பிடுதல், மாற்றங்களைக் கண்டறிதல் மற்றும் ஆன்லைன் கற்றல் கருவிகள் மூலம் அவர்கள் கல்வியைத் தொடரும்போது ஏற்படும் காரணிகள் ஆகியவற்றை பொறுத்து இலங்கையின் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய ஆய்வு துறையின் இரண்டாம் ஆண்டு மாணவர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வுக்காக, ஆராய்ச்சி முறைகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட, வினாத்தாள்களை கூகுள் படிவங்கள் மூலம் 174 மாணவர்களில் 121 பேரிடம் வழங்கப்பட்டு தரவுகள் சேகரிக்கப்பட்டன. இரண்டாம் நிலை தரவு தலைப்பு தொடர்பான ஆய்வுக் கட்டுரைகள், இதழ்கள் மற்றும் இணையக் கட்டுரைகளும் பயன்படுத்தப்பட்டன. முடிவில் ஆய்வில், மாணவர்களின் வாசிப்புப் பழக்கம், நேர அளவு ஆரோக்கியமாக இருப்பது கண்டறியப்பட்டது. வீட்டிலிருந்து ஆன்லைன் மூலம் கல்வி மற்றும் நூலகம் இல்லாமை போன்ற காரணிகள் மின்னணு சாதனங்களில் வாசிப்பு, வீட்டு வேலைகள், சமூக ஊடகங்கள், சோம்பல், பணிச்சுமை மற்றும் தூக்கம் அதிகரிப்பு ஆகியவை அவர்களின் வாசிப்பு வீழ்ச்சியில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

பெரும்பாலோர் தங்கள் ஸ்மார்ட்போன்களைப்  படிப்பதற்காக பயன்படுத்துகின்றனர்.  சாஃப்ட் காப்பியை படிக்கவும், மின்னணு சாதனங்கள் மூலம் படிக்கும் போது பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கின்றனர். நீண்ட நேரம் படிக்க முடியாமல் இருப்பது, தலைவலி  போன்ற உணர்வின்மை அதிகமாக காணப்படுகிறது. மேலும், கை வலி, சிறிய எழுத்துக்களை படிக்க இயலாமை, அதிக நேரத்தை வீணடித்து எளிதில் மறந்து விடுதல் என்பன இந்த ஆய்வின் முடிவுகளாகும்.  பல்வேறு காரணங்களுக்காக மாணவர்களின் வாசிப்புப் பழக்கத்தில் வீடு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியது. இருப்பினும், பல்கலைக்கழகத்தில் நுழைந்த பிறகு அவர்களின் வாசிப்புப் பழக்கத்தில் நேர்மறையான மாற்றம் ஏற்பட்டுள்ளது. எந்தச் சூழ்நிலையிலும் தொடர்ந்து படிக்க அவர்களை ஊக்குவிக்கிறது. அதே நேரத்தில் சவால்களை சமாளிப்பதற்கான வழிகாட்டுதல் வழங்கப்படும் நேரம், அவர்கள் வளர்ச்சியை எதிர்கொள்கின்றனர்.  அவர்களின் வாசிப்புப் பழக்கத்தில் மேலும் நேர்மறையான முன்னேற்றங்களை எதிர்பார்க்கலாம்.

References:

  • Abdullah, M. M. A., Farhan, M. Y. M., & Mazahir, S. M. M. (2021). Undergraduates’ Reading Habit: A Study Based on South Eastern University of Sri Lanka.
  • Keller, A. (2012). In print or on screen? Investigating the reading habits of undergraduate students using photo-diaries and photo-interviews. Libri62(1), 1-18.
  • Sehar, N., & Ghaffar, A. (2018). Reading Habits Among Undergraduate Students of NED University of Engineering and Technology, Karachi, Pakistan: A Pilot Study.
  • Akabuike, I. G., & Asika, I. E. (2012). Reading habits of undergraduates and their academic performances: Issues and perspectives. African Research Review6(2), 246-257.
  • Huang, S., Capps, M., Blacklock, J., & Garza, M. (2014). Reading habits of college students in the United States. Reading Psychology35(5), 437-467.

Leave a Reply

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com