பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (Scheduled Tribes) எதிர்கொள்ளும் தடைகள்

பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் சமூக நிறுவனங்களை அணுகுவதற்கும் அவர்களின் சேவைகளைப் பெறுவதற்கும் எதிர்கொள்ளும் தடைகளைக் கண்டறியும் பொருட்டு Prasanth A, et. al., (2022) அவர்களின் ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்விற்காக Ex post facto ஆராய்ச்சி வடிவமைப்பு பயன்படுத்தப்பட்டது. சேலம், திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் முறையே பெத்தநாயக்கன்பாளையம், ஜவ்வாது மலை, கல்ராயன் மலைத் தொகுதிகளில் ஆய்வு நடத்தப்பட்டது. சமூக நிறுவனங்கள் தொடர்பான கட்டுப்பாடுகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டு, ஆய்வுப் பகுதியில் உள்ள பழங்குடியினர் மத்தியில் ஒரு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆன்மீகத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் சிரமம், குடும்பத்தின் கடன்சுமை உள்ளிட்ட காரணிகள் குழந்தைகளின் பள்ளிப் படிப்பை தடுக்கிறது. பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் இருந்தாலும் மோசமான விழிப்புணர்வு நிலையின் காரணமாக  கடன் சுமை அதிகரிப்பு, மதம், கல்வி, பஞ்சாயத்து மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றில் பழங்குடியினருக்கு முக்கிய தடைகள் இருக்கின்றன. பழங்குடியின கிராமங்களுக்கு அருகிலுள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது, பழங்குடியினரிடையே நிதி கல்வியறிவை அதிகரிப்பது மற்றும் பழங்குடியினருக்கு அவர்களுக்கு கிடைக்கக்கூடிய பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற பிற ஆலோசனைகள் அவர்களின் எதிர்கால வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும் என ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

References:

  • Prasanth, A., & Balasubramaniam, P. An Analysis on Constraints Faced by Scheduled Tribes in Access to Social Institutions in Eastern Ghats of Tamil Nadu.
  • Kamat, S. (2008). Education and social equity with a special focus on scheduled castes and scheduled tribes in elementary education.
  • Rupavath, R. (2016). Access To Education: Education Status of Scheduled Tribes in Andhra Praesh: Attainments and Challenges. Status of Scheduled Tribes in Telangana State, 61.
  • Brahmanandam, T., & Babu, T. B. (2018). Educational status among the scheduled tribes: Issues and challenges.
  • Swarnalatha, M., & Vijaya, B. Status of Scheduled Tribes in Telangana State-Problems and Perspectives. Status of Scheduled Tribes in Telangana State, 125.

Leave a Reply

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com